Thursday 31 December 2009 | By: Menaga Sathia

கல்கண்டு சாதம்

தே.பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
பால் - 1கப்
டைமண்ட் கல்கண்டு - 1 கப்
முந்திரி திராட்சை - விருப்பத்துக்கு
ஏலக்காய்த்தூள் - 1/4டீஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*அரிசி+பாசிப்பருப்பை குக்கரில் 1கப் பால்+1 1/4 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.

*கல்கண்டை மிக்ஸியில் பொடிக்கவும்.(நீரில் கரைய நேரமாகும்).

*கல்கண்டு பவுடரை சிறிது நீர் விட்டு பாகுபதம் வரை காய்ச்சி வெந்த அரிசி பருப்பில் சேர்க்கவும்.

*நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை+ஏலக்காய்த்தூள்+மீதமிருக்கும் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

*சுவையான கல்கண்டு சாதம் ரெடி.அம்மனுக்கு பிடித்த நைவேத்தியம் இது.
Tuesday 29 December 2009 | By: Menaga Sathia

கொள்ளு - ஒட்ஸ் கொழுக்கட்டை

தே.பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
ஒட்ஸ் - 1 + 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு +எண்ணெய்= தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*கொள்ளை 4 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய்+உப்பு சேர்த்து கொரகொரப்பாக நீர் சேர்க்காமல் அரைக்கவும்.

*1 கப் ஒட்ஸை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்துப் பொடிக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ஒட்ஸில் சேர்க்கவும்.அதனுடன் அரைத்த கொள்ளு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*அதனை சிறு உருண்டைகளாக பிடித்து மீதமிருக்கும் 1/2 கப் ஒட்ஸில் பிரட்டி எடுத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*சுவையான கொழுக்கட்டை ரெடி.இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

பி.கு:

விருப்பப்பட்டால் ஒழுக்கட்டையில் தேங்காய்ப்பல் சேர்க்கலாம்.
Sunday 27 December 2009 | By: Menaga Sathia

பார்லி - ரவை இனிப்பு பணியாரம்

தே.பொருட்கள்:

பார்லி குருணை -1/2 கப்
ரவை -1/2 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1 சிட்டிகை
நெய் - தேவைக்கு


செய்முறை :

* பார்லியை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.பின் அதனுடன் ரவை சேர்த்து மேலும் சிறிது நேரம் ஊறவைக்கவும்.

*வெல்லத்தை கரைத்து மண்ணில்லாமல் வடிகட்டி பார்லியில் கலக்கவும்.அதனுடன் சுக்குத்தூள்+ஏலக்காய்த்தூள்+மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கெட்டியாக கலக்கவும்.
* நெய் விட்டு பணியாரகுழியில் மாவை ஊற்றி பணியாரமாக சுட்டெடுக்கவும்.

கவனிக்க:

பார்லியை 1 கப் நீர் ஊற்றி ஊறவைத்த பின் ரவை போடும் போது சிறிது நீர் விட்டு ஊறவைக்கவும்.அப்போழுது தான் கரைத்த வெல்லம் சேர்க்கும் போது மாவு கெட்டியான பதமா இருக்கும்.
Thursday 24 December 2009 | By: Menaga Sathia

பீர்க்கங்காய்த் தோல் துவையல்

தே.பொருட்கள்:

பொடியாக வெட்டிய பீர்க்கங்காய்த் தோல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 நெல்லிக்காயளவு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கொள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு


செய்முறை :

*எள்+உளுத்தம்பருப்பு+கொள்ளு வெரும் கடாயில் வறுக்கவும்.

*எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைக்கவும்.அதே எண்ணெயில் காய்ந்த மிளகாய்+தேங்காய்த்துறுவல் வதக்கவும்.

*சிறிது எண்ணெய் விட்டு பீர்க்கங்காய்த்தோலை வதக்கவும்.

*ஆறியதும் புளி+உப்பு சேர்த்து அனைத்தையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுக்கவும்.
Tuesday 22 December 2009 | By: Menaga Sathia

கீரை ராய்த்தா

தே.பொருட்கள்:

ஏதாவது ஒரு கீரை - 1 கப்
வெங்காயம் - 1சிறியது
தயிர் - 150 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபில்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2

செய்முறை :
*வெங்காயம்+கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் கீரை+உப்பு சேர்த்து மூடி வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

*கீரை நன்கு வதங்கியதும் ஆறவைத்து தயிரில் கலக்கி பறிமாறவும்.

பி.கு:
கீரை விடும் நீர் வற்றும் வரை வதக்கவும்.விருப்பப்பட்டால் தயிரில் தேங்காய்+சீரகம்+பச்சை மிளகாய் அரைத்து சேர்க்கலாம்.நான் பசலை கீரையில் செய்துள்ளேன்.
Sunday 20 December 2009 | By: Menaga Sathia

பிடி கொழுக்கட்டை/Pidi Kozhukattai

தே.பொருட்கள்:

அரிசிமாவு - 2 கப்
வெல்லம் - 1 1/2 கப்
வறுத்த எள் - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
உப்பு- 1 சிட்டிகை


செய்முறை :

*வெல்லத்தை சிறிது நீர் விட்டுக் காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*அரிசிமாவு+உப்பு+தேங்காய்த்துறுவல்+எள்+பாசிப்பருப்பு+வடிகட்டிய வெல்லம் அனித்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*அதை உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
Thursday 17 December 2009 | By: Menaga Sathia

உருளை சாலட்

தே.பொருட்கள்:

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
பொடியாக நறுக்கிய கேரட்,வெங்காயம்,தக்காளி,
வெள்ளரிக்காய்,மாங்காய் கலந்த கலவை - 1 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு
முளைக்கட்டிய கறுப்புக்கடலை - 1/4 கப்
உப்பு- தேவைக்கு


செய்முறை :

*உருளைக்கிழங்கை பொடியாக அரிந்து +நறுக்கிய காய்கறிகள்+பயிறு+உப்பு+ஆலிவ் எண்ணெய்+மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.
Tuesday 15 December 2009 | By: Menaga Sathia

தேங்காய் கட்லெட்


தே.பொருட்கள்:
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது
பொடித்த ஒட்ஸ் - 1/4 கப்
காய்ந்த தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*தேங்காய்த்துறுவல்+மசித்த உருளைக்கிழங்கு+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை+உப்பு+பட்டாணி அனைத்தையும் கெட்டியாக பிசையவும்.

*பொடித்த ஒட்ஸையும்,காய்ந்த தேங்காய்த்துறுவலையும் ஒரு தட்டில் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*பிசைந்த வைத்துள்ள மாவை சிரு உருண்டையாக எடுத்து விருப்பமான வடிவில் செய்து ஒட்ஸ் கலவையில் புரட்டி எடுக்கவும்.

*அதனை ப்ரிட்ஜில் 15 நிமிடம் வைக்கவும்.ஏனெனில் வறுக்கும் தேங்காய்த்துறுவல் கொட்டாது.

*பிறகு தவாவில் எண்ணெய் விட்டு கட்லெட்டுகளாக சுட்டெடுக்கவும்.
Sunday 13 December 2009 | By: Menaga Sathia

முட்டை பரோட்டா

ஹர்ஷினி அம்மாவின் கொத்து பரோட்டா குறிப்பை பார்த்து செய்தேன்.இதில் பரோட்டா குருமா நான் சேர்த்து செய்துள்ளேன்.மிகவும் நன்றாக இருந்தது.

தே.பொருட்கள்:

பரோட்டா - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
முட்டை - 3
பரோட்டா குருமா - 3 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பரோட்டா செய்முறையை இங்கே பார்க்கவும்.

*பரோட்டாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+தக்காளி+கரம் மசாலா+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

*பின் முட்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.பரோட்டா சேர்த்து நன்கு கொத்தவும்.

*பரோட்டா குருமா சேர்க்கவும்.இல்லையெனில் தண்ணீர் தெளிக்கவும்.

*பரோட்டாவில் உப்பு இருப்பதால் பார்த்து போடவும்.

*நன்கு கொத்தியதும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


பி.கு:

விருப்பப்பட்டால் இதனுடன் கொத்துக்கறியும் சேர்க்கலாம்.காரமாக இருந்தால் எலுமிச்சைசாறு சேர்க்கவும்.
Thursday 10 December 2009 | By: Menaga Sathia

ரவை பணியாரம்

தே.பொருட்கள்:
ரவை - 1 கப்
துருவிய சுரைக்காய் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :

*ரவையை உப்பு+தயிர் சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

*அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகள தாளித்து ரவையில் கலந்து தோசை மவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

*பணியாரக் குழியில் மாவை விட்டு இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
Wednesday 9 December 2009 | By: Menaga Sathia

ப்ரோக்கலி 65

தே.பொருட்கள்:

ப்ரோக்கலி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
அரிசிமாவு - 1 டீஸ்பூன்
ரெட் கலர் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு



செய்முறை :

*ப்ரோக்கலியை சிறிய பூக்களாக பிரித்து உப்புப் போட்ட வெந்நீரில் சிறிது நேரம் போடவும்.

*பொடியாக அரிந்த பச்சை மிளகாய்+கலர்+இஞ்சி பூண்டு விழுது+ப்ரோக்கலி+சோளமாவு+மிளகாய்த்தூள்+அரிசிமாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


பி.கு:

இதே செய்முறையில் காலிப்ளவரிலும் செய்யலாம்.
Monday 7 December 2009 | By: Menaga Sathia

பீர்க்கங்காய் வேர்க்கடலை பொரியல்

தே.பொருட்கள்:

பீர்க்கங்காய் - 3 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - சிறிது

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை :

*பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.வேர்க்கடலையை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பின் பீர்க்கங்காய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

*தண்ணீர் ஊற்றதேவையில்லை.காய் விடும் நீர் போதுமானது.

*வெந்ததும் வேர்க்கடலை+தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
Thursday 3 December 2009 | By: Menaga Sathia

சுறா புட்டு

தே.பொருட்கள்:

சுறாமீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை -சிறிது
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பூண்டுப்பல் -5
இஞ்சி - சிறுத்துண்டு


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நீரில் வேகவிடவும்.

*வெந்ததும் தோலை எடுக்கவும்.( தோலில் மண் இருக்கும் )

*பின் உப்பு+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும்.

*வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை+இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து இஞ்சி+பூண்டு+வெங்காயம்+பச்சை மிளகாய் அனைத்தயும் போட்டு நன்றாக வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் மீனைப் போட்டு நன்கு கிளறவும்.

*நன்கு பொலபொலவென்று ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பி.கு:

விருப்பப்பட்டால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.
Tuesday 1 December 2009 | By: Menaga Sathia

பழக்கலவைத் தொக்கு

தே.பொருட்கள்:

பழக்கலவை - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மஞ்சள்தூள் - 1சிட்டிகை

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு


செய்முறை :

*பழங்களை சதுரதுண்டங்களாக நறுக்கி குக்கரில் நீர் விடாமல் 1 விசில் வரை வேகவைக்கவும்.

*வெந்த பழங்களை மசிக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

*உடனே மசித்த பழக்கலவையை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கி எடுக்கவும்.

*மோர்,ரசம் சாதத்திற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.


பி.கு:

*பழங்கள் அதிகமாக இருந்தால் இப்படி செய்யலாம்.

*நான் சேர்த்திருக்கும் பழங்கள் க்ரீன் ஆப்பிள்+பைனாப்பிள்+மஞ்சள் மற்றும் வெள்ளை மெலன் பழங்கள்.
01 09 10