Wednesday 22 December 2010 | By: Menaga Sathia

மட்டன் பிரியாணி - 2/Mutton Biryani - 2

தே.பொருட்கள்:
பாஸ்மதி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
புதினா,கொத்தமல்லி - தலா 1 கட்டு
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பிரியாணி மசாலாபொடி - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
எலுமிச்சை பழம் - 1
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
செய்முறை:*மட்டனில் சிறிது உப்பு+125 கிராம் தயிர்+கரம் மசாலா+1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து முதல் நாள் இரவே பிசைந்து ப்ரிட்ஜில் வைக்கவும்.
*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.
*ஊறவைத்த மட்டனை அப்படியே குக்கரில் நீர் சேர்க்காமல் 3 விசில் வரை வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அரிசியை லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.வேகவைத்த மட்டனை தனியாக வைத்து நீரை அளக்கவும்.
*அதே பாத்திரத்தில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
*தேங்காயைத்துருவி இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.
*வதங்கியதும் தக்காளி+பச்சை மிளகாய்+பிரியாணி மசாலா+புதினா கொத்தமல்லி+மீதமுள்ள தயிர் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வேகவைத்த மட்டனை போட்டு வதக்கவும்.4 கப் அரிசிக்கு 6 கப் அளவு நீர் ஊற்றவும்
*மட்டன் வேகவைத்த நீர் அளந்து ஊற்றவும்+தேங்காய்ப்பால்+தேவைப்பட்டால் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
*கொதிக்கும் போது வறுத்த அரிசியைப் போட்டு உப்பு+எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றவும்.
*தண்ணீர் சுண்டி வரும் போது 190°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் வைத்தெடுக்கவும்.
*ஏலக்காயை பொடிசெய்து பிரியாணியில் தூவி கிளறி பரிமாறவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

பொன் மாலை பொழுது said...

ஏன் நீண்ட நாட்களாக இங்கு தென்படவே இல்ல?

Priya Suresh said...

Briyaniyaa paathathum pasikuthu..Yenna Menaga romba busyaa neegha ungala aala pakkave mudiyala..Happy holidays pa..

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றிங்க. இந்த வாரம் ட்ரை பண்ணிட வேண்டியதுதான். அக்பர் இருக்க பயமேன்.

எல் கே said...

மேனகா எங்கக் காணாம போய்டீங்க ???

புவனேஸ்வரி ராமநாதன் said...

எப்படி இருக்கீங்க?

Admin said...

படங்களை பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கிறதே...

Kurinji said...

Enna menaga alaiye kaanom? Briyani supera erkku....
Kurinji

'பரிவை' சே.குமார் said...

உங்கள் சமையல் குறிப்பை படிக்கும் போது நீங்கள் பிரசுரிக்கும் போட்டாக்கள் பசியைத் தூண்டுகின்றன அக்கா.

சாருஸ்ரீராஜ் said...

பிரியாணி நல்லா இருக்கு என்ன ரொம்ப நாளா காணோம்.

ஹுஸைனம்மா said...

இஞ்சி சேத்து தேங்காய்ப் பால் எடுக்கணுமா? வித்தியாசமாருக்கே! ஏன் அப்படி?

ஸாதிகா said...

இந்த முறை புதுசு.அவசியம் செய்து பார்க்கவேண்டும்.

சிநேகிதன் அக்பர் said...

டேஸ்ட் சூப்பர்.

Akila said...

wow mouth watering recipe dear....

Priya dharshini said...

Wow..nakku uruthu sashiga....briyani supaaaarrru

Krishnaveni said...

superb...superb......superb.........

Muruganandan M.K. said...

பசிக்குது. உங்கள் படங்கள் கிளறி விட்ட பசி.

Angel said...

Menaka how are you .
naan ungal recent post paarthu romba naal aagiradhu.
hope you are fine .i made your hyderabad biriyani yesterday.nandraga vandhadhu.
WISH YOU A HAPPY PROSPEROUS NEW YEAR.

Jaleela Kamal said...

வித்தியசமான மட்டன் பிரியாணி , செட்டுநாடு பிரியானியா?

Kanchana Radhakrishnan said...

எப்படி இருக்கீங்க?

Thenammai Lakshmanan said...

எங்கே மேனகா ரொம்ப நாளா ஆளைக் காணோம்..

பிரியாணி சூப்பர்..:))

Asiya Omar said...

super menu.parcel please.

dsfs said...

hi ka how r u and hearty welcomes. dish is also super

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_29.html
உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.

shalihazubair said...

பார்க்கும் போதே சாப்பிடலாம் போலிருக்கு.அனபுடன் சித்திஷா

01 09 10