Sunday 28 February 2010 | By: Menaga Sathia

பார்லி உப்புமா / Barley Upma

தே.பொருட்கள்:

பார்லி குருணை - 1 கப்
ரவை - 1/2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*பார்லி+ரவை சிறிது நெய் விட்டு வறுக்கவும்
 
* கடாயில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் 3 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.

*நீர் கொதித்ததும் பார்லி+ரவையை கொட்டி கிளறவும்.

*நன்கு வெந்து பொலபொலவென வரும் போது இறக்கவும்.
 
பி.கு:
வெறும் பார்லியில் மட்டும் உப்புமா செய்தால் நன்றாகயிருக்காது.இதனுடன் ரவை அல்லது அவல் சேர்த்து செய்தால் தான் நன்றாகயிருக்கும்.
Thursday 25 February 2010 | By: Menaga Sathia

தக்காளி சட்னி - 2/Tomato Chutney -2

தே.பொருட்கள்:

தக்காளி - 4
புளி - 1 கோலிகுண்டளவு
மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
 
செய்முறை :

*தக்காளி+உப்பு+மிளகாய்த்தூள்+புளி அனைத்தும் மைய அரைக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

*எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பறமாறவும்.
Wednesday 24 February 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் மஞ்சூரியன்/ Oats Manchurian


தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 கப்
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
புட் கலர் - 1 சிட்டிகை
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 3
பொடியாக அரிந்த குடமிளகாய் - 1 சிறியது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*ஒட்ஸை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*அதனுடன் சிறிது+நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் மைதாமவு+உப்பு+கார்ன் மாவு+மிளகுத்தூள்+புட் கலர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் காயவைத்து ஒட்ஸ் உருண்டையை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.

*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பூண்டுப்பல்+குடமிளகாய் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

*பின் சோயாசாஸ் சேர்த்து சிறிது நீர் தெளித்து கொதித்த பின் பொரித்த ஒட்ஸ் உருண்டைகளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

*அசத்தல் சுவையில் இருக்கும் இந்த மஞ்சூரியன்...
Tuesday 23 February 2010 | By: Menaga Sathia

சிக்கன் பொடிமாஸ்

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
சோம்புத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*குக்கரில் சிக்கன்+ 1 கப் நீர்+தனியாத்தூள்+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள் சேர்த்து 3 விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

*ப்ரஷர் அடங்கியதும் நீர் வற்றும் வரை பிரட்டி ஆறவைத்து எலும்பில்லாமல் சதைப்பகுதியை மட்டும் எடுத்து தனியாக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+சோம்புத்தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

*வதங்கியதும் சிக்கன்+உப்பு+பட்டாணி சேர்த்து நன்கு பொலபொலவென்று வரும் வரை சுருள வதக்கி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
 
பி.கு:
எலும்பில்லாத சிக்கனில் செய்வது ரொம்ப ஈஸியா இருக்கும்.காரம் வேண்டுமானால் பச்சை மிளகாய் இன்னும் அதிகமாக சேர்க்கவும்.
Sunday 21 February 2010 | By: Menaga Sathia

லெமன் கேக்

தே.பொருட்கள்:

முட்டை - 4
சர்க்கரை - 130 கிராம்
உருக்கிய வெண்ணெய் - 80 கிராம்
ஆல் பர்பஸ் மாவு - 120 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/2 பாக்கெட்
எலுமிச்சை பழம் - 1
துருவிய எலுமிச்சைத் தோல் - 1/2 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :

*முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருக்களை தனியாக பிரிக்கவும்.

*வெள்ளைக்கருவை நன்கு நுரைவரும் வரை பீட் செய்யவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.

*மஞ்சள் கருவுடன் சர்க்கரை சேர்த்து,சர்க்கரை கரையும் வரை பீட் செய்து அதனுடன் வெண்ணெய்+பேக்கிங் சோடா+எலுமிச்சை சாறு+மாவு+துருவிய எலுமிச்சைத் தோல் அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்றாக அடிக்கவும்.

*இதனுடன் வெள்ளைக் கருவை கலந்து கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றவும்.
*அவனை 180 டிகிரிக்கு முற்சூடு செய்து 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

This post goes directly to Hearts for st- valentines - day hosted by Priya http://priyaeasyntastyrecipes.blogspot.com/2010/02/announcing-hearts-for-st-valentines-day.html
Saturday 20 February 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் லட்டு

நொடியில் செய்யக்கூடிய எளிதான லட்டு...

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3/4 கப்
முந்திரி,திராட்சை -தேவைக்கு
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
 
செய்முறை :

*ஒட்ஸை நெய்யில் வாசனை வரும் வறுக்கவும்.தனித்தனியாக ஒட்ஸையும்,சர்க்கரையும் மிக்ஸியில் பொடிக்கவும்.

*முந்திரி திராட்சை நெய்யில் வறுத்து ஒட்ஸ் மாவில் கலக்கவும்.அதனுடன் ஏலக்காய்த்தூளையும் கலந்து வைக்கவும்.

*நெய்யை லேசாக சூடு செய்து ஆறவிடவும்.இதனுடன் பொடித்த சர்க்கரையை கலக்கவும்.

*அப்போழுது சர்க்கரை லேசாக கரைய ஆரம்பிக்கும்போது ஒட்ஸை கலந்து லட்டுக்களாக பிடிக்கவும்.

பி.கு:

நார்மலாக 1 கப் ஒட்ஸ் = 1 கப் சர்க்கரைதான் சேர்ப்பாங்க. ஆனால் நான்3/4 கப் சர்க்கரை சேர்த்ததில் சரியாக இருந்தது.செய்பவர்கள் அவரவர் சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்க்கவும்.நெய்யுடன் சர்க்கரையை கலப்பதால் லட்டு பிடிக்க ஈஸியாக இருக்கும்.லட்டும் உடையாது.நெய்யும் அதிகம் செலவாகாது.
Friday 19 February 2010 | By: Menaga Sathia

வெந்தய சாம்பார் - 2

தே.பொருட்கள்:

துவரம்பருப்பு - 1 கப்
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 4
பெருங்காயம் - 1 சிறுதுண்டு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சாம்பார் பொடி - 1டீஸ்பூன்
புளி - 1 கோலிகுண்டளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*துவரம்பருப்பு+மஞ்சள்தூள்+பெருங்காயம்+வெந்தயம்+பூண்டுப்பல்+தக்காளி+பச்சை மிளகாய் இவை அனைத்தையும் குக்கரில் நன்கு வேக வைக்கவும்.

*புளியை தேவையான நீர்விட்டு கரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கி சாம்பார் பொடியை போட்டு லேசாக பிரட்டி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

*கொதித்ததும் வெந்த பருப்பு+உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.
Thursday 18 February 2010 | By: Menaga Sathia

சீஸ்-வெஜ் ப்ரெட் பஜ்ஜி

தே.பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 4
சீஸ் துருவல் - சின்ன பாக்கெட்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1
பொடியாக நறுக்கிய கேரட்,கோஸ் - 1/4 கப்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

மேல் மாவுக்கு:

கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சுத்தம் செய்த ஒமம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை :


* கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.


*பின் கேரட்,கோஸ்+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள் போட்டு வதங்கியதும் குடமிளகாய்,மசித்த உருளைக்கிழங்கு+உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி வைக்கவும்.


*மேல் மாவுக்கு கொடுத்துள்ளவைகலில் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைக்கவும்.


*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து,ஒவ்வொரு ப்ரெட்டையும் 4 முக்கோணங்களாக வெட்டிக் கொள்ளவும்.


*ஒரு முக்கோண ப்ரெட்டின் மேல் காய்கலவையை வைத்து அதன்மேல் சீஸ்துருவலை வைக்கவும்.பின் அதன்மேல் இன்னொரு முக்கோண ப்ரெட்டை வைத்து மூடவும்.இப்படியாக அனைத்து ப்ரெட்களையும் செய்யவும்.


*கடாயில் எண்ணெய் காயவைத்து ப்ரெட்டை (ஸ்டப்பிங் வெளியே வராதபடி) பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


*இதனை கெட்சப்புடன் சாப்பிட சுவையோ சுவை!!

Wednesday 17 February 2010 | By: Menaga Sathia

மோர் ரசம் - 2

தே.பொருட்கள்:
மோர் - 1 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
சீரகம் - 1/2 டீஸ்பூன்
ஒமம் - 1/4 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 4

வறுத்து பொடிக்க:
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
 
செய்முறை :

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில்லாமல் வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*மோரில் உப்பு+மஞ்சள்தூள்+வறுத்த பொடி சேர்த்து கலக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.
Tuesday 16 February 2010 | By: Menaga Sathia

முட்டை குழம்பு

தே.பொருட்கள்:

முட்டை - 4
புளி - 1 எலுமிச்சையளவு
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

* புளியை 1கோப்பையளவு கரைத்து அதனுடன் உப்பு+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.

*வெங்காய்ம்+பூண்டு+தக்காளியை நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளியை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*குழம்பு கொதித்ததும் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.

*ஒரு முட்டை ஊற்றி வெந்து மேலே வரும்போது இன்னொரு முட்டையை ஊற்றவும்.

*முட்டைகள் வெந்ததும் குழம்பை இறக்கவும்.
Monday 15 February 2010 | By: Menaga Sathia

தக்காளி ரசம்

தே.பொருட்கள்:

தக்காளி - 3
புளி - 1கோலிகுண்டளவு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

ரசப்பொடிக்கு:

துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - சிறிது
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுதுண்டு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
 
செய்முறை :

*தக்காளியை கொதிநீரில் போட்டு தோலெடுத்து அரைக்கவும்.அதனுடன் புளியை 1/2 கப் நீரில் கரைத்து தக்காளியுடன் சேர்க்கவும்.

*ரசப்பொடிக்கு கொடுத்துள்ளவைகளில் பொடிக்கவும்.

*தக்காளி கரைசலில் உப்பு+மஞ்சள்தூள் +தேவையான நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*நன்கு கொதித்ததும் ரசப்பொடியை தூவி 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை இறக்கவும்.

*கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளில் தாளித்து கொட்டவும்.
Sunday 14 February 2010 | By: Menaga Sathia

பைனாப்பிள் கேசரி

தே.பொருட்கள்:

பைனாப்பிள் துண்டுகள் - 1/4 கப்
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்கலர் - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 1/2 கப்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
சன்பிளவர் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
 
செய்முறை :

*கடாயில் நெய்விட்டு முந்திரி,திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் மீதமிருக்கும் நெய்+எண்ணெய் விட்டு ரவையை வறுக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் தண்ணியை கொதிக்கவைக்கவும்.அதனுடன் கலர் சேர்த்துக் கொள்ளவும்.

*ரவை நன்கு வெந்து பொன்னிறமாக வரும் போது கலர் கலந்து வைத்துள்ள வெந்நீரை ஊற்றி கட்டி விழாமல் கிளறவும்.

*பின் சர்க்கரை சேர்க்கவும்.அது இளகியதும் பைனாப்பிள் துண்டுகள் சேர்க்கவும்.

*அனைத்தும் ஒரு சேரநன்கு கிளறி சுருண்டிவரும்போது ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+எசன்ஸ் சேர்க்கவும்.

*சுவையான கேசரி அசத்தலான சுவையில் இருக்கும்.
 
பி.கு:

*பைனாப்பிள் எசன்ஸ் இல்லையெனில் பைனாப்பிள் ப்ரெஷ் ஜூஸ் 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.
*இதனுடன் ரெட் ஆப்பிள் துண்டுகள் + கருப்பு திராட்சை சேர்த்தால் பழகேசரி தயார்.
Friday 12 February 2010 | By: Menaga Sathia

முளைக்கட்டிய வெந்தயக்குழம்பு


முளைக்கட்டிய வெந்தயக்குழம்பு மிகவும் நார்சத்து நிறைந்தது.முளைபயிறு வகைகளில் அதிகளவு புரோட்டீன் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தி கொண்டது.வளரும் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்கவேண்டும்.

தே.பொருட்கள்:

முளைக்கட்டிய வெந்தயம் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுபல் - 5
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
சாம்பார்பொடி (அ) வத்தக்குழம்பு பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயத்தூள் - வாசனைக்கு

செய்முறை :

*பூண்டை வெட்டிக்கொள்ளவும்.தேங்காயுடன் சிறிது முளைக்கட்டிய வெந்தயத்தை சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+முளைக்கட்டிய வெந்தயம்+வத்தக்குழம்பு பொடி+உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் புளிகரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் குழம்பை இறக்கவும்.

*2நாளானலும் இந்த குழம்பு சுவையாக இருக்கும்.
Thursday 11 February 2010 | By: Menaga Sathia

வெந்தயத்தின் பயன்கள்


1.வெந்தயம் இதன் கீரை,விதை இரண்டுமே மருத்துவகுணம் கொண்டவை.கீரையை வேகவைத்து பருப்புடன் சாப்பிடலாம்.புளி சேர்த்து கூட்டு,குழம்பாகவும் சாப்பிடலாம்.குடல் புண்ணை ஆற்ற்றும் குணம் கொண்டது.இடுப்புக்கு வலிமையானது.

2.ரத்ததில் குளுக்கோஸ் அளவைக் கட்டுபடுத்தி,சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் மருந்து இது.

3.மாதவிலக்கு சமயங்களில் வரும் வயிற்றுக் கோளாறுகள்,அந்த சமயத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வு ஆகியவற்றுக்கு வெந்தயம் தீர்வு தருகிறது.

4.ரத்தம் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியைப் பெருக்கும் சக்தி இதற்கு உண்டு.வாயிக்கோளாறு,வயிறு உப்பிசம்,வயிற்றுப்போக்கை நிறுத்த வெந்தயம் நல்ல மருந்து.

5.பொடுகுத்தொல்லைக்கு மிகச் சிறந்த நிவாரணி இது.3 டேபில்ஸ்பூன் வெந்தயைத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தடவி 1/2 மணிநேஅர்ம் ஊற்விட்டு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.இப்படி ஒரு வாரம் செய்தால் பொடுகு தொல்லை காணாமல் போய்டும்.சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்கவும் ஏனெனில் வெந்தயம் குளிர்ச்சியானது.

6.முடி உதிரும் பிரச்சனைக்கும் வெந்தயம் அருமருந்து.செம்பருத்தி பூ,இலை,துளசி இலை இவை 3யும் சம அளவில் எடுத்து காயவைத்து பொடியாகி அரைத்துக் கொள்ள வேண்டும்.வெந்தயத்தை காயவைத்து பொடியாகி அரைத்து அதை இந்த இலைப் பொடியுடன் சம அளவில் கல்ந்துக் கொள்ளவும்.இதனுடன் சீயக்காய் பொடியும் கலந்து தண்ணீர் விட்டு கலந்து ஷாம்பு மாதிரி தலையில் தேய்த்து குளித்து வந்தால் நிரந்தர தீர்வுத் தரும்.

7.உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கவும் இது உதவுகிறது.2 டீஸ்பூன் வெந்தயத்தை 1 டம்ளர் நீரில் இரவே ஊறாவைத்து காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரைக் குடிக்கவேண்டும்.குழுப்பை குறைப்பதோடு மட்டுமில்லாமல் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறாது.இப்படி அடிக்கடி குடித்து வந்தால் வயிறு தொடர்பான ப்ரச்னைகள் வரவே வராது.

8.முகப்பருக்களுக்கும் வெந்தயக்கீரை பலன் தருகிறது.புது வெந்தயக்கீரையை சுத்தம் செய்து அரைத்து முகப்பரு இருக்குமிடத்தில் இஅரவில் படுக்கபோகும் முன் செய்து 15 நிமிடன் கழித்து உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

9.தூக்கம் வரமல் தவிப்பவர்களுக்கு வெந்தய்க்கீரையை தண்ணீர் விட்டு அரைத்து 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நல்லபலன் கிடைக்கும்.

10.வெள்ளைப்படுதலுக்கும் வெந்தயம் தீர்வு தருகிறது.1 டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை இரவில் 1 டம்ளர் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த வெந்தயத்தை அப்படியே மென்று விழுங்க வேண்டும்.இப்படி 1 வாரம் சாப்பிட்டு வந்தால் இந்த ப்ரச்னை இருக்காது.

இவை அனைத்தும் நான் படித்த குறிப்புகள்.இவைகளில் நான் முடி உதிர்வு,ஊறவைத்த வெந்தயத்தண்ணீர்,பொடுகு என நிறைய பயன் அடைந்துள்ளேன்...

பைனாப்பிள் சல்சா

தே.பொருட்கள்:

பைனாப்பிள் துண்டுகள் - 1/2 கப்
சிவப்பு வெங்காயம் - 1
தக்காளி - 1
குடமிளகாய் - 1
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைசாறு - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*தக்காளியை விதை நீக்கி நீளவாக்கில் அரியவும்.வெங்காயம்+குடமிளகாயையும் நீளவாக்கில் அரியவும்.

*ஒரு பவுலில் மிளகுத்தூள்+வெங்காயம்+தக்காளி+குடமிளகாய்+பைனாப்பிள் துண்டுகள் கலந்து ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பரிமாறும்போது தேன்+எலுமிச்சைசாறு +கொத்தமல்லித்தழை கலந்து பரிமாறவும்.

*இதனை க்ரில் சிக்கனுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
Wednesday 10 February 2010 | By: Menaga Sathia

விருதுகள்


விருது என்றாலே சந்தோஷம் தானே.தேவி அவர்கள் எனக்கு வழங்கிய விருது.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.


நிதுபாலா அவர்கள் எனக்கு கொடுத்த 3 விருதுகள்.அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!!





இந்த விருதுகளை என் ப்ளாக் நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்கிறேன்.







Tuesday 9 February 2010 | By: Menaga Sathia

கத்திரிக்காய் வறுவல்

தே.பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

பொடிக்க:

பொட்டுக்கடலை - 1/4 கப்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
ஒட்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 4 பல்

செய்முறை :

*கத்திரிக்காயை வட்டமாக நறுக்கவும்.

*பொடிக்க கொடுத்துள்ளவைகளில் உப்பு சேர்த்து பொடிக்கவும்.

*பொடித்த கலவையில் கத்திரிக்காயை நன்றாக இருபக்கமும் பிரட்டவும்.

*தவாவில் எண்ணெய் விட்டு கத்திரிக்காயினை வறுத்தெடுக்கவும்.

*அல்லது அவனில் வைத்தும் செய்யலாம்.நான் தவாவில் எண்ணெய் விட்டு வறுத்துள்ளேன்.

*கத்திரிக்காய் அதிக எண்ணெய் இழுக்கும் அதனால் நான் ஸ்டிக் பேனில் செய்வது நலம்.

பி.கு:
சாம்பார்,ரசம்,தயிர் சாதத்திற்க்கு மிகவும் நன்றாகயிருக்கும்.
Sunday 7 February 2010 | By: Menaga Sathia

ப்ரெட் பிஸ்ஸா


தேவி மெய்யப்பனின் ப்ரெட் பிஸ்ஸா பார்த்து நான் செய்த குறிப்பு.அவர்களுக்கு என் நன்றி!!
 
தே.பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 5
தக்காளி சாஸ் - தேவைக்கு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1
துருவிய கேரட் - 1
ஆலிவ் காய் - 10
துருவிய சீஸ் - 70 கிராம் சிறிய பாக்கெட்
செய்முறை :

* ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து தக்காளி சாஸை தடவும்.

*அதன் மேல் வெங்காயம்+கேரட்+குடமிளகாய்+சீஸ்+ஆலிவ் காய் என ஒவ்வொறாக வைக்கவும்.

*அவனை 300 டிகிரிக்கு 5 நிமிடம் முற்சூடு செய்து ப்ரெட் பிஸ்ஸாவை பேக்கிங் டிரேயில் 5 முதல் 8 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

*எளிதில் செய்யகூடிய குழந்தைகளுக்கு பிடித்த பிஸ்ஸா.குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தக்காளி சாஸ்க்கு பதில் கெட்சப் தடவலாம். இதனுடன் கிரில் சிக்கன் அல்லது மீனும் அவரவர் விருப்பத்துக்கேற்ப ஸ்டப்பிங் செய்யலாம்.
 
பி.கு:
அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் மாறலாம்.அதிக நேரம் வைத்தால் ப்ரெட் கருவிவிடும்.
Thursday 4 February 2010 | By: Menaga Sathia

தேங்காய் பச்சடி


இந்த பச்சடியை வாய்ப்புண்,வயிற்றுப்புண் உள்ளவர்கள் சாப்பிட்டால் மிக நல்லது.விரைவில் குணமாகும்.அவர்கள் மட்டும் பச்சைமிளகாயை தவிர்க்கவும்.இந்த பச்சடியை நண்பரின் வீட்டில் சாப்பிட்டேன்.அவர்களிடன் செய்முறையை கேட்டு தெரிந்து கொண்டேன்.

தே.பொருட்கள்:

தயிர் - 1 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்

செய்முறை :

*தேங்காய்த்துறுவலை நீர் விடாமல் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+ப.மிளகாயினை போட்டு பொன்னிறமாக வதக்கி ஆறவிடவும்.

*ஒரு பாத்திரத்தில் தயிர்+உப்பு+அரைத்த தேங்காய்த் துறுவல்+வதக்கிய வெங்காயம் அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

பி.கு:
காரகுழம்பிற்கு இந்த பச்சடி பெஸ்ட் காம்பினேஷன்.
Tuesday 2 February 2010 | By: Menaga Sathia

கதம்ப பகோடா

தே.பொருட்கள்:

நீளவாக்கில் அரிந்த காய்கறிகள் - 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மைதாமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
 
செய்முறை :


*இதில் நான் சேர்த்திருக்கும் காய்கள் கோஸ்+கேரட்+குடமிளகாய்+உருளைக்கிழங்கு.உங்களுக்கு விருப்பமான காய்களும் சேர்த்துக் கொள்ளலாம்.

*எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.தேவையானால் நீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.

*எண்ணெய் காயவைத்து பகோடாவாக பொரிக்கவும்.
01 09 10