Thursday 29 July 2010 | By: Menaga Sathia

ஸ்டப்டு குடமிளகாய் / Stuffed Capsicum

தே.பொருட்கள்:

குடமிளகாய் - 4 சிறியது
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
வேக வைத்த கொள்ளு - 1/4 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சீரகம் - 3/4 டீஸ்பூன்

செய்முறை :
*குடமிளகாயை காம்பு பாகம் நறுக்கி விதைகளை நீக்கவும்.

*கடாயில் என்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள் போட்டு வதக்கி மசித்த உருளை+வேக வைத்த கொள்ளு+உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

*அவனை 190°C டிகிரிக்கு முற்சூடு செய்து,குடமிளகாய் மேலே எண்ணெய் தடவி மசாலா கலவையை ஸ்டப்பிங் செய்து நறுக்கிய காம்பு பகுதியை வைத்து மூடி அவன் டிரேயில் வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*இதனை சப்பாத்தியுடன் சாப்பிட ஜோர்!!
Wednesday 28 July 2010 | By: Menaga Sathia

கறிவேப்பிலை சாதம்/ Curry Leaves Rice


லேடீஸ் ஸ்பெஷல் ஜூலை மாத இதழில் வெளிவந்த குறிப்பு இது...

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

வறுத்து பொடிக்க:
கறிவேப்பிலை - 4 கொத்து
மிளகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
 
செய்முறை :
*வறுக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.

*சாதம் சூடாக இருக்கும் போதே பட்டர் போட்டு கிளறி வைக்கவும்.ஆறியதும் உப்பு+பொடித்த பொடி சேர்த்து கிளறி சிப்ஸுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

Tuesday 27 July 2010 | By: Menaga Sathia

எம்டி சால்னா

தே.பொருட்கள்:
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
சீரகத்தூள்,சோம்புத்தூள் -தலா 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
முந்திரி - 5

பொடிக்க:
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
 
செய்முறை :
* அரைக்க மற்றும் பொடிக்க கொடுத்துள்ளவைகளை செய்துக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் + மசாலா பொடி+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள்+புதினா கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

*பின் உப்பு+தேவையானளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் தேங்காய் விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரோட்டவுக்கு சூப்பர் மேட்ச்!!
Sending this recipe to Iftar Moments Hijri 1431 Event by Ayeesha & Sidedishes other than dal/subzis Event by Suma.
Sunday 25 July 2010 | By: Menaga Sathia

உருளை+குடமிளகாய் வறுவல்

தே.பொருட்கள்:

வேகவைத்த அரிந்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
நீளவாக்கில் நறுக்கிய குடமிளகாய் - 1
பொடியாக நருக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்த்தூள்+உப்பு+உருளைகிழங்கு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் குடமிளகாயை சேர்த்து 5 நிமிடம் மேலும் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*குடமிளகாய் வாசனையோடு நன்றாக இருக்கும் இந்த வறுவல்.
Thursday 22 July 2010 | By: Menaga Sathia

ஸ்ப்ரவுட்ஸ் கீரை கட்லட்

தே.பொருட்கள்:
முளைக்கட்டிய பசைப்பயிறு - 1 கப்
பொடியாக அரிந்த மணத்தக்காளிக்கீரை - 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்
ஒட்ஸ் - தேவைக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*முளைக்கட்டிய பச்சைபயிறை மெல்லிய துணியில் மூட்டை கட்டி கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்தால் வெந்துவிடும்.

*அதனுடன் உப்பு+சோம்பு சேர்த்து மைய அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+கீரை+உப்பு+கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.கீரை வதங்கியதும் அரைத்த பச்சை பயிறு விழுதை சேர்த்து நன்கு கிளறி ஒட்டாமல் வரும் போது கடலைமாவு சேர்த்து கிளறி இறக்கவும்.

*ஆறியதும் சிறு உருண்டையை எடுத்து விருப்பமான வடிவில் செய்து ஒட்ஸில் பிரட்டவும்.

*தவாவில் எண்ணெய் விட்டு 2 புறமும் வேகவிட்டு எடுக்கவும்.

*எந்த கீரையிலும் இந்த கட்லட்டை செய்யலாம்.

Sending this recipe Let's Sprout Event by Priya & Iftar Moments Hijri 1431 Event by Ayeesha.

ஒட்ஸ் கலாகண்ட்


லேடீஸ் ஸ்பெஷல் ஜூலை மாத இதழில் வெளிவந்த குறிப்பு இது..

தே.பொருட்கள்:
பனீர் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 2 கப்
ஒட்ஸ் - 1/2 கப்
பாதாம்,பிஸ்தா துண்டுகள் - அலங்காரத்துக்கு
 
செய்முறை :
* கடாயில் 2 கப் பாலை கொதிக்க விட்டு 1 கப் ஆகும் வரை நன்கு காய்ச்சவும்.

*நன்கு 1 கப் பாலானதும் பனீரை சேர்த்து நன்கு கிளறவும்.

*திக்காக வரும்போது சர்க்கரையினை சேர்த்து விடாமல் கிளறி கெட்டியாக வரும்போது ஒட்ஸினை தூவி வேறொரு தட்டில் 1/2 இன்ஞ் அளவில் தடிமனாக பரத்தி ஆறவிடவும்.ஆறியதும் அதன் பேல் பாதாம் துண்டுகள் தூவி கட் செய்யவும்.

*சுவையான ஒட்ஸ் கலாகண்ட் ரெடி!!
Wednesday 21 July 2010 | By: Menaga Sathia

வெண்டைக்காய் பொரியல் (பிண்டி ஜூங்கா )

தே.பொருட்கள்:
பொடியாக அரிந்த வெண்டைக்காய் - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
கடலைமாவு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
சீரகம் - 1/2 டீஸ்பூன்
ஒமம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
*வெறும் கடாயில் கடலைமாவை வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.

*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

*வதங்கியதும் வெண்டைக்காய்+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் கடலைமாவை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் சேர்த்து நன்கு பிரட்டவும்.தண்ணீர் ஊற்றக்கூடாது.

*தட்டு போட்டு மூடி குறைந்த தீயில் எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.
Tuesday 20 July 2010 | By: Menaga Sathia

வடை கறி/Vada Curry

தே.பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,புதினா,கொத்தமல்லி -சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுப்பல் - 5
பச்சை மிளகாய் - 4
கிராம்பு - 3
பட்டை - 1 சிறுதுண்டு
ஏலக்காய் - 2
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
 
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.கடலைப்பருப்பை 3/4 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடலைப்பருப்புடன் அரிந்து வைத்துள்ள சிறிது வெங்காயம்+அரைத்த சிறிதளவு மசாலா விழுது சேர்த்து பிசைந்து பகோடாகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+அரைத்த மசாலா விழுது+தக்காளி+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை,உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.கொதித்ததும் பொரித்த பகோடாகளை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

Sending this recipe to Sidedishes other than dal/subzis Event by Suma & Iftar Moments Hijri 1431 Event Ayeesha.
Monday 19 July 2010 | By: Menaga Sathia

ஜவ்வரிசி முறுக்கு

தே.பொருட்கள்:

ஜவ்வரிசி - 1/2 கப்
புளித்த மோர் - 1/2 கப்
அரிசி மாவு - 1 கப்
வறுத்த உளுத்த மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
உருக்கிய பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*புளித்த மோரில் சிறிது நீர் கலந்து ஜவ்வரிசியை 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

*நன்கு ஊறியதும் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.தேவைப்பட்டால் மட்டும் தேவையான நீர் சேர்த்து பிசையவும்.

*முறுக்கு அச்சில் மாவை போட்டு முறுக்குகளாக எண்ணெயில் சுட்டெடுக்கவும்.

ஆப்பம்
பகோடா வத்தல்
ஜவ்வரிசி கஞ்சி வத்தல்
Sending those recipes CWS - Sago Event by Niloufer Started by Priya.
Sunday 18 July 2010 | By: Menaga Sathia

கேழ்வரகு கூழ்

தே.பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2கப்
நொய்யரிசி - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
தயிர் - 1 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை:
*கேழ்வரகை மாவை முதல் நாள் இரவே சிறிது நீர் விட்டு தளர்த்தியாக கரைத்து புளிக்க வைக்கவும்.

*மறுநாள் 3 கப் நீரில் ஒரு பாத்திரத்தில் நொய்யரிசியை வேகவைக்கவும்.

*அரிசி வெந்ததும் புளித்த கேழ்வரகு மாவை கரைத்து ஊற்றி கெட்டிபடாமல் நன்கு கிளறிகோண்டே இருக்கவும்.மாவு கையில் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

*அப்போழுது இறக்கி ஆறவைக்கவும்.ஆறியதும் மாவை சிறிது நீர்விட்டு உப்பு போட்டு கரைத்து அதன்மேல் தயிரை ஊற்றி வெங்காயத்தை தூவி பருகவும்.

கினோவா(Quinoa) சூப்

தே.பொருட்கள்:

வேகவைத்த கினோவா - 1/2 கப்
விருப்பமான காய்கறிகள் - 1/2 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 2
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :
*காய்களை சிறிது உப்பு+1 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் பட்டர் போட்டு வெங்காயம்+பூண்டுப்பல் வதக்கி வேக வைத்த காய்கறிகள்+கினோவா +1/4 கப் நீர் சேர்த்து லேசாக கொதிக்கவிட்டு இறக்கி மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.
 
பி.கு:
*கினோவா,வேகவைத்த காய்கறியில் உப்பு இருப்பதால் உப்பை தேவையானால் மட்டும் சேர்க்கவும்.நான் சேர்த்திருக்கும் காய்கள் பட்டாணி,கேரட்,பீன்ஸ்.
Thursday 15 July 2010 | By: Menaga Sathia

ரசமலாய்

தே.பொருட்கள்:

பால் - 8 கப்
எலுமிச்சை சாறு - 1/4 கப்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 8 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு - அலங்கரிக்க


செய்முறை :

*4 கப் பாலை நன்கு காய்ச்சி எலுமிச்சை சாறு ஊற்றினால் பால் திரிந்து பனீர் கிடைக்கும்.அதை மெல்லிய துணியில் ஊற்றி வடிகட்டி நன்கு அலசி 6 மணிநேரம் தொங்க விடவும்.

*பனீரை மைதாமாவு சேர்த்து மிருதுவாக பிசைந்து ,உருண்டைகளாகி கையால் லேசாக அழுத்தி தட்டையாக்கி கொள்ளவும்.

*குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை + 1 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.சர்க்கரை கரைந்ததும் பனீர் உருண்டைகளை அதில் போட்டு 5-7 நிமிடங்கள் வெயிட் போடாமல் வேகவைக்கவும்.

*பனீர் 2 மடங்காக உப்பி வெந்து இருக்கும்.

*வேறொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் பாலை நன்கு காய்ச்சி,மீதமுள்ள சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*சர்க்கரை பாகில் இருக்கும் உருண்டைகளை மட்டும் எடுத்தும் கொதிக்கும் பாலில் 5 நிமிடம் போட்டு இறக்கவும்.

*ஏலக்காய்த்தூள் சேர்த்து சில்லென்று பரிமாறும் போது பிஸ்தா பருப்புகளைப் போடவும்.

Wednesday 14 July 2010 | By: Menaga Sathia

சைவ ஈரல் வறுவல்

திருமதி சோலை அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி மேடம்..ரொமப் நல்லாயிருந்தது.டேஸ்ட் அப்படியே ஈரல் வறுவல் மாதிரியே இருந்தது.
 
தே.பொருட்கள்:
தோல் பாசிப்பருப்பு(பச்சைபயிறு) - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
கிராம்பு - 2
ஏலக்காய் -2
பூண்டுப்பல் - 3
இஞ்சி - 1 சிறு துண்டு

செய்முறை :
*பச்சை பயிறை 3 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.இட்லி மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும்.

*அதனை இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*ஆறியதும் துண்டுகள் போடவும்.அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம்+தக்காளி+மிளகாய்த்தூள்+உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் அரைத்த விழுதுன் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் பச்சைபயிறு துண்டுகளை சேர்த்து நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும்.

*அசத்தலான சுவையில் இந்த வறுவல் இருக்கும்.

சுரைக்காய் இனிப்பு போளி

சுரைக்காயில் அல்வா செய்ய ஐடியா கொடுத்த தோழி கீதா ஆச்சல் அவர்களுக்கு நன்றி!!
தே.பொருட்கள்:
மைதா - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+நெய் = தேவைக்கு

சுரைக்காய் அல்வா செய்ய
துருவிய சுரைக்காய் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
செய்முறை :
*மைதா மாவில் உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொஞ்சம் தளர்த்தியாக பிசைந்துக் கொள்ளவும்.

*கடாயில் நெய் விட்டு சுரைக்காயை நன்கு வதக்கி கொள்ளவும்.வதங்கியதும் பால் சேர்த்து வேகவிடவும்.சிறிது பாலில் கலர் கரைத்து ஊற்றவும்.

*சுரைக்காய் வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கெட்டியாக வரும் போது சிறிது நெய்+ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ஆறவைக்கவும்.

*மைதா மாவில் சிறிது உருண்டை எடுத்து அதனுள் சுரைக்காய் அல்வா வைத்து போளிகளாக தட்டி நெய்யில் 2 புறமும் வேகவைத்து எடுக்கவும்.
Tuesday 13 July 2010 | By: Menaga Sathia

குடமிளகாய் பச்சைபயறு உசிலி

தே.பொருட்கள்:

பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பச்சைபயறு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*பச்சைபயறை 3 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய்+உப்பு+சோம்பு+பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காய்த்தை போட்டு வதக்கவும்.

*பின் குடமிளகாய்+உப்பு சேர்த்து லேசாக வதக்கி உதிர்த்த பச்சைபயறை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

*குடமிளகாயை லேசாக வதக்கினால் போதும்.
Monday 12 July 2010 | By: Menaga Sathia

தர்பூசணி கேரட் ஜூஸ்

தே.பொருட்கள்:

தர்பூசணி துண்டுகள் - 1 கப்
துருவிய கேரட் - 1/4 கப்
தேன் - இனிப்பிற்கேற்ப
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்

செய்முறை :

*தர்பூசணி+கேரட் இரண்டையும் ஒன்ராக நைசாக அரிக்கவும்.

*அதனுடன் தேன்+எலுமிச்சை சாறு+ஐஸ்கட்டி சேர்த்து பருகவும்.
Sunday 11 July 2010 | By: Menaga Sathia

வெள்ளரிக்காய் தால்

தே.பொருட்கள்:

தோல் நீக்கி நறுக்கிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*குக்கரில் பருப்பு+வெள்ளரிக்காய்+தக்காளி+மஞ்சள்தூள்+ சிறிது நீர் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*அரைத்த விழுதை வேகவைத்த பருப்பில் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த பருப்பில் சேர்த்து எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.

Friday 9 July 2010 | By: Menaga Sathia

ஆம்பூர் சிக்கன் பிரியாணி /Ambur Chicken Biryani



எனக்கு பிடித்த சமையல் குறிப்புகளை என் டைரியில் எழுதி வைப்பது வழக்கம்.இந்த குறிப்பினை நான் எப்போழுதோ டி.வியில் பார்த்து எழுதி வைத்தேன்.அந்த டைரியும் தொலைந்து போய் ஏதோ ஒரு பொருள் தேடுகையில் அந்த டைரி கிடைத்தது.அதில் நான் எழுதிய குறிப்பை பார்த்து செய்தது....
ஆம்பூர் பிரியாணி எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.காரணம் அதில் நெய்(அ) டால்டா சேர்ப்பதில்லை.மேலும் நாம் மசாலா சேர்த்து வதக்கும் பக்குவத்தில் இருக்கு.இதில் சாதாரணமாக குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து செய்வது.பச்சை மிளகாய்,கரம் மசாலா,தேங்காய்ப்பால் இதெல்லாம் சேர்க்க வேண்டியதில்லை.

நான் பிரியாணியை எப்போழுதும் அவனில் தான் தம் போடுவேன்.190°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் தம் போட்டால் சரியாக இருக்கும்.
தே.பொருட்கள்:சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
அரிந்த வெங்காயம் - 1 பெரியது
அரிந்த தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 125 கிராம்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்,சிகப்பு புட்கலர் - தலா 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கிராம்பு - 5
ஏலக்காய் - 6
செய்முறை :
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்த பின் அரிசியை போட்டு 10 நிமிடத்தில் வடித்துவிடவும்.தம் போட சரியாக இருக்கும்.

*வெங்காயம் வதங்கியதும் பூண்டு விழுது+புதினா கொத்தமல்லி+இஞ்சி விழுது+தக்காளி+மிளகாய்த்தூள்+தயிர் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*அனைத்தும் நன்கு வதங்கியதும் சிக்கனைப் போட்டு 15 நிமிடம் வதக்கவும்.1 கப் நீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.

*கிரேவி நன்கு கொதித்து சிக்கன் வெந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து பின் வடித்த அரிசியை கொட்டி சமன்படுத்தி 2 புட்கலர்களையும் மேலே ஊற்றி தம் போடவும்.

*அவன் இல்லாதவர்கள் தோசை கல்லை காயவைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து பாத்திரத்தை சுற்றிலும் அலுமினியம் பேப்பரால் நன்கு இறுக மூடி போடவும்.

*15 நிமிடம் கழித்து சாதத்தை உடையாமல் நன்கு கிளறி விட்டால் சுவையான ஆம்பூர் பிரியாணி ரெடி!!

Sending this recipe to '' I Love My Dad'' Event by Jay.
Thursday 8 July 2010 | By: Menaga Sathia

சுரைக்காய் கட்லட்

தே.பொருட்கள்:

துருவிய சுரைக்காய் - 3/4 கப்
பொடியாக நருக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி - சிறிதளவு
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
வேகவைத்த பார்லி - 1/4 கப்
துருவிய பனீர் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை :
*அனைத்தையும் உப்பு சேர்த்து ஒன்றாக கெட்டியாக பிசையவும்.

*சுரைக்காய் பச்சையாக சாப்பிடுவது நல்லது பிடிக்காதவர்கள் வெறும் கடாயில் நீர் சுண்டும் வரை வதக்கவும்.

*தவாவில் எண்ணெய் விட்டு சிறு உருண்டையாக எடுத்து விருப்பமான வடிவில் செய்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


பி.கு:
சுரைக்காய் மிகவும் குளிர்ச்சியானது.சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்கவும்.
Wednesday 7 July 2010 | By: Menaga Sathia

காலிபிளவர் சப்பாத்தி

தே.பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

ஸ்டப்பிங் செய்ய:துருவிய காலிபிளவர் - 1 கப்
மஞ்சள்தூள்,கரம் மசாலா - தலா1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது

செய்முறை :
*கோதுமை மாவில் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் துருவிய காலிபிளவர்+கரம் மசாலா+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு நீர் சேர்த்து வேகவைத்து,நீர் சுண்டும் வரை கிளறி ஆறவைக்கவும்.

*கோதுமை மாவில் சிறிதளவு உருண்டை எடுத்து உருட்டி அதனுள் காலிபிளவர் கலவையை சிறிது வைத்து நன்கு மூடி மெலிதாக உருட்டி 2 பக்கமும் எண்ணெய் விட்டு வேகவைத்தெடுக்கவும்.

Tuesday 6 July 2010 | By: Menaga Sathia

முருங்கைக்காய் வடை(அவன் செய்முறை) / Drumsticks Vadai

தே.பொருட்கள்:

முருங்கைக்காய் விழுது - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
பூண்டுப்பல் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 சிறுதுண்டு
காய்ந்த மிளகாய் - 2
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
* கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் சோம்பு+பூண்டுப்பல்+கிராம்பு+பட்டை+காய்ந்த மிளகாய்+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*இதனுடன் முருங்கைக்காய் விழுது+வெங்காயம்+கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து பிசையவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் போட்டு எண்ணெய் தடவி பிசைந்த மாவை வடைகளாக தட்டி டிரேயில் வைக்கவும்.

*ஒவ்வொரு வடையின் மீது 1 சொட்டு எண்ணெய் தடவவும்.

*270°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைத்து வேகவிட்டு,மறுபுறம் திருப்பி 1 சொட்டு எண்ணெய் விட்டு மீண்டும் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
Monday 5 July 2010 | By: Menaga Sathia

மிக்ஸட் சூப்

தே.பொருட்கள்:

பச்சை சுண்டைக்காய்,மஞ்சள் பூசணிக்காய்,ப்ரோக்கலி - தலா1/4 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
குரூட்டன்ஸ் - அலங்காரத்துக்கு

செய்முறை :
*சுண்டைக்காயை+பூசணிக்காய்+ப்ரோக்கலி சிறிது பட்டரில் லேசாக வதக்கவும்.

*அதனுடன் வெங்காயம்+தக்காளி+பூண்டுப்பல்+உப்பு+மீதமுள்ள பட்டர்+2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

*ஆறியதும் அரைத்து மிளகுத்தூள்+குரூட்டன்ஸ் சேர்த்து பரிமாறவும்.

*குரூட்டன்ஸ் என்பது பட்டரில் பொரித்த ப்ரெட் துண்டுகள்...

சுரைக்காய் ஜூஸ்

தே.பொருட்கள்:

துருவிய சுரைக்காய் - 1/2 கப்
தயிர் - 1 கப்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு


செய்முறை :
*அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து உப்பு சேர்த்து பருகவும்.

பி.கு:

இந்த ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறையும்,உஷ்ணம்,நீர்க்கடுப்பு சரியாகும்.

Saturday 3 July 2010 | By: Menaga Sathia

வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ் / Veg Pastry Wheels

தே.பொருட்கள்:
பஃப் பேஸ்ட்ரி ஷீட்- 1 பெரியது
சீரகம் - 1 டீஸ்பூன்
உருக்கிய பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

வேகவைத்து மசிக்க:
பொடியாக நறுக்கிய கேரட் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 8
தோல் சீவி துண்டுகளாகிய உருளை - 1 பெரியது
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள்,சோம்புத்தூள் -தலா 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை :
*வேகவைத்து மசிக்க கொடுத்துள்ள பொருட்களுடன் உப்பு+ 1 கப் நீர் விட்டு குக்கரில் 5 விசில் வரை வேகவைத்து நன்கு மசிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகத்தை போட்டு தாளித்து மசித்த கலவையை சேர்த்து நீர் சுண்டும் வரை நன்கு கிளறி ஆறவைக்கவும்.

*பஃப் ஷீட்டை ப்ரிசலிருந்து 1/2 மணிநேரத்திற்க்கு முன் எடுத்து வெளியே வைக்கவும்.

*பஃப் ஷீட்டை மாவு தூவி சதுரமாக தேய்த்து காய்கறி கலவையை சமமாக பரப்பவும். 4 ஓரங்களிலும் சிறிது இடைவெளி விட்டு பரப்பவும்.

*பேஸ்ட்ரி ஷீட்டை ஒரு ஓரத்திலிருந்து இறுக்கமாக சுற்றி,ஷீட்டின் இறுதியில் சிறிது நீர் தடவி ஒட்டவும்.

*ரோல் செய்த பேஸ்ட்ரி ஷீட்டை க்ளியர் ராப் பேப்பரில் சுற்றி 15 நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்.

*பின் கத்தியால் விரும்பிய வடிவத்தில் வெட்டி அவன் டிரேயில் அலுமினியம் பேப்பரில் சிறிது இடைவெளிவிட்டு ரோல்ஸ்களை அடுக்கி ப்ரெஷில் பட்டரால் தடவவும்.

*200°Cமுற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.10 நிமிடத்தில் ஒரு புறம் வெந்ததும் மறுபறம் திருப்பி விடவும்.
Thursday 1 July 2010 | By: Menaga Sathia

Zebra Cake

தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 3
பால் - 1 கப்
உருக்கிய பட்டர் - 3/4 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

* ஒரு பவுலில் முட்டை+சர்க்கரை நன்கு பீட் செய்யவும்.பின் பால்+எசன்ஸ்+பட்டர் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

*இன்னொரு பவுலில் மாவு+பேக்கிங் பவுடரை கலக்கவும்.

*முட்டை கலவையுடன் கொஞ்ச கொஞ்சமாக மைதா கலவையை அன்கு கலக்கவும்.

*கேக் கலவையை 2 பங்காக சமமாக பிரிக்கவும்.ஒரு கலவையில் கோகோ பவுடரை கலக்கவும்.

*கேக் பானில் பட்டர் தடவி 3 டேபிள்ஸ்பூன் வெள்ளை கலவை ஊற்றவும்.அதன்மேல் 3 டேபிள்ஸ்பூன் கோகோ கலவையை ஊற்றவும்.

*கேக் பானை ஆட்டக்கூடாது மாவு தானாகவே பரவிக்கொள்ளும்.இப்படியாக மாற்றி மாற்றி எடுக்கவும்.
*180°C முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*ஆறியபின் துண்டு போட கேக் மிக அழகாக இருக்கும்.


01 09 10