Tuesday 26 April 2011 | By: Menaga Sathia

ரோஸ்டட் கடலைப்பருப்பு / Oven Roasted Channa Dal

தே.பொருட்கள்

கடலைப்பருப்பு - 1 கப்
மிளகாய்த்தூள்,எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடலைப்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.அதனுடன் மேறகூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி கடலைப்பருப்பை பரப்பவும்.

*220°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.இடையிடேயை கிளறி விடவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

From my childhood days this is one of my fav snack... i never knew this is so easy to make.. Thank u sure try..

ராமலக்ஷ்மி said...

பிடித்த ஒன்று. இத்தனை எளிதா:)?செய்து பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி.

மாதேவி said...

கச்சான், செய்வோம். இது நல்லாக இருக்கிறதே மேனகா.

சசிகுமார் said...

நல்ல டிப்ஸ்

Angel said...

பகிர்வுக்கு நன்றி மேனகா .எண்ணையில் பொரித்து
எடுப்பதை விட ,.இந்த முறை எளிதாகவும் ஆரோக்கியமானதும் இருக்கு

Asiya Omar said...

ஈசியாக இருக்கு.உடன் பூண்டுதட்டி,கருவேப்பிலையும் சேர்த்தால் மணக்கும்..

GEETHA ACHAL said...

சூப்பர்ப் மேனகா...ரொம்ப நல்லா இருக்கு..

அம்மா வந்து இருந்த பொழுது அம்மாவிற்கு அவனில் செய்து கொடுத்தேன்...ரொம்ப நல்லா இருக்கு என்று சொன்னாங்க...அப்பறம் அதனை செய்வதே மறந்து போச்சு...

சூப்பர்ப் குறிப்பு...திரும்பவும் ஞாபகம் செய்துவிட்டிங்க...

கராக்டாக செய்து இருக்கின்றிங்க...பார்க்கும் பொழுதே ஆசையாக இருக்கு...

Unknown said...

enakku pidithathu...

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கு மேனகா.எண்ணெய் இல்லாத மாலை நேர ஸ்னாக்ஸ் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

Priya Suresh said...

Guilt free snacks,my fav..

Prema said...

Healthy snacks,loved it...

Thenammai Lakshmanan said...

எண்ணெயைக் குடிக்காம நல்லா இருக்கு மேனகா..:0

Shama Nagarajan said...

wow..nice one

Sangeetha M said...

Hi menaga, just now I tried this crispy snack...very nice my favorite snack...I added few curry leaves also ..romba balls erunthathu ...great idea n thanx for sharing :)

Vimitha Durai said...

Crunchy and healthy munchies...

athira said...

My favorite snack, very nice.

சிநேகிதன் அக்பர் said...

மிகப்பிடித்த சினாக்ஸ். என்ன, கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும்.

SpicyTasty said...

moru moru kadalai. Love it.

Mahi said...

ஹெல்த்தி ஸ்னாக்!

Menaga Sathia said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சங்கீதா!! கறிவேப்பிலை சேர்த்து செய்திருப்பது இன்னும் வாசனையாக இருந்திருக்கும்...

Anonymous said...

நாங்கள் சாப்பாட்டு ராமர்களா? இப்படித் தான் கடலை வகைகளை பேக் பண்ணி வைப்போம். ஆனால் இரண்டு நாளில் இளகிவிடும்.

Anonymous said...

ஏதாவது வழி இருக்கிறதா அக்கா. அட்லீஸ்ட் ஒரு வாரத்திற்காவது வைப்பதற்கு

Menaga Sathia said...

@அனாமிகா
கடலை என்பது வேர்க்கடலையா அனாமிகா??.அவனில் செய்து பாருங்க,க்ரிஸ்பியாக இருக்கும்.நான் இந்த கடலைப்பருப்பு ரோஸ்ட் அவனில் செய்ததில் 1 வாரம் வரை க்ரிஸ்பியா இருந்தது.

சாந்தி மாரியப்பன் said...

வேர்க்கடலையை இதேமுறையில் என் தோழி அவனில் செஞ்சது ரொம்ப நல்லா வந்தது.

கடலைப்பருப்பை எண்ணெய்யில்தான் இதுவரை பொரிச்சிருக்கேன். அவன்லயும் முயற்சி செய்யணும்.

01 09 10