Friday 28 October 2011 | By: Menaga Sathia

வேப்பம்பூ துவையல்/Neem Flower Thuvaiyal

 தே.பொருட்கள்
வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல் - 1/4 கப்
கா.மிளகாய் - 2
புளி - சிறிய நெல்லிக்காயளவு
பெருங்காயம் - சிறுதுண்டு
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
*உளுத்தம்பருப்பு+தேங்கய்த்துறுவல் இவைகளை தனித்தனியாக வெறும் கடாயில் வறுக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம்+காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி வேப்பம்பூவை சேர்த்து கருகாமல் வதக்கி எடுக்கவும்.

*ஆறியதும் முதலில் மிக்ஸியில் உளுத்தம்பருப்பை பொடி செய்து பின் மற்ற பொருட்களை உப்பு சேர்த்து நைசாக கெட்டியாக நீர் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

*கொஞ்சம்கூட கசப்பே தெரியாது இந்த துவையல்.

*வேப்பம்பூ கருகிவிட்டால் துவையல் கசக்கும்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

கசக்கும்ல....

MANO நாஞ்சில் மனோ said...

நானும் சாப்பிட வந்துட்டேன், இந்த துவையல் சுகருக்கும் நல்லது என்பது ஒரு ஸ்பெஷல்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சமைக்குறதுதான் சமைக்கிறீங்க, இன்டில இணைப்பு குடுக்காமலா...?? ஹி ஹி நான் இனைப்பு குடுத்துட்டேன்...

Menaga Sathia said...

@சசி
கசப்பு தெரியாது,பாகற்காய் சுவைபோல இருக்கும்...

@நாஞ்சில் மனோ

இணைத்தமைக்கு மிக்க நன்றிங்க...

Lifewithspices said...

wow superrr i shd def make it .. hv stock at home..

சாந்தி மாரியப்பன் said...

ஆரோக்கியமான துவையல்..

முற்றும் அறிந்த அதிரா said...

வேப்பம்பூ வடகம் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இது துவையல்... புதுசா இருக்கு.

Jayanthy Kumaran said...

healthy n authentic version..Thanks for sharing menaga..;)
Tasty Appetite

K.s.s.Rajh said...

நல்ல தகவல்

ராமலக்ஷ்மி said...

ஆரோக்கியமான குறிப்புக்கு நன்றி மேனகா.

Padhu Sankar said...

Healthy tuvayal but won't it be very bitter.

மனோ சாமிநாதன் said...

வேப்பம்பூ துவையலைப் பார்த்தாலே அருமையாக இருக்கிறது மேனகா! தயிர் சாதத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்!!

ஸாதிகா said...

வேப்பம்ப்பூவில் துவையலா?எங்கள் வீட்டு மரத்தில் எக்க சக்க பூக்கள்.டிரை பண்ணி பார்க்கணும்.

Priya Suresh said...

Wat a healthy thuvaiyal, love with kanji..

Sangeetha M said...

healthy n tasty thuvaiyal...my grandma use to make it in similar way..but i don't find it here..if i happens to get neem flowers then def i will try this :)

விச்சு said...

ஆரோக்கியமான சமையல் குறிப்பு...

சி.பி.செந்தில்குமார் said...

A WELL BITTER EXPERIENSE

'பரிவை' சே.குமார் said...

கேள்வி பட்டிருக்கிறேன்... சாப்பிட்டதில்லை. நல்லாயிருக்குமோ?

Raks said...

Before marriage, every one at home eats this very wanted except me :) Thanks for sharing the recipe!

Unknown said...

Good Recipe. My paati prepares it once in a while.

Asiya Omar said...

நல்ல குறிப்பு,பகிர்வுக்கு நன்றி,உதிர்ந்து கிடைக்க்கும் வேப்பம்பூ பார்க்கும் பொழுதெல்லாம் இதை வைத்து ஏதாவது செய்யணும்னு நினைப்பேன்...

Kanchana Radhakrishnan said...

healthy thuvaiyal.

01 09 10