Tuesday 16 August 2011 | By: Menaga Sathia

கடப்பா /Kadappa | Side Dish For Idli & Dosa


தே.பொருட்கள்

வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
நறுக்கிய வெங்காயம் -  1
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க
கடுகு -1/4 டீஸ்பூன்
பட்டை- சிறுதுண்டு
பிரியாணி இலை- 2
கறிவெப்பிலை -1 கொத்து

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 *பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
 *நன்கு வதங்கியதும் மசித்த உருளை+பாசிப்பருப்பு+தேவையானளவு நீர்+உப்பு சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.
 *பின் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
*இட்லி,தோசைக்கு பெஸ்ட் காம்பினேஷன்.....
Friday 12 August 2011 | By: Menaga Sathia

அம்மினி கொழுக்கட்டை/Ammini Kozhukattai

 தே.பொருட்கள்

தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்+1 டீஸ்பூன்
உப்பு = தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து


செய்முறை

*ஒரு பாத்திரத்தில் தண்ணீர்+உப்பு+1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.

 *ஆறியதும் சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் 5 நிமிடம் வேகவிடவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெந்த உருண்டைகள்+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.





*சூடாக சாப்பிட நன்றாகயிருக்கும்.


பி.கு

இதில் நான் மீதமான உளுந்து பூரணத்தை தூவி செய்துள்ளேன்,அதற்கு பதில் தேங்காய்த்துறுவல் அல்லது இட்லி மிளகாய்ப்பொடி உபயோகிக்கலாம்.
Wednesday 10 August 2011 | By: Menaga Sathia

இன்ஸ்டண்ட் ஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி/ Instant Oats Grits Idly

தே.பொருட்கள்
ஒட்ஸ் - 1 கப்
க்ரிட்ஸ் - 1 கப்
புளித்த தயிர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை
*ஒட்ஸை சிறிது தண்ணீரில் ஊறவைத்து அரைக்கவும்.

*அதனுடன் உப்பு+தயிர்+க்ரிட்ஸ் சேர்த்து தேவையானளவு நீர் கலந்து இட்லிமாவு பதத்திற்க்கு கரைத்து 10 நிமிடம் ஊறவைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

பி.கு
விரும்பினால் மிளகு,சீரகம்,இஞ்சி இவற்றை நெய்யில் தாளித்து சேர்க்கலாம்.
Tuesday 9 August 2011 | By: Menaga Sathia

கேரட் சாலட் /Carrot Salad (Japanese Style)

ப்ரெஞ்ச் சானலில் பார்த்து செய்தது..ஒரிஜினல் ரெசிபியில் SOJA சேர்த்து செய்திருந்தாங்க,அதற்கு பதில் நான் சோளம் சேர்த்து செய்தேன்...எதிர்பார்த்ததைவிட ரொம்ப நல்லாயிருந்தது..

தே.பொருட்கள்

துருவிய கேரட் - 1 கப்
ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*எள்+வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்.

*ஒரு பவுலில் கேரட்+கார்ன்+சாஸ்+பொடித்த பொடி  சேர்த்து கலந்து பரிமாறவும்.

பி.கு
சோயா சாஸில் உப்பு இருப்பதால் தேவையானால் மட்டும் உப்பு சேர்க்கவும்.
Monday 8 August 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் / Oats Cinnaman Rolls

தே.பொருட்கள்:

பப்ஸ் ஷீட் - 1
ஒட்ஸ் - 1/4 கப்
பட்டைத்தூள் - 1 டீஸ்பூன்
ப்ரவுன் சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த திராட்சை - 10
நெய் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
முட்டை - 1

செய்முறை:

*ஒட்ஸை நெய் விட்டு லேசாக வறுக்கவும்.ஆறியதும் இதனுடன் சர்க்கரை+திராட்சை+பட்டைத்தூள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*பப்ஸ் ஷீட்டில் வெண்ணையை உருக்கி தடவும்.அதன் மேல் ஒட்ஸ் கலவையை பரவலாக தூவி ஓரத்தில் கடைசிவரை மெதுவாக சுருட்டவும்.

*இதனை க்ளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரீசரில் 15 நிமிடம் வைத்தெடுத்து துண்டுகளாக வெட்டவும்.முட்டையை ஒரு கிண்ணத்தில் நன்கு கலந்து வைக்கவும்.

*அவன் டிரேயில் அடுக்கி முட்டை ப்ரஷ்ஷால் தடவி,210 °C முற்சூடு செய்த அவனில் பேக் செய்து எடுக்கவும்.

Sunday 7 August 2011 | By: Menaga Sathia

சுட்ட தக்காளி பூண்டு சட்னி/Garlic Smoked Tomato Chutney

இட்லி,தோசைக்கு செம காம்பினேஷன்.நன்றி ராதிகா!!

தே.பொருட்கள்

பூண்டுப்பல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 15-20
தக்காளி - 1
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 1 கப்

செய்முறை
*கடாயில் மிதமான தீயில் எண்ணெய் காயவைத்து பூண்டு+மிளகாயை கருகாமல் வறுத்தெடுக்கவும்.

*பின் தக்காளியை முழுதாக போட்டு நன்கு வதக்கவும்.கரண்டியால் நன்கு மசித்துவிடவும்.

*ஆறியதும் அனைத்தும் உப்பு+புளி சேர்த்து மைய அரைக்கவும்.

*மீதமான எண்ணெயை சட்னியில் ஊற்றவும்.

பி.கு
*இதற்கு தாளிக்க தேவையில்லை.எண்ணெய் காயவைத்து வதக்கவும் தேவையில்லை,அப்படி செய்தால் சட்னியின் சுவை மாறிவிடும்.

*மிளகாய்+பூண்டு கருகாமல் வறுத்தெடுக்கவும்.

*மிளகாயை அவரவர் காரத்திற்கேற்ப போடவும்.

*தக்காளி சேர்ப்பதால் தண்ணீர் ஊற்றி அரைக்கதேவையில்லை.

Thursday 4 August 2011 | By: Menaga Sathia

ஈஸி கத்திரிக்காய் பொரியல் / Easy Brinjal Poriyal

தே.பொருட்கள்
கத்திரிக்காய் - 5 சிறியது
பூண்டுப்பல் - 10
வெங்காயம் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
வடகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*கத்திரிக்காயை பொடியாகவோ அல்லது நீளவாக்கிலோ அரியவும்.

*பூண்டு+வெங்காயம் நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டுப்பல்+வெங்காயம்+கத்திரிக்காய்+சாம்பார் பொடி+உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் லேசாக நீர் தெளித்து மூடி போட்டு சிறுதீயில் கத்திரிக்காய் வேகும்வரை வேகவிடவும்.

*சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் நன்றாகயிருக்கும்.

Tuesday 2 August 2011 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சாண்ட்விச் / Brinjal Sandwich

எப்போழுதும் ப்ரெட்டில்தான்  சாண்ட்விச் செய்து சாப்பிடுவோம்.ஒரு மாறுதலுக்காக செய்தது.
தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் - 1
கட்லட் - 5 விருப்பமானது
கோஸ் இலைகள் - 5
தக்காளி - 1
வெள்ளரிக்காய் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - டோஸ்ட் செய்வதற்க்கு
உப்பு - தேவைக்கு

வெஜ் ஆம்லெட் செய்வதற்க்கு

கடலைமாவு - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

*ஆம்லெட் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து மெல்லிய தோசைகளாக ஊற்றி 2பக்கமும் வேகவைத்து தேவையானளவில் துண்டுகளாக்கவும்.

*கத்திரிக்காயை வட்டமாகவும்,சிறிது தடிமனாகவும் நறுக்கி உப்பு+மிளகுத்தூள் கலந்து தோசைக்கல்லில், வெண்ணெயில் லேசாக 2பக்கமும் டோஸ்ட் செய்யவும்.

*கோஸ் இலைகளை சிறுதுண்டுகளாகவும்,தக்காளி+வெள்ளரிக்காயை வட்டமாகவும் வெட்டவும்.

*நம் விருப்பத்திற்கேற்ப கத்திரிக்காய்+கோஸ் இலை+வெள்ளரிக்காய்+கட்லட்(அ)வெஜ் ஆம்லெட்+தக்காளி+கோஸ் இலை+கத்திரிக்காய் என அடுக்கி பரிமாறவும்.
Monday 1 August 2011 | By: Menaga Sathia

ஆப்பிள் பாயாசம் /Apple Payasam

எனக்கு பாயாசம் என்றாலே பிடிக்காது.வித்தியாசமா ஆப்பிளில் செய்து பார்க்கலாம்னு செய்து பார்த்தேன்.நினைத்ததைவிட ரொம்ப நல்லாயிருந்தது.

தே.பொருட்கள்

தோல்,விதை நீக்கி துருவிய ஆப்பிள் - 1 கப்
பால் -1கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
வெனிலா எசன்ஸ் - 2 துளி
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*பாத்திரத்தில் நெய் விட்டு ஆப்பிளை போட்டு வதக்கவும்.

*பின் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.ஆப்பிள் வெந்து பால் பாதியளவு வெந்ததும் கண்டென்ஸ்டு மில்க் ஊற்றி 5நிமிடம் கழித்து இறக்கவும்.

*பின் லேசாக ஆறியதும் ஏலக்காய்த்தூள்+முந்திரி,திராட்சை+எசன்ஸ் சேர்த்து  கலக்கவும்.

*வெகு சுவையான பாயாசம் தயார்!!

01 09 10