Monday 26 March 2012 | By: Menaga Sathia

சிக்கன் பஜ்ஜி /Chicken Bajji

 தே.பொருட்கள்

சிக்கன் துண்டுகள் - 1/2 கிலோ
மைதா - 2 கப்
முட்டை - 2
அரிசி மாவு - 1/2 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*சிக்கனில் சிறிது உப்பு+பெருஞ்சீரகத்தூள்+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
 *1 கப் நீர் சேர்த்து கடாயில் வேகவைக்கவும்.வெந்ததும் கறியை தனியாக எடுத்து வைக்கவும்.
 *நறுக்கிய வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை இவைகளை இடிப்பானில் போட்டு நன்கு நசுக்கவும்.
 *ஒரு பவுலில் மைதா+அரிசிமாவு+முட்டை+நசுக்கிய வெங்காய கலவை+சிறிது உப்பு +கறி வேகவைத்த நீர் சேர்த்து கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைக்கவும்.
 *வேகவைத்த கறிதுண்டுகளை ஒவ்வொன்றாக மைதா கலவையில் நனைத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

Aarthi said...

wow..yummy bhajji

Sangeetha Nambi said...

Will it drink much oil ?

மனோ சாமிநாதன் said...

சிக்கன் பஜ்ஜி செய்ய சுலபமான குறிப்பு இது! அதிகமான ஸ்பைஸ் இல்லாமல் நன்றாக இருக்கிறது மேனகா!

ஸாதிகா said...

பஜ்ஜி மாவு கலவை ஸ்பைஸியாக வித்தியாசமாக உள்ளது.

Packya said...

உங்கள் சமையல் குறிப்பை ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கேன்..
நிறைய குறிப்புகளை செய்து பார்த்திருக்கேன்.. எல்லாமே அருமை.. அருமை..

மாதேவி said...

சிக்கன் பஜ்ஜி சுவைக்கின்றது.

01 09 10