Sunday, 18 March 2012 | By: Menaga Sathia

மட்டன் புலாவ் /Mutton Pulao

தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
மட்டன் - 1/4 கிலோ
தயிர் - 125 கிராம்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெங்காயம் - 1 பெரியது
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

பட்டை - சிறுதுண்டு
பிரியாணி இலை - 2
கிராம்பு,ஏலக்காய் - தலா 2

செய்முறை
*மட்டனை சுத்தம் செய்து தயிர்+கரம் மசாலா+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.

*வெங்காயத்தை நீளவாக்கில் அரியவும்.சிறிது வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*அரிசியை கழுவி 20நிமிடம் ஊறவைத்து நீரைவடிக்கவும்.

*குக்கரில் சிறிது நெய் விட்டு அரிசியை 5 நிமிடம் வதக்கி எடுக்கவும்.பின் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் உப்பு+மஞ்சள்தூள்+வேகவைத்த கறி+புதினா+வறுத்த அரிசி+தேங்காய்ப்பால்+கறிவேகவைத்த நீர் 2 கப் சேர்க்கவும்.

*வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.பரிமாறும் போது வறுத்த வெங்காயத்தை சேர்த்து கிளறி பரிமாறவும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

Aarthi said...

mutton pulav romba nala iruku

Unknown said...

Feeling good to visit your place after a long time. Mutton pulao is inviting very much...

Sangeetha M said...

i stopped eating mutton long long back but your pulao prepartion make me hungry...will try veg version sometime :)
Spicy Treats
OnGoing Event:kitchen Chronicles - Summer Splash
Ongoing Event : HITS~Fiber Rich Foods

Yasmin said...

மேனகா மட்டன் புலாவ் சூப்பர்.பார்க்கும் போதே செய்ய வேண்டும் போல இருக்கிறது.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

ச்சே.... உங்கள் பதிவை இன்னிக்குதான் படிச்சேன்(திங்கள்), நேத்தே படிச்சிருந்தா (ஞாயிறு) மட்டன் புலாவ் போட்ருக்கலாம். ருசியான பதிவு!

ஸாதிகா said...

மசாலா குறைவாக பண்ணி இருக்கும் அருமையான புலாவ் சாப்பிட்டத்தூண்டுகிறது.

Vimitha Durai said...

Feel like devouring in... Looks delicious...

Asiya Omar said...

சிம்பிளாக சொல்லி சூப்பராக செய்திருக்கீங்க.

MANO நாஞ்சில் மனோ said...

நான் இப்போ ஊர்லதானே இருக்கேன், என் வீட்டம்மா பண்ணி தாரேன்னு சொல்லிட்டாங்க ஹே ஹே....

San said...

Whoa not again. Mutton pulao is making me salivate. Simply irresistible.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி.
உங்கள் பதிவுகளை hotlinksin.com இணையதளத்தில் இணைத்திடுங்கள்

foodydelight said...

very delicious biryani.
You have a wonderful blog.Happy to follow you.Do visit my new blog in your free time
http://www.foodydelight.com/

01 09 10