Monday 7 May 2012 | By: Menaga Sathia

கம்பு வெண்பொங்கல்/ Pearl Millet(Bajra) Venpongal

தே.பொருட்கள்
கம்பு - 1/2 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - 2 1/2 கப்

தாளிக்க

நெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு

செய்முறை

*கம்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும்.

*குக்கரில் கம்புரவை+பாசிப்பருப்பு+உப்பு+தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வரை நன்கு குழைய வேகவிடவும்.

*வெந்ததும் நெய்யில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து சேர்க்கவும்.

பி.கு

*வேகவைக்கும் போது சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*இதற்கு தொட்டு கொள்ள சட்னியோ,சாம்பாரோ தேவையில்லை.அப்படியே சாப்பிட சுவையாக இருக்கும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

i love these type of unique pongal..too good

ராமலக்ஷ்மி said...

சுவையான சத்தான குறிப்பு மேனகா. நன்றி.

Priya Suresh said...

Shivani foto yeduka sonna kambu pongal, super Menaga wat a healthy and nutritious dish..

சி.பி.செந்தில்குமார் said...

1. >>குக்கரில் கம்புரவை+பாசிப்பருப்பு+உப்பு+தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வரை நன்கு குழைய வேகவிடவும்.


எங்க வீட்ல ஒரு குக்கர் ஒரு விசில்தான் இருக்கு.. நாங்க 4 விசிலுக்கு எங்கே போக?


2. >>இதற்கு தொட்டு கொள்ள சட்னியோ,சாம்பாரோ தேவையில்லை.அப்படியே சாப்பிட சுவையாக இருக்கும்.

சட்னி, சாம்பார்க்கு சோம்பேறித்தனப்பட்டு இப்படி ஒரு சமாளிஃபிகேஷனா? ஹி ஹி

ஸாதிகா said...

கம்பில் வெண்பொங்கலா?இந்த வெயிலுக்கு கம்பை களியா கிண்டி நீரில் ஊற வைத்து மோரில் பிசைந்து சாப்பிட்டால அமிர்தமாக இருக்குமென கம்பு வாங்கி வைத்திருக்கிறேன்.இந்த பொங்கலையும் செய்து பார்த்து விடுகிறேன்.

Hema said...

A very yummy way to use kambu, looks good..

Angel said...

எங்க வீட்டில் கம்பு நேற்றுதான் வாங்கினேன் .செய்து விட்டு சொல்கிறேன் மேனகா .கம்பு மிகவும் ஹெல்தியாம் .இங்கே வட இந்தியர்கள் கம்பு மாவை சப்பாத்தி செய்யும்போது சேர்க்கிறார்கள்

Sangeetha M said...

nice way to usde pearl millet, very healthy n delicious breakfast too...nice idea! thanks for sharing!!
Spicy Treats

Sangeetha M said...

nice way to usde pearl millet, very healthy n delicious breakfast too...nice idea! thanks for sharing!!
Spicy Treats

Aruna Manikandan said...

sounds healthy and delicious :)

Chitra said...

Healthy recipe.. too good..will try for sure :)

ராஜி said...

கம்புல பொங்கலா?! செஞ்சு பார்த்துட வேண்டியதுதான். பகிர்வுக்கு நன்றி சகோ

01 09 10