அக்காவிடம் கற்றுக்கொண்ட குறிப்பு.இந்த சாலட் கசப்பு,புளிப்பு ,காரசுவையுடன் இருக்கும்.
இந்த கீரையில் நிறைய மருத்துவக்குணங்கள் இருக்கு.
*வெண்டைக்காய் போலவே இந்தக்கீரைக்கு ஞாபகசக்தியினை அதிகப்படுத்தும் தன்மை உண்டு.
*இந்த கீரை வயிற்றுப்புண்ணுக்கும்,தோல் அலர்ஜி உள்ளவர்களுக்கும்,நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும்,இரத்தசோகைக்கும்,சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மிக நல்லது.
*இதில் அதிகளவு விட்டமின் B1(Thiamin) ,விட்டமின் B2 (Riboflavin),விட்டமின் B3 (Niacin) ,விட்டமின் B6(Pyridoxine),விட்டமின் K, கால்சியம்,மாக்னீசியம்,சோடியம் என நிறைய இருக்கு.
*இந்த கீரையின் சாறை பயன்படுத்தினால் முடிஉதிர்வை தடுக்கும்.இந்தக்கீரையின் சாறை எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெயைக் கலந்து சூடுபடுத்தி ஆறவைத்து தினமும் பயன்படுத்தவும்.
*கீரை சாறு எடுக்க - இலைகளை நேரடியாக அடுப்பில் வாட்டி சாறினை எடுக்கவும்.
தே.பொருட்கள்
பொடியாக அரிந்த வல்லாரைக்கீரை - 1/2 கப்
பொடியாக நறுக்கிய சிகப்பு வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை
*மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.
பி.கு
சிகப்பு வெங்காயத்திற்கு பதில் நான் வெள்ளை வெங்காயம் சேர்த்து செய்துள்ளேன்.
11 பேர் ருசி பார்த்தவர்கள்:
வாரம் ஒரு முறை செய்வதுண்டு...
உங்கள் குறிப்பின்படி செய்து பார்ப்போம்...
நன்றி...
Very Nutritious Greenleaf...Thanks for sharing this info:)
Healthy salad
wow healthy salad,luks yum...
Just drooling here, irresistible.
Very healthy salad, nice tips about the keerai..
Really healthy one...
ஹா!! எங்கட வீட்டுச் சமையல் மாதிரி இருக்கே! :)
மிக நன்றாக இருக்கும். இங்கு இதற்காகவே வல்லாரை வளர்கிறது.
Kalakuringa ponga, salad looks great..
very nice and healthy...
B-O-O-O-O Halloween Event Oct 5th to Nov 5th
SYF&HWS - Cook with Spices
South Indian Cooking (SIC) Series
Never made salad in valarai..nice recipe.
Post a Comment