Thursday, 20 December 2012 | By: Menaga Sathia

நெல்லிக்காய் ஊறுகாய் /Amla Pickle

இதில் அதிகளவு விட்டமின் சி இருக்கு. 1 ஆம்லா = 2 ஆப்பிளுக்கு சமம்.இதில் எண்ணெய் குறைவாக சேர்ப்பதால் 2 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.

தே.பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் - 5
கடுகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயம்+கடுகு -தலா 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து,கொட்டைகளை நீக்கி சிறுதுண்டுகளாக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயம் போட்டு தாளித்து துண்டுகளாகிய நெல்லிக்காயை போட்டு 2நிமிடங்கள் வதக்கவும்.

*பின் மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வரை கிளறி பொடித்த வெந்தயத்தூள்+கடுகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

வரதராஜலு .பூ said...

செம டேஸ்டியான ஊறுக்காய். எனக்கும் என் மகனுக்கும் ரொம்பவே பிடிக்கும். (ஒரே வித்தியாசம் வெ.தூ + க.தூ நாங்க சேக்கமாட்டோம்)

ஸாதிகா said...

இந்த நெல்லிக்காய் இங்கு அதிகளவில் கிடைக்கிறது.நறுக்கி உப்பு மிளகாய் சேர்த்து ஃபிரிட்ஜ்ஜில் வைத்து எடுத்து சாப்பிட மிகவும் பிடிக்கும்..இந்த முறையில் ஊறுகாய் செய்து பார்க்கிறேன் மேனகா.

Asiya Omar said...

ஊறுகாய் அருமையாக செய்திருக்கீங்க.ஊறுகாய்ப் பிரியர்களுக்கு மிக்க கொண்டாட்டம்.

Santhi said...

Hi Menaga, I like this pickle too. Can you tell me how to make Thinai Murruku?

Unknown said...

yummy pickle...
SYF&HWS - Cook With SPICES" Series
South Indian Cooking

divya said...

looks irresistible :)

divya said...

yummy n delicious..

Priya Suresh said...

Fingerlicking oorukai, love it.

Unknown said...

Nellikai pickle enga mamiyar seiyvaga.. Naan try panniyathillai.. Seythu parkuren..

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப நல்லா இருந்துச்சு......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Shama Nagarajan said...

inviting dear..Join me in Fast Food - Poha event in my blog.

Priya ram said...

உங்க ஊறுகாய் பார்க்கும் போதே நாக்கில் நீர் சுரக்கிறது.. சூப்பர்.... இந்த ஊறுகாய் சாப்பிட்டு, ஒரு வாய் தண்ணீர் குடிச்சா, வாய் முழுக்க இனிப்பா இருக்கும்....

Menaga Sathia said...

@Santhi

அரிசி மாவுக்கு பதில் தினை மாவை பயன்படுத்தி,எப்போழுதும் நாம் முறுக்கு செய்வதை போலவே மீதமுள்ள பொருட்களை போட்டு செய்யலாம்.

மாதேவி said...

நெல்லிக்காய் ஊறுகாய் நன்றாக இருக்கின்றது மேனகா.

நாங்களும் இதேபோல்தான் செய்வோம். உழுத்தம் பருப்பு சேர்ப்பதில்லை.

Unknown said...

Mouthwatering pickle...love it...

Todays Recipe : Chettinad Egg Curry
TamilsKitchen

Hema said...

This with some thayir saadam,mmmm...

Unknown said...

Mouth watery and healthy too. First time here. I'm your new follower. Do visit mine too.

Unknown said...

நெல்லி ஊறுகாய் பல மாதங்கள் வைத்திருப்பது எப்படி PLZ HELP ME

01 09 10