தே.பொருட்கள்
காய்ந்த வெள்ளை பட்டாணி - 1/2 கப்
மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்
துருவிய கேரட் -1/8 கப்
துருவிய மாங்காய் -1/4 கப்
உப்பு -தேவைக்கு
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
இஞ்சித்துறுவல் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
செய்முறை
*பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு+மஞ்சள்தூள்+மூழ்குமளவு நீர் ஊற்றி வேகவைத்து நீரை வடிக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ளவைகளை கொரகொரப்பாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்.
*பின் கேரட் துறுவல்+மாங்காய்த்துறுவல்+அரைத்த தேங்காய் கலவை சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் அருமை.
இதை செய்தபிறகு வீட்டில் சாப்பிடணுமா அல்லது பீச்சுக்கு எடுத்துப்போய் சாப்பிடணுமா?
தனியாகப்போகணுமா, ஜோடியாகப்போகணுமா?
;)))))
காரசாரமான சுண்டல் பகிர்வுக்கு நன்றிகள்.
அருமை... செய்து பார்ப்போம்... நன்றி...
தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல்ன்னு கூவனும் போல இருக்கு. அடுத்து பீச் முறுக்கு சுடுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க
very very delicious sundal :) and a healthy one !! love it !!
சுண்டல் அருமை.
சூப்பர்.எனக்கு மிகவும் பிடிக்கும்,தெருவில் சுண்டல் வண்டி வந்தால் ஒரு பாக்கட்டாவது வாங்கி சாப்பிடாமல் இருந்ததில்லை.வீட்டிலேயே இப்படி செய்து தந்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்.
Yaarukku daan idu pudikaadu. super akka
Thanks for linking to Gayathri's WTML Event.
my fav sundal hard to resist
delicious sundal, making me nostalgic :-)
சாப்பிட்டதே கிடையாது. எனக்கு ஒரு சுருள் ப்ளீஸ்.
சூப்பரா இருக்கு... அப்படியே ஒரு கப் இங்க அனுப்புங்க
Super. Reminds me of chennai beach :-)
அருமையான புகைப்படங்களுடன்
சுவையான பதிவு.
வயிற்றைக் கிளறுகிறது
super sundal, my fav lovely clicks...
Pondy beach sundal nabagam varuthu..Delicious sundal.
சுண்டல் சூப்பர்.வாசம் இங்க வரது
Priya sonna madiri than, Pondy beach and sundal than nyabagam varudu, I am also from there..
Post a Comment