Thursday 14 November 2013 | By: Menaga Sathia

ஆந்திரா வெஜ் தாளி /Andhra Veg Thali




Recipe Source : Here


ஆந்திரா வெஜ் மெனுவில்  சாதம், சாம்பார்,ரசம்,கோவைக்காய் வறுவல்,வெண்டைககய் பொரியல் என செய்துள்ளேன்.

ஆந்திரா சாம்பார் / Andhra Sambhar


தே.பொருட்கள்

து.பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி - 1
புளிகரைசல் -1/2 கப்
முருங்கைக்காய் -1
கேரட் -2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வதக்கி அரைக்க

கசகசா - 1 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய் -1

செய்முறை

*குக்கரில் துவரம்பருப்பை  மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.வெந்ததும் நறுக்கிய காய்கள் சேர்த்து  2 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது+வெங்காயம்+தக்காளி +உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி  அரைத்த விழுது+சாம்பார் பொடி+புளிகரைசல் சேர்த்து  கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் வேகவைத்த காய் பருப்பு கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து  கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

ஒமம் தக்காளி  ரசம் / Carom Flavoured Tomato Rasam / Tomato Vammu Charu


இதில் ஒமம் சேர்த்து தாளிப்பது தான் செம ருசி,மறக்காமல் சேர்த்து செய்யவும்.

தே.பொருட்கள்

தக்காளி -2
புளி -சிறிய எலுமிச்சை பழளவு
வேகவைத்த துவரம்பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
ரசப்பொடி -2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
ஓமம் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஓமம் -1/4 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் -1

செய்முறை

*புளியை 1 கப் நீரில் கரைத்து  வடிகட்டவும்.அதில் அரைத்த தக்காளி+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது 1/4 டீஸ்பூன் ஒமத்தை கையால் நுணுக்கி போடவும் மற்றும் ரசப்பொடி+மஞ்சள்தூள் +கறிவேப்பிலை சேர்த்து  மேலும் கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு+1/4 கப் நீர்+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி தாளித்து சேர்க்கவும்.


கோவைக்காய் வறுவல்/ Ivy Gourd Fry  | Dondakaya Kobbarikaram Vepudu (Fried Ivy Gourd With Coconut Spice Mix)


இந்த  வறுவல் வித்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது...

தே.பொருட்கள்

கோவைக்காய் - 1/4 கிலோ
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு+எண்ணெய் =  தேவைக்கு

பொடிக்க

முந்திரி -2 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -1
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்

செய்முறை 

*கோவைக்காயை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். நான் எண்ணெயில் பொரிக்காமல் நான் ஸ்டிக் கடாயில் 15 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்து செய்துள்ளேன்.

*பொடிக்க கொடுத்துள்ளவைகளில் உப்பு சேர்த்து  நைசாக பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து  பொடித்த பொடி+பொரித்த கோவைக்காய்+தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

வெண்டைக்காய் பொரியல் | Bendakaya Vepudu | Okra Poriayl



Recipe Source : Here

தே.பொருட்கள்

வெண்டைக்காய் -1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது -1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த வேர்க்கடலை -1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு -1/2 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் -1
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*வெண்டைக்காயை கழுவி துடைத்து  சிறுதுண்டுகளாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது+வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் மிளகாய்த்தூள் + வெண்டைக்காய் +உப்பு சேர்த்து வதக்கவும்.இடையே வெண்டைக்காயின் கொழகொழப்பு போக 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.

*வெந்ததும்  தேங்காய்த்துறுவல்+வேர்க்கடலை பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Vimitha Durai said...

Super thali akka

Lifewithspices said...

andha kovakkai curryyy .. yumm naa oorardhu..

meena said...

wow wonderfull platter.love u r kovakkai version.

Sangeetha Priya said...

very superb thali n love all the recipes!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் பார்க்கவே காரசாரமாக ஜோரா இருக்குது.

பாராட்டுக்கள் பகிர்வுக்கு நன்றிகள், மேனகா.

[தங்களை என் கிளி தேடுகிறது. 79/80 மார்க் வாங்கியுள்ளீர்களாம். இன்னும் ஒரே ஒரு மார்க் உங்களுக்குக் கொடுக்கணுமாம். ;) ]

Asiya Omar said...

மிக அருமை.

Thenammai Lakshmanan said...

ப்ரமாதம் டா :)

Shama Nagarajan said...

yummy thali dear

Priya Anandakumar said...

Super Menaga, kalakkureenga....

Priya said...

hmm romba arumai

'பரிவை' சே.குமார் said...

அருமையான தாளி அக்கா.
படங்களும் சூப்பர்.

MANO நாஞ்சில் மனோ said...

அந்த கோவைக்காய் வறுவல் கலரே சூப்பரா இருக்கே ம்ம்ம்ம் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன், வீட்டம்மாவை செய்ய சொல்லி தர சொல்லனும் நன்றி.

Unknown said...

wow wow so inviting and delicious thali :) looks super yumm !!

enrenrum16 said...

நல்ல முயற்சி... கோவைக்காய் வறுவல் முயற்சி செய்து பார்க்கிறேன்... நன்றி.

Chitra said...

Wow, supreb thali , makes me drool. I too have posted andhra thali long back :)Have to make again.U tempted me.

Unknown said...

omg..wonderful spread with tempting dishes...kalakitingha...

Jaleela Kamal said...

ஆந்திரா மீல்ஸ் அருமை மேனகா

ஸாதிகா said...

சூப்பர்தாளி.நான் கூட வட்ட வட்ட மாக கோவைக்காயை நறுக்க சோம்பல் பட்டு இப்படி நீள வாக்கில் நறுக்கி பொரியல் கூட்டு வைப்பேன்.

Hema said...

paarkave kara saarama irukku, have to try the omam rasam..

01 09 10