தே.பொருட்கள்
பனீர் -250 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டீஸ்பூன்
பால் - 1/4 கப்
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் -தேவைக்கு
செய்முறை
*பனீரை சிறிது எண்ணெயில் வறுத்து உப்பு கலந்த நீரில் 10 நிமிடம் போட்டு நீரை வடிகட்டவும்.
*வெங்காயத்தை முழுதாக தோலுரித்து நான்காக கீறி உப்பு கலந்த கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து அரைக்கவும்.
*தக்காளியையும் கொதிக்கும் நீரில் போட்டு தோலுரித்து அரைக்கவும்.
*பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு வெங்காய விழுது+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி விழுது என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் தூள் வகைகள்+உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
*தேவையானளவு நீர் + பால் சேர்த்து கொதிக்க வைத்த பின் பனீர் துண்டுகளை சேர்த்து 5நிமிடம் கழித்து இறக்கவும்.
பி.கு
*வெங்காயத்தை வேகவைத்து அரைப்பதால் க்ரேவி கெட்டியாக நன்றாக இருக்கும்.
*பாலுக்கு பதில் ப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம்.
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
அன்புள்ள மேனகா, வணக்கம்.
பட்டர் பனீர் மசாலா அருமை. பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
என் தொடரில் 4 பகுதிகள் தங்களின் வருகைக்காகக் காத்துள்ளன. ஞாபகம் இருக்கட்டும். ;)
அன்புடன் கோபு
நல்ல சமையல் குறிப்பு...
ஹோட்டலுக்குச் சென்றால் என் மகளுக்கு இதுதான் வேணும்... சாப்பிடுவது கொஞ்சம் என்றாலும் விருப்பம் இதன் மேலே...
அருமையான படம்... பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுது...
வாழ்த்துக்கள்.
omg mouthwatering butter paneer masala :) looks so delicious !!
inviting dear
பார்க்கும் போதே கூட ரெண்டு சப்பாத்தி சாப்பிடனும் போல இருக்கே...!
பார்க்கும்போதே எச்சி ஊறுது!
தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.
Mouthwatering and made very beautiful Menaga... aahaa....
wow, super tempting recipe..
Appadiye parcel pannidunga yennaku Menaga, yennoda fav.
அது என்னங்க கஷ்மீரி மிளகாய்த்தூள் ?
செய்து சாப்பிட்டுப் பார்க்கவேண்டும் ரெசிபி குறிப்பிற்கு நன்றி
நல்லதொரு குறிப்பு.
அருமையாக செய்திருக்கீங்க மேனகா.
@ Viya pathy
காஷ்மீரி மிளகாய்த்தூள் நல்ல கலராவும்,காரம் குறைவாகவும் இருக்கும்...
my all time fav. delicious
delicious butter masala, so colorful n flavorful!!!
tempting and delicious masala
பட்டர் பனீர் மசாலா ஜூப்பரு.
Post a Comment