தினை பயன்கள்
*இதில் புரதம்,கொழுப்புசத்து,கனிமசத்து,ஈரப்பதம்,நார்ச்சத்து,மாவுச்சத்து என நிறைய இருக்கு.
*இது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும்,எனினும் உடலை காக்கும் தன்மையுடையது.
*இதில் இரும்புச்சத்து அரிசி,கோதுமை,ராகியை விட 2 மடங்கு அதிகம் உள்ளது.
தே.பொருட்கள்
தினை அரிசி -1 கப்
பாசிப்பருப்பு -1/4 கப்
பால் - 1 கப்
கல்கண்டு -3/4 கப்
ஏலக்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் -1 டீஸ்பூன்
செய்முறை
*குக்கரில் 1/2 டீஸ்பூன் நெய்யில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து அதனுடன் தினை+பால்+நீர் 1 1/4 கப் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் நன்கு மசித்து,கல்கண்டை பொடித்து சேர்க்கவும்.*கல்கண்டு கரைந்து கெட்டியாகி வரும் போது பச்சை கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
*பின் மீதமுள்ள நெய்+ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.
*கொஞ்சம் நீர்க்க இருக்கும் போதே இறக்கவும்,ஆறியதும் பொங்கல் கெட்டியாகி விடும்.
*மிகவும் சுவையாக இருக்கும் இந்த பொங்கல்.கல்கண்டு பதில் வெல்லம் சேர்த்து செய்யலாம்.






yummy tempting preparation
ReplyDeleteOru bowl thanga, super delicious sweet pongal Menaga.
ReplyDeleteHealthy ....and its so tempting
ReplyDeleteso nice sweet pongal.. healthier than the original
ReplyDelete