ப்ரியாவிடம்பேசியபோது பேக்கிங் பற்றிய டிப்ஸ்களை சொன்னபோது அதன்படி இந்த ப்ரெட் செய்ததில் நன்றாக வந்தது.நன்றி ப்ரியா !!
பொதுவாக ஈஸ்ட் சேர்த்து செய்யும் குறிப்பில் மாவினை வெப்பமான இடத்தில் வைத்து 2 - 3 முறை அதற்கு ப்ரூப் கொடுக்கவேண்டும்.எவ்வளவுக்கு அதிகமாக ஈஸ்ட்டிற்கு ப்ரூப் கொடுக்கிறமோ அவ்வளவுக்கு ப்ரெட் நன்றாக சாப்ட்டாக இருக்கும்.
இன்ஸ்டன் ஈஸ்டாக இருந்தால் மாவில் அப்படியே சேர்த்து பிசையலாம்.ஆக்டிவ் ஈஸ்ட்டாக இருந்தால் வெதுப்பான நீரில் அதாவது நம் கைவிரல் பொறுக்கும் சூட்டில் நீர் இருக்கவேண்டும்.அதனுடன் எப்போழுதும் சர்க்கரை சேர்த்தால் தான் ஈஸ்ட் பொங்கி வரும்.
ஆனால் இந்த ப்ரெட்டில் அப்படி 2 -3 முரை ப்ரூப் செய்யத் தேவையில்லை.முதல்நாள் இரவே மாவினை தயாரித்து வெப்பமான இடத்தில் வைத்து மறுநாள் பேக் செய்யலாம்.
Recipe Source : Priyas Versatile Recipes
தே.பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
ப்ரெட் மாவு - 1 கப்
ஆக்டிவ் டிரை ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் ( I used Grapeseed Oil )
செய்முறை
* 1 கப் வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் + சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
*பாத்திரத்தில் 2 வகை மாவுகள்+உப்பு+ஈஸ்ட் கலவை சேர்க்கவும்.தேவைக்கு நீர் சேர்த்து மாவினை தளர்த்தியாக பிசையவும்.
*கையில் என்ணெய் தடவி மாவின் மேல் தடவி க்ளியர் கவரால் மூடி வெப்பமான இடத்தில் இரவு முழுவதும் வைக்கவும்.
*மறுநாள் மாவு கலவை நன்கு பொங்கி இருக்கும்.
*பொங்கிய மாவை நன்றாக பிசையவும்.
*ப்ரெட் பானில் எண்ணெய் / வெண்ணெய் தடவி வைக்கவும்.
*மாவினை இருமடிப்பாக மடித்து ப்ரெட் பானில் வைத்து அதன் மேல் எண்ணெய் தடவி கத்தியால் 3 கோடுகள் கீறவும்.
* அதனை மறுபடியும் க்ளியர் ராப் கவரில் மூடி 1 மணிநேரம் வெப்பமான இடத்தில் மாவு பொங்கும் வரை வைக்கவும்.
*அவனை 180°C 15 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்,பின் ப்ரெட் பானை அவனில் வைத்து 50-55 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
*மேல் பாகம் வெந்து ப்ரவுன் கலரில் வந்தால் அலுமினியம் பாயில் கொண்டு மூடி பேக் செய்யவும்.
பி.கு
*இதில் மல்டிக்ரெயின் ஆட்டா உபயோகித்துள்ளேன். இதனை வெறும் கோதுமை மாவு அல்லது ப்ரெட் மாவு மட்டும் சேர்த்து செய்யலாம்.

8 பேர் ருசி பார்த்தவர்கள்:
Super ponga, kalakitinga.. bread semaiya irruku Menaga..
looks perfect.. very soft and healthy plan
yummy bake...perfect
Perfect texture of bread... Superb...
ப்ரெட் மாவு என்றால் என்ன மேனகா?
“ப்ரூப்” செய்வது என்றால் என்ன?
@ஹூசைனம்மா
ப்ரெட் மாவு என்பது ப்ரெட் செய்வதற்கென்று தனியாக விற்கப்படும் மாவு,மைதா மாவு செக்ஷனில் இருக்கும் பாருங்கள்...
ப்ரூப் என்பது ஈஸ்ட் சேர்த்து செய்யப்படும் பொருட்களை 2-3 முறை மாவு கலவையை பொங்க வைத்து பேக் செய்வது..
Superb bread recipe dear...the bread looks so soft and fluffy :)
bread arumaiya iruku menaga ...
Post a Comment