Thursday 30 January 2014 | By: Menaga Sathia

MTR ஸ்டைல் இட்லி மிளகாய்ப் பொடி /MTR Style Idli Milagai Podi | Idli Podi | Chutney Powder | Side Dish For idli / Dosa


MTR  பிராண்ட்  இட்லி பொடி சாப்பிட்டவங்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும். இதில் சிட்ரிக் ஆசிட் புளிப்பு சுவைக்காக சேர்க்கபடுகிறது.விரும்பினால் சேர்க்கலாம்.

Recipes Source : Here

தே.பொருட்கள்

காய்ந்த மிளகாய் - 12
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1/2 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
சிட்ரிக் ஆசிட் -1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து வெடித்த பின் தனியாக வைக்கவும்.

மேலும் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் மற்றும் உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை இவற்றை தனித்தனியாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் மிளகாய்+உப்பு சேர்த்து பொடிக்கவும்.
 *பின் உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை சேர்த்து பொடித்த பின் தேவைக்கு உப்பு+பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும்.
 *கடைசியாக பொரித்த கடுகு+சிட்ரிக் ஆசிட் செர்த்து பல்ஸ் மோடில் (Pulse Mode) பொடிக்கவும்.
*ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.
*இதனை சாதத்தில் கலந்து நெய் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

This is off to Priya's Vegan Thursday
Tuesday 28 January 2014 | By: Menaga Sathia

சிக்கன் குருமா - 2 /Chicken Kurma -2


இந்த குருமாவில் தக்காளி சேர்க்க தேவையில்லை

பரிமாறும் அளவு - 3
சமைக்கும் நேரம் -  < 30 நிமிடங்கள்
ஊறவைக்கும் நேரம் - 30 நிமிடங்கள்

தே.பொருட்கள்
சிக்கன் -1/2 கிலோ
நறுக்கிய  வெங்காயம் - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது  -  1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
கெட்டி தயிர் -1/2 கப்
கரம் மசாலா -  1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க 
பட்டை -சிறுதுண்டு
பிரியாணி இலை - 3
அன்னாசிப்பூ - 1
கிராம்பு+ஏலாக்காய் - தலா 3

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 3 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி - 3

செய்முறை

*சிக்கனில் தயிர்+கரம் மசாலா+சீரகத்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


*பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி  தூள் வகைகள்  சேர்த்து வதக்கவும்.

*பச்சை வாடை அடங்கியதும் ஊறவைத்த சிக்கன்  சேர்த்து நன்கு வதக்கியபின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறி உப்பு+  1 1/2 கப் நீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேகவிடவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் வேகவைத்த உருளைகிழங்கு சேர்த்து (விரும்பினால்) மேலும் 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்

*கடைசியாக எலுமிச்சைசாறு+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.


Monday 27 January 2014 | By: Menaga Sathia

மலபார் மட்டன் பிரியாணி /Malabar Mutton Biryani


இந்த பிரியாணிக்கு அரிசியை வடிக்காமல் தம் முறையில் செய்வது, வெங்காயம்+முந்திரி திராட்சை இவற்றை வறுத்து சேர்ப்பது மற்றும் பிரியாணியை தம் செய்வது இதுதான் இதில் முக்கியமானது.

பரிமாறும் அளவு -  4 நபர்கள்
சமைக்கும் நேரம் -  > 1 மணிநேரம்

Recipe Source : சமைத்து அசத்தலாம்

தே.பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய வெங்காயம்  - 3 பெரியது
தக்காளி -  2 பெரியது
நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லித்தழை - தலா 1/2 கப்
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
ரோஸ்வாட்டர் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
நெய் - 1/4 கப்
எண்ணெய் + உப்பு = தேவைக்கு

அலங்கரிக்க

சிவற வறுத்த வெங்காயம் - 1
வறுத்த முந்திரி+திராட்சை - தேவைக்கு

சாதம் செய்ய

பாஸ்மதி -  3 கப்
முழு மிளகு -8
பிரியானி இலை -2
கிராம்பு -3
பட்டை - சிறு துண்டு
ஏலக்காய் -3

அரைக்க

இஞ்சி -  1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 10
பச்சை மிளகாய் -3

செய்முறை

*மட்டனில் மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+1 கப் நீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேகவைக்கவும்.

*பாத்திரத்தில்  4/12 கப் நீர் கொதிக்க வைத்து உப்பு+பிரியானி இலை+கிராம்பு+மிளகு+ஏலக்காய்+பட்டை +சிறிது எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.

*1 கப் அரிசிக்கு 1/1/2 கப் நீர் சேர்க்கவும்.
*நீர் கொதிததும் கழுவிய அரிசியை சேர்த்து வேகவிடவும். அரிசி 3/4 பதம் வெந்து இருக்கும்.
*வெங்காயம்+முந்திரி+திராட்சை வறுத்து வைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
*வெங்காயம்+தக்காளி +உப்பு சேர்த்து வதக்கவும்.
*பின் கரம் மசாலா+தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
*அனைத்தும் நன்கு வதக்கிய பின் தயிர்+புதினா கொத்தமல்லி சேர்க்கவும்.
*இதனுடன் வேகவைத்த மட்டனை நீரோடு சேர்த்து கொதிக்கவிடவும்.கிரேவி கெட்டியாக வந்ததும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*இதில் பாதி கிரேவியை தனியாக எடுத்து வைத்து அதில் பாதி சாதம்+சிறிது வறுத்த வெங்காயம் +சிறிது முந்திரி திராட்சை+1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் +சிறிது கொத்தமல்லித்தழை +சிறிது நெய் சேர்க்கவும்.

*
*இதே போல் இன்னொரு லேயர் போடவும்.
*தோசைக்கல்லை காயவைத்து அதன்மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறுதீயில் 20 நிமிடம் தம் போடவும்.
*பின் சாதத்தை உடையாமல் கிளறிவிட்டு  விரும்பிய ராய்த்தா+வறுவலுடன் பரிமாறவும்.

பி.கு

*இதில் நான் ரோஸ் வாட்டர் பதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து செய்துள்ளேன்.புதினா என்னிடம் இல்லாததால் கொத்தமல்லித்தழை மட்டும் 1 கட்டு சேர்த்து செய்தேன்.சுவையில் எந்த மாற்றமும் இல்லை.
Thursday 23 January 2014 | By: Menaga Sathia

பேக்ட் சாக்லேட் க்ரீம் / Créme Au Chocolat | Baked Chocolate Cream | Home Bakers Challenge


இந்த மாதம் Home Bakers Challenge-ல் ப்ரியா சுரேஷ் ப்ரெஞ்ச் பேக்கிங் ரெசிபிகளை கொடுத்திருக்காங்க.அதில் நான் பேக்ட் சாக்லேட் க்ரீம் செய்தேன்.இங்கு மிகவும் பிரபலமான டெசர்ட் இது.

Recipe Source : Cuisine- Facile

பரிமாறும் அளவு - 3 நபர்கள்
தயாரிக்கும் நேரம் - 15 நிமிடங்கள்
பேக்கிங் நேரம் - 30 நிமிடங்கள்
ப்ரிட்ஜில் குளிரவைக்கும் நேரம் - 120 நிமிடங்கள்

தே.பொருட்கள்

முட்டை மஞ்சள்கரு - 2
டார்க் சாக்லேட் - 50 கிராம்
ப்ரெஷ் க்ரீம் -1/2 கப்
பால் -1/4 கப்
ஐசிங் சுகர் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பாத்திரத்தில் பால்+ப்ரெஷ் க்ரீம் சேர்த்து சூடு செய்யவும்.கொதிக்கவிடவேண்டாம்.
 *மற்றொரு பவுலில் மஞ்சள் கரு+சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
 *சாக்லேட்டை துண்டுகளாகிஅதில்  சூடான பாலை ஊற்றி நன்கு கரையும் வரை கலக்கவும்.
*ஆறியதும் மஞ்சள் கருவில் ஊற்றி கலக்கி வடிகட்டவும்.

  *அதனை பேக்கிங் செய்யும் சிறிய பவுல் அல்லது Ramekins ஊற்றி பேக்கிங்  டிரேயில் வைக்கவும்.அதில் 2 கப் கொதிக்கும் நீரை ஊற்றவும்.

*அவனை 170°C  சூடு செய்து 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
*ஆறியதும் ப்ரிட்ஜில் 2 மணிநேரம் குளிரவைத்து பரிமாறவும்.

பி.கு

*பரிமாறும் போது மேலே விப்பிங் க்ரீம் வைத்து பரிமாறலாம்.

*பேக் செய்து எடுக்கும் போது க்ரீம் வேகாத மாதிரி இருக்கும்,ஆறியதும் கெட்டியாகிவிடும்.எனவே 30 நிமிடங்கள் வரை பேக் செய்தால் போதுமானது.
Monday 20 January 2014 | By: Menaga Sathia

பாதாம் அல்வா -2 / Badam Halwa -2


பரிமாறும் அளவு - 2 நபர்கள்
ஊறவைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 15 நிமிடங்கள்

தே.பொருட்கள்

பாதாம் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1/4 கப்+ 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ -சிறிது
நெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பாதாமை சூடு நீரில் 20 நிமிடம் ஊறவைத்து தோல் எடுத்து 1/4 கப் பால் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.


*1 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் சிறிது நெய்+அரைத்த பாதாம் விழுது+சர்க்கரை சேர்த்து கிளறவும்.


*இடையிடையே நெய் சேர்க்கவும்.ஒட்டாமல் சுறுண்டு வரும் போது குங்குமப்பூ பால் சேர்த்து கிளறவும்.


*ஒரங்களில் நெய் விட ஆரம்பித்ததும் இறக்கவும்.

*சுவையான பாதாம் அல்வா ரெடி!!

பி.கு

*ஒரங்களில் நெய் விட ஆரம்பிக்கும்போது அல்வாவை சிறிது எடுத்து உருண்டை பதத்தில் உருட்ட வந்தால்  அதுவே சரியான பதம்....
Wednesday 15 January 2014 | By: Menaga Sathia

சிம்பிள் வெஜ் குருமா / Simple Veg Kurma | Side Dish For Chapathi - A Guest Post By Anitha

அனிதா - இவரும் எனக்கு அறுசுவையில் அறிமுகமானவர்தான்.ஒரு முறை மெயில் செக் செய்த போது இவரிடமிருந்து மெயில் வந்தது.இவர் நான் வசிக்கும் இடத்திலிருந்து பக்கத்து ஊரில் தான் இவரும் வசிக்கிறார்.அதுமட்டுமில்லை இவருடைய புகுந்த வீடும் என்னுடைய ஊர் தான்.

அதிலிருந்து இவரிடம் போன் மூலம் பேசுவேன்.எனக்கு இதுவரை நல்ல நெருங்கிய தோழியாகவும்,ஆலோசனை வழங்கும் சகோதரியாகவும் இருந்து வருகிறார்.எங்கள் நட்பு கடந்த 7 வருடங்களாக இன்றுவரை தொடர்கிறது.எப்போழுதும் தொடரட்டும் எங்கள் நட்பு...

இவர் மட்டுமில்லாமல் இவருடைய  Co - Sister & SIL  இருவரும் எனக்கு தோழிகள் தான்.என் மகன் பிறந்திருந்த போது மருத்துவமனையில் நேரமிருக்கும் போது என்னை வந்து பார்த்துவிட்டு போவார்.இவருடைய  Co - Sister & SIL  கூட என்னை நன்கு கவனித்துக் கொண்டனர்.

அப்போழுது இவர் எனக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க கொடுத்தார்.அவரால் தான் அந்த கதையை முழுமையாக படித்து தெரிந்துக்கொண்டேன்.இன்னும் இதுவரை அந்த புத்தகத்தினை திருப்பிக் கொடுக்கவில்லை.நானே எடுத்துக்கலாம்னு இருக்கேன்...அனிதா இந்த வரியினை படித்து அடிக்க வரதுக்குள் நான் எஸ்கேப்..

இவர் கேரளா சமையலை நன்கு சமைப்பார்.கெஸ்ட் போஸ்ட் போடுமாறு கேட்டுக்கொண்ட போது உடனே எனக்கு மெயில் செய்த குறிப்பு இது. மிக்க நன்றி அனிதா!!


இந்த குருமாவின் ஸ்பெஷலே வெங்காயம்+தக்காளி சேர்க்க தேவையில்லை.குறைவான எண்ணெயும் தான் தேவைப்படும்.தாளிக்கவும் தேவையில்லை.


தே.பொருட்கள்

காய் கலவை - 2 கப் கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி மற்றும் உருளை
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வறுத்து அரைக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -4 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் -3
இஞ்சி - 1சிறுதுண்டு
வெந்தயம் + கசகசா - தலா 1/2  டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கிராம்பு - 2
முந்திரி -5
பட்டை -சிறுதுண்டு

செய்முறை

*வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெயில் வருத்து நைசாக அரைக்கவும்.


 *காய்களை குக்கரில் மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து முழ்குமளவு நீர் விட்டு  2 அல்லது 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
 *ப்ரெஷர் அடங்கியதும் அரைத்த விழுதினை சேர்த்து 5 அல்லது 7 நிமிடங்கள் வரை கொதிக்கவைத்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
*சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

பி.கு

நானும் செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது.போட்டோ எடுப்பதற்குள் குருமா காலியாகிடுச்சு.
Thursday 9 January 2014 | By: Menaga Sathia

கர்நாடகா ஸ்டைல் கலந்த சாதம் / Karnataka Style One Pot Meals

கர்நாடகா ஸ்டைல் கலந்த சாதம் குறிப்பில்  செய்திருப்பது

கர்நாடகா ஸ்டைல் எலுமிச்சை சாதம்

தேங்காய் மாங்காய் புளிசாதம்

தயிர்சாதம்.


தேங்காய் மாங்காய் புளிசாதம்

Recipe Source : Monsoonspice



தே.பொருட்கள்

சாதம் -2 கப்
தேங்காய்துறுவல் -1/2 கப்
மாங்காய்துறுவல் -1 கப்
பச்சை மிளகாய் -2
கடுகுப்பொடி -1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 21/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கடலைப்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை -1 கைப்பிடி
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*தேங்காய்த்துறுவல்+மாங்காய்த்துறுவல்+பச்சை மிளகாய் சேர்த்து நீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து  அரைத்து தேங்காய் மாங்காய் துறுவலை சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறி மஞ்சள்தூள்+கடுகுப்பொடி+உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

*இதில் ஆறவைத்த சாதம்+எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி பரிமாறவும்.



Friday 3 January 2014 | By: Menaga Sathia

கவுனி அரிசி பாயாசம் /Kavuni Arisi(Black Rice) Payasam |Chettinad Spl!!

கவுனி அரிசியை பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.

தே.பொருட்கள்

கவுனி அரிசி -1/4 கப்
சர்க்கரை -1/2 கப்
பால் - 1 கப்
தேங்காய்ப்பால் -1/4 கப்


செய்முறை

*கவுனி அரிசியை 1 மணிநேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.கொதிவரும் போது அரைத்த அரிசியை சேர்த்து கைவிடாமல் கிளறி வேகவைக்கவும்.



*அரிசி வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.கரைந்ததும் தேங்காய் பாலை ஊற்றி இறக்கவும்.


Sending To Gayathri's WTML Event
01 09 10