Thursday 29 January 2015 | By: Menaga Sathia

நாஞ்சில் ஸ்டைல் வெஜ் தாளி / NANJIL STYLE VEG THALI | THALI RECIPES





print this page PRINT IT

நாஞ்சில் நாடு- கன்னியாகுமாரி,நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைக் கொண்டது.கேரளா சமையல் போலவே இங்கும் சமையலில் அதிகம் தேங்காயும்,தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெயும் பயன்படுத்துகிறார்கள்.

இதில் நான் சமைத்திருப்பது

பருப்புகறி+நெய்
கத்திரிக்காய் முருங்கைக்காய் குழம்பு
தக்காளி ரசம்
வாழைப்பூ தோரன்
அவியல்
வெள்ளரிக்காய் கிச்சடி
மசால் வடை மற்றும்
காஜூ கத்லி

இதில் காஜூ கத்லி தவிர மொத்த சமையலும் செய்து முடிக்க 1 மணிநேரம் 30 நிமிடங்கள் ஆனது.

வாழைப்பூ தோரன் / Vazhaipoo ( Banana Blossom ) Thoran

தே.பொருட்கள்

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ- 2 கப்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு -தேவைக்கு

அரைக்க‌

தேங்காய்த்துறுவல் -3/4 கப்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்

தாளிக்க‌

எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய்- 1

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வாழைப்பூ+உப்பு சேர்த்து 1/2 கப் அளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நீர் சேர்க்காமல் மிக்ஸியில் 1 சுர்று சுற்றி எடுக்கவும்.

*வாழைப்பூ வெந்ததும் கறிவேப்பிலை மர்றும் அரைத்த தேங்காய் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கிளறி இறக்கவும்.

வெள்ளரிக்காய் கிச்சடி / Cucumber Kichadi

தே.பொருட்கள்

வெள்ளரிக்காய் 1 சிறியது
தயிர் 1/2 கப்
உப்பு தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கறிவேப்பிலை -1 கொத்து

அரைக்க‌

தேங்காய்த்துறுவல் -1/3 கப்
பச்சை மிளகாய்- 1 சிறியது
சீரகம் -1/4 டீஸ்பூன்
கடுகு -1/8 டீஸ்பூன்

செய்முறை

*வெள்ளரிக்காயை தோல் சீவி  இரண்டாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி பொடியாக நறுக்கவும்.

*கடாயில் நறுக்கிய வெள்ளரிக்காய்+உப்பு மற்றும் தேவைக்கு நீர் சேர்த்து வேகவிடவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நீர் சேர்க்காமல் மிக்ஸியில் 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

*வெள்ளரிக்காய் வெந்ததும் அரைத்த விழுதினை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

*நன்கு ஆறியதும் தயிர் சேர்த்து கலக்கவும் மற்றும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

பி.கு

தயிரை வெள்ளரிக்காய் நன்கு ஆறிய பிறகே சேர்க்கவும்.


Saturday 24 January 2015 | By: Menaga Sathia

ஈஸி சிக்கன் குழம்பு(ப்ரெஷர் குக்கர் செய்முறை)/Easy Chicken Kuzhampu (Pressure Cooker Method)



தே.பொருட்கள்

சிக்கன்  - 1/2 கிலோ
வெங்காயாம் - 1 பெரியது
தக்காளி  - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்  - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*மிக்ஸியில் வெங்காயம்+தக்காளியை ஒன்றும் பாதியுமாக தனித்தனியாக அரைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அரைத்த வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள்+உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.


*நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.




*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து க்ரேவி நீர்க்க இருந்தால் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

Monday 19 January 2015 | By: Menaga Sathia

வாழைப்பூ கோலா உருண்டை/Vazhaipoo Kola Orundai



தே.பொருட்கள்

பொடியாக நறுக்கிய வாழைப்பூ - 3 கப்
பொட்டுக்கடலைமாவு - 1 1/2 கப்
சின்ன வெங்காயம் - 9
காய்ந்தமிளகாய் - 4
பூண்டுப்பல் -4
இஞ்சி -சிறுதுண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க‌


செய்முறை

*வாழைப்பூவை நீரில்லாமல் வடிகட்டி சின்னவெங்காயம்+சோம்பு+உப்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்.

*அதனுடன் பொட்டுக்கடலைமாவு கலந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பி.கு

*வாழைப்பூவை அரைக்கும் போது நீர் சேர்க்ககூடாது.மாவு பதம் தளர்த்தியாக இருந்தால் மேலும் பொட்டுக்கடலைமாவை கலந்துக்கொள்ளவும்.

Monday 12 January 2015 | By: Menaga Sathia

வெஜ் ப்ரைட் ரைஸ்/ Veg Fried Rice | 7 Days Dinner Menu # 7

தே.பொருட்கள்

சாதம் - 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய கோஸ்+கேரட் -  தலா 1/2 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - 1
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -  1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்


செய்முறை

* கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காயவைத்து பூண்டுப்பல்+வெங்காயம்+பொடியாக நறுக்கிய வெங்காயத்தாலின் வெள்ளைப்பகுதி சேர்த்து வதக்கவும்.

*பின் பச்சை மிளகாய்+கோஸ்+கேரட்+குடமிளகாய்+சர்க்கரை சேர்த்து 5 - 6 நிமிடங்கள் வரை வதக்கவும்.

*சோயா சாஸ் சேர்த்து நன்கு வதக்கி சாதம்+உப்பு சேர்த்து நன்கு கிளறி மிளகுத்தூள்+வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.

பி.கு

*நான் மூன்று கலர் காய் மட்டுமே சேர்த்து செய்துள்ளேன்.விரும்பினால் சோளம்+பச்சை பட்டாணி+பீன்ஸ் சேர்க்கலாம்.
 
*வெள்ளை மிளகுத்தூள் பதில் கருப்பு மிளகுத்தூள் மற்றும் பச்சை மிளகாய் பதில் சில்லி சாஸ் 1 டீஸ்பூன் சேர்க்கலாம் சாதத்தின் கலர் லேசாக மாறும்.

*காய்களை 5 நிமிடங்கள் வரை வதக்கினால் போதும்,முழுவதும் வேககூடாது.அதிக தீயில் வைத்து செய்யவும்.

Sunday 11 January 2015 | By: Menaga Sathia

வெந்தயக்கீரை சப்பாத்தி | Methi Leaves Chapathi | 7 Days Dinner Menu # 6

 தே.பொருட்கள்
கோதுமைமாவு - 2 கப்
வெந்தயக்கீரை - 3/4 கப்
மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*பின் எண்ணெய் விட்டு  மிருதுவாக மேலும் பிசைந்து 1/2 - 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*மாவை சிறு உருண்டைகளாக எடுத்து தேய்த்து இருபுறமும் எண்ணெய்/நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
Saturday 10 January 2015 | By: Menaga Sathia

கேழ்வரகு அடை/Ragi Adai | 7 Days Dinner Menu # 5

தே.பொருட்கள்

கேழ்வரகு மாவு - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை - 1/2 கப்
காய்ந்த மிளகாய் -1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை 2ஆக கிள்ளி போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் முருங்கை இலை சேர்த்து வதக்கி இறக்கவும்.

*மாவில் உப்பு+வதக்கிய வெங்காய கலவை சேர்த்து நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

*சிறு உருண்டைகளாக எடுத்து மெலிதாக தட்டி தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
Friday 9 January 2015 | By: Menaga Sathia

இன்ஸ்டன்ட் கோதுமைரவை இட்லி/Instant Wheat Rava Idly | 7 Days Dinner Menu # 4

தே.பொருட்கள்

கோதுமைரவை - 1 கப்
தயிர் - 1/2 கப்
கேரட் -  1 சிறியது
முந்திரி - சிறிது(விரும்பினால்)
பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை -  1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா/ஈனோ உப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க‌

கடுகு+உளுத்தம்பருப்பு  - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
நெய்  - 1 டீஸ்பூன்
எண்ணெய்  - 2 டீஸ்பூன்

செய்முறை

*கேரட்டை துருவிக் கொள்ளவும்.

*கடாயில்நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து துருவிய கேரட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

*பின் கோதுமைரவையை சேர்த்து வாசனைவரும்வரை வறுத்து ஆறவைக்கவும்.

*ஆறியதும் அதனுடன் தயிர்+உப்பு+வறுத்த முந்திரி+கொத்தமல்லித்தழை +பேக்கிங் சோடா/ஈனோ உப்பு இவற்றை கலந்து தேவையான நீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலக்கவும்.

*இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஆவியில் 8-  10 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

*சூடாக சட்னி/சாம்பாருடன் பரிமாறவும்.

பி.கு

*பேக்கிங் சோடா/ஈனோ உப்பு கலந்ததும் மாவை உடனே பயன்படுத்தவும்.

*இந்த அளவில் 6 இட்லிகள் வரும்.



Thursday 8 January 2015 | By: Menaga Sathia

உப்புமா கொழுக்கட்டை/Upma Kozhukattai | 7 Days Dinner Menu # 3

தே.பொருட்கள்


செய்முறை

*உப்புமாவை கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*தேங்காய் சட்னியுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

Wednesday 7 January 2015 | By: Menaga Sathia

ப்ரோக்கலி சாலட் / Broccoli Salad | 7 Days Dinner Menu # 2


தே.பொருட்கள்

ப்ரோக்கலி பூக்கள் ‍- 1 கப்
லெட்டூஸ் இலைகள்-  5
சோளம் - 1/4 கப்
செர்ரி தக்காளி -  5
வெள்ளரிக்காய் ஸ்லைஸ் - 10
ஆலிவ் எண்ணெய்  - 1 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*ப்ரோக்கலியை உப்பு கலந்த சுடு நீரில் 5 நிமிடம் வேகவைத்தெடுக்கவும்.

*ஒரு பவுலில் காய்கள்+லெட்டூஸ் இலைகளை ஒன்றாக கலக்கவும்.

*எண்ணெய்+வினிகர்+உப்பு+மிளகுத்தூள் இவற்றை ஒன்றாக கலந்து சாலட்டில் ஊற்றி பரிமாறவும்.
Tuesday 6 January 2015 | By: Menaga Sathia

புல்கா (ரொட்டி) செய்வது எப்படி??/ How To Make Soft Phulka / Roti | 7 Days Dinner Menu # 1

இந்த ரொட்டி அலுமினியம் பாயிலில்  வைத்திருந்து 3நாள் வரை பயன்படுத்தலாம்,மிருதுவாக இருக்கும்.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்
சமைக்கும் நேரம் - < 30 நிமிடங்கள்

தே.பொருட்கள்

கோதுமைமாவு - 2 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு -3/4 டீஸ்பூன்
நெய் - தேவைக்கு

செய்முறை

*கோதுமைமாவு+உப்பு+எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து  தேவைக்கு நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*ஈரத்துணியால் மூடி 15 நிமிடங்கள் வைத்து சம உருண்டைகளாக எடுக்கவும்.
*உருண்டையை வட்டமாக மெலிதாகவோ அல்லது தடிமனமாகவோ தேய்க்க வேண்டாம்.
*தவாவை நன்கு காயவைத்து ரொட்டியை போடவும்.அடிப்பக்கம் ப்ரவுன் கலரில் வந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு 2 நிமிடங்களுக்கு பின் நேரடியாக அடுப்பில் வைத்து சுட்டு எடுக்கவும்.
*விரும்பினால் நெய்/எண்ணெய் தடவுலாம்.

01 09 10