Thursday 28 May 2015 | By: Menaga Sathia

முந்திரிப் பருப்பு சிக்கி /Cashnew Nut Brittle | Cashew Nut Chikki

print this page PRINT IT
தே.பொருட்கள்

முந்திரிப்பருப்பு - 1 கப்
சர்க்கரை -1/2 கப்
எள் -மேலே தூவ
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*முந்திரியை ஒடியாக நறுக்கி வெறும் கடாயில் வறுத்தெடுக்கவும்.

*அலுமினியம் பாயில் மற்றும் பூரி கட்டையில் நெய் தடவி வைக்கவும்.

*பாத்திரத்தில் சர்க்கரை சேர்க்கவும்.
*சர்க்கரை கரைந்து ப்ரவுன் கலரில் வரும் போது உடனே முந்திரியை கலந்து டிரே அல்லது அலுமினியம் பாயிலில் கொட்டி சமபடுத்தவும்.அதன்மேல் எள் தூவி விடவும்.
*சூடாக இருக்கும் போதே துண்டுகள் போட்டு,ஆறியதும் உடைத்துக் கொள்ளலாம்
பி.கு

*1/2 கப் சர்க்கரையே போதுமானது,அதிகம் வேண்டுமெனில் 3/4 கப் சேர்த்துக் கொள்ளலாம்.

Monday 25 May 2015 | By: Menaga Sathia

இடியாப்பம் ஸ்ட்டூ / Idiyappam Stew | Idiyappam Kurma | Side Dish For Idiyappam


print this page PRINT IT 
தே.பொருட்கள்

நீளமாக நறுக்கிய வெங்காயம் -1
கீறிய பச்சை மிளகாய்- 2
உருளை- 1 பெரியது
கேரட்- 1 பெரியது
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1/4 டீஸ்பூன்
இரண்டாம் தேங்காய்ப்பால்- 3/4 கப்
முதல் தேங்காய்ப்பால் -1/4 கப்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய்- 2 டீஸ்பூன்
மிளகு- 5
கிராம்பு- 2
ஏலக்காய்- 1
பட்டை -சிறுதுண்டு
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*கேரட் மற்றும் உருளையை தோல் சீவி விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.

*நறுக்கிய இஞ்சி+வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து சிறுதீயில் நிறம் மாறாமல் வதக்கவும்.
*வதங்கியதும் கேரட்+உருளையை சேர்த்து லேசாக வதக்கி 2ஆம் பாலை ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடவும்.

*5- 6 நிமிடங்களில் காய் வெந்த பிறகு தேங்காய் முதல் பாலை ஊற்றி இறக்கவும்.

பி.கு

*வெங்காயத்தை நிறம் மாறாமல் வதக்குவது முக்கியம்.

*இதில் பீன்ஸ் கூட சேர்க்கலாம்.
Friday 22 May 2015 | By: Menaga Sathia

உடுப்பி ஸ்டைல் தாளி / UDUPI STYLE THALI | THALI RECIPES | NO ONION NO GARLIC THALI RECIPE

print this page PRINT IT 
 உடுப்பி சமையலில் வெங்காயம்,பூண்டு சேர்க்க மாட்டார்கள்.அனைத்து சமையலிலும் சிறிது வெல்லமும்,தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெயும் சேர்ப்பார்கள்

இதில் நான் சமைத்திருப்பது

உடுப்பி சாம்பார்
உடுப்பி ரசம்
பீன்ஸ் பால்யா (பொரியல்)
பீட்ரூட் பால்யா (பொரியல்)
மெதுவடை
ஜவ்வரிசி பாயாசம்

மெதுவடை

உளுத்த மாவில் மிளகு மற்றும் பல்லாக கீறிய தேங்காயை பயன்படுத்த வேண்டும்.
Recipe source : Here

பீன்ஸ் பால்யா

தே.பொருட்கள்

பொடியாக நறுக்கிய பீன்ஸ்- 1/4 கிலோ
மஞ்சள்பொடி- 1/4 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -1
தேங்காய்த்துறுவல்- 1/4 கப்
வெல்லம் -சிறுதுண்டு

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய்- 1

செய்முறை
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து நறுக்கிய பீன்ஸ் சேர்க்கவும்.

*பின் மஞ்சள்தூள்+கீறிய பச்சை மிளகாய்+உப்பு+வெல்லம்+தேவைக்கு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*காய் வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

*இதே செய்முறையில் தான் பீட்ரூட் பொரியலும்.பீட்ரூட் இனிப்பாக இருக்கும் என்பதால் இதில் வெல்லம் சேர்க்கவில்லை.

பி.கு

*இதில் நான் சாதரண சமையல் எண்ணெயே பயன்படுத்தியிருக்கேன்.
Monday 18 May 2015 | By: Menaga Sathia

கொத்தவரங்காய் பிட்லை / Cluster Beans (Kothavarangai ) Pitlai

print this page PRINT IT 
முகநூலில் அறிமுகமான பானுமதி மாமியின் குறிப்பின்படி செய்தது.ஏற்கனவே 30நாள் வெஜ் லஞ்ச் மெனு 22ல் இந்த சமையல் போஸ்ட் செய்துள்ளேன்.

கொத்தவரங்காய் தவிர பாகற்காய்,கத்திரிக்காய்,வாழைப்பூவில் பிட்லை செய்யலாம்.

தே.பொருட்கள்

கறுப்பு/வெள்ளை கடலை- 2 டேபிள்ஸ்பூன்
கொத்தவரங்காய் -1/4 கிலோ
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -1/4 கப்
புளி கரைசல் -1/2 கப்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை- சிறிதளவு

எண்ணெயில் வறுத்து பொடிக்க‌
காய்ந்த மிளகாய்- 7
தனியா -1 டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு -2 டீஸ்பூன்
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
தேங்காய்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌
கடுகு+உளுத்தம்பருப்பு தலா -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1

செய்முறை

*துவரம்பருப்பினை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து பொடிக்கவும் அல்லது நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய்  விட்டு கொத்தவரங்காய் பொடியாக நறுக்கி வதக்கவும்.பின் மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து வேகவைக்கவும்.



*காய் வெந்ததும் புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த கடலை+துவரம்பருப்பு+அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.



*கெட்டியாக இருந்தால் தேவைக்கு நீர் சேர்க்கவும்.

*நன்கு கொதித்த பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

*சுவையான பிட்லை வறுவலுடன் சாப்பிட செம சுவை!!

Thursday 14 May 2015 | By: Menaga Sathia

கொத்துக்கறி ஆம்லட் / Kothukari Omlette | Minced Meat Omlette | Egg Recipes

print this page PRINT IT 
முகநூலில் அறிமுகமான மேகலாம்மாவின் குறிப்பின்படி செய்தது.மிகவும் நன்றாக இருந்தது.

தே.பொருட்கள்

கொத்துக்கறி -100 கிராம்
முட்டை- 2
பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
சோம்புதூள் -3/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கொத்துக்கறியை கழுவி  நீரை வடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் தூள் வகைகள்+உப்பு+சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும்.

*பின் கொத்துக்கறியை சேர்த்து வதக்கி சிறிது நீர் தெளித்து வேகவிடவும்.

*கறி வெந்து டிரையாக வரும் வரை வதக்கி ஆறவிடவும்.

*வேறொரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.


*அதில் ஆறிய கறியை சேர்த்து கலக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி ஆம்லட்டுகளாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
Monday 11 May 2015 | By: Menaga Sathia

கம்பு ரொட்டி | Bajra (Pearl Millet) Roti | Millet Recipes | Gluten Free Recipes

print this page PRINT IT 
கம்பு Gluten Free இல்லாத சிறுதானியம் என்பதால் இதில் நான் ஆளிவிதை (Flax Seeds ) பவுடர் சேர்த்து செய்துள்ளேன்.ஆளிவிதை சேர்க்காமலும் செய்யலாம்.

பரிமாறும் அளவு 2 நபர்கள்
தயாரிக்கும் நேரம் 20 நிமிடங்கள்

தே.பொருட்கள்

கம்பு மாவு -1 1/2 கப்
ஆளிவிதை- 1 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர்- 3 டேபிள்ஸ்பூன்
வெந்நீர் -தேவைக்கு
உப்பு -3/4 டீஸ்பூன்

செய்முறை

*ஆளிவிதையை பொடித்த பின் அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான் நீர் கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் மாவு+உப்பு+ஆளிவிதை கலவை சேர்த்து கலந்த பின் வெந்நீர் சேர்த்து மாவினை சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசையவும்.

*பின் சிறு உருண்டைகளாக எடுத்து கம்பு மாவு தொட்டு மாவினை உருட்டவும்.

*தவாவை சூடு செய்து ரொட்டியினை இருபக்கமும் வேகவைத்து எடுக்கவும்.


*விரும்பினால் நெய் அல்லது எண்ணெய் தடவி சுடலாம்.

Thursday 7 May 2015 | By: Menaga Sathia

உப்பு நார்த்தங்காய் / Uppu Naarthangai | Dry Naarthangai Vathal |Summer Spl


print this page PRINT IT 
நார்த்தங்காய் எலுமிச்சை பழவகையை சார்ந்தது.இதன் பழங்கள் பெரியதாகவும்,தோல் தடிமனாகவும் இருக்கும்.

இதில் ஊறுகாய்,சாதம்,பச்சடி என செய்யலாம்.அதிக மருத்துவகுணம் வாய்ந்தது.

இதனை உணவில் சேர்த்துவர வயிற்றுப்புண்,வயிற்றுப்புழு நீங்கும்.பசியை அதிகரிக்கும்.

இதில் மிக சுவையான குழம்புகூட செய்யலாம்.அதனை வேறொருநாளில் பகிர்கிறேன்.

தே.பொருட்கள்

நார்த்தங்காய் -3
கல் உப்பு -தேவைக்கு

செய்முறை

*நார்த்தங்காயை கழுவி துடைக்கவும்.

*அதனை நான்காக கீறவும்.அதனுள் கல் உப்பு வைத்து அடைக்கவும்.

*இதனை மண்சட்டி அல்லது பீங்கான் ஜடியில் போட்டு 3 நாள் ஊறவைக்கவும்.

*3ஆம் நாள் பழம் ஊறி நீர் விட்டிருக்கும்.பழத்தினை மட்டும் எடுத்து தட்டில் வைத்து வெயிலில் காயவைக்கவும்.

*பின் மாலையில் திரும்பவும் உப்பு நீரில் போடவும்.இதே போல் உப்பு நீர் வற்றும் வரைவெயிலில் காயவைக்கவும்.

*பின் ஒரு நாள் முழுக்க பழத்தினை வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*சுவையான ஊறுகாய் ரெடி,1 வருடத்திற்கும் மேல் வைத்திருந்து பயன்படுத்தலாம்.






Tuesday 5 May 2015 | By: Menaga Sathia

பகோடா வத்தல் / Pakoda Vathal | Pakoda Killu Vathal | Summer Spl


print this page PRINT IT 
 இந்த பகோடா பொரிக்கும் போது செம வாசனையாக இருக்கும்.

தயாரிக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
அளவு - 3 கப்

தே.பொருட்கள்
பச்சரிசி மாவு -1 கப்
நீர் -3 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -1/2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி- 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*குக்கரில் 3 கப் நீரை நன்கு கொதிக்கவிடவும்.

*அரிசிமாவில் சிறிது நீர்விட்டு உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.

*நீர் கொதிக்கும் போது அரிசிமாவை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

*மாவு வெந்து கெட்டியாகி கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் எலுமிச்சைசாறு ஊற்றி கிளறி இறக்கவும்.

*இதில் மேற்கூறிய வெங்காயம் மற்றும் மற்ற பொருட்களை சேர்த்து கிளறவும்.


*ஆறியதும் துணியில் மாவினை எடுத்து கிள்ளி வைத்து வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*மறுநாள் காலையில் துணியில் பின்புறத்தில் நீர் தெளித்து வற்றல்களை எடுத்து நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும்.

*பொரிக்கும் போது எண்ணெய் நன்கு காயவைத்து பொரித்தெடுக்கவும்.

பி.கு

*சின்ன வெங்காயம் மட்டுமே சேர்க்கவும்.பெரிய வெங்காயம் சேர்க்கும் போது சுவையில் வித்தியாசம் தெரியும்.

*அரிசிமாவுக்கு பதில் அரிசி ஊறவைத்து அரைத்தும் செய்யலாம்.
01 09 10