PRINT ITஏற்கனவே பிரியாணி கத்திரிக்காயை நான் வெங்காயம் +தக்காளி சேர்த்து செய்துள்ளேன்.ஆனால் இந்த செய்முறையில் வெங்காயம்+தக்காளி எதுவும் சேர்க்கத் தேவையில்லை.
வேர்க்கடலை+எள்+வெந்தயம் இவற்றை மட்டும் வறுத்து பொடித்து சேர்க்கவேண்டும்.சுவை இஸ்லாமியர்களின் பிரியாணி கத்திரிக்காய் போலவே இருக்கும்.
இதில் நான் காரத்திற்கு வரமிளகாய்தூளும் சேர்த்திருக்கேன்.குறைவாக வேண்டுமெனில் சாம்பார் பொடி மட்டும் சேர்க்கலாம்.
Recipe Source : Savitha's Kitchen
தே.பொருட்கள்
குட்டி கத்திரிக்காய் -8
புளிகரைசல்- 1 கப்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
வெல்லம் -சிறிதளவு
எண்ணெய்- 2 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தாளிக்க
மிளகு -10
கறிவேப்பிலை -1 கொத்து
வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்க
வேர்க்கடலை -2 டேபிள்ஸ்பூன்
எள் -1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
செய்முறை
*கத்திரிக்காயை கழுவி துடைத்து அதன் அடிப்பாகத்தில் 4ஆக கீறி விடவும்.
*காம்பினை வெட்டக்கூடாது,இல்லையெனில் கத்திரிக்காய் மசிந்து விடும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கத்திரிக்காயை சேர்த்து வதக்கி 5 -6 நிமிடங்களில் மூடி போட்டு வேகவிடவும்.
*பின் தூள் வகைகளை சேர்த்து பிரட்டி உப்பு+புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து நைசாக பொடிக்கவும்.
*பச்சை வாசனை போனதும் ,வேர்க்கடலை பொடியை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து எண்ணெய் பிரியும் போது வெல்லம் சேர்த்து இறக்கவும்.
பி.கு
*அவரவர் விருப்பத்திற்கேற்ப க்ரேவியை திக்காகவோ அல்லது கொஞ்சம் நீர்க்கவோ செய்துக் கொள்ளவும்.
*இதனை குட்டிக் கத்திரிக்காயில் செய்வதுதான் சுவையாக இருக்கும்.
*வெல்லம் சேர்ப்பது அவரவர் விருப்பம்,ஆனால் சேர்ப்பது தனி சுவையைக் கொடுக்கும்.








drooling !!1
ReplyDeletewow...so tempting and yummy brinjal curry. Excellent combo with biryani!
ReplyDeleteyumm... yumm.. yummy..
ReplyDeleteBrinjal gravy side dish super,biryani koda arumaiya erkum
ReplyDeleteSuperb dear :)
ReplyDelete
ReplyDeleteIrresistible side dish, can have it happily with a briyani.