Sunday, 17 January 2010 | By: Menaga Sathia

காராமணி சுண்டல்/Cowpeas Sundal

தே.பொருட்கள்:

காராமணி - 1கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை :

*காராமணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து பச்சை மிளகாய் செர்த்து லேசாக வதக்கிய பின் வேகவைத்த காராமணி+தேங்காய்த்துறுவல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

சவையான சுண்டல்

நட்புடன் ஜமால் said...

மாலை வேளைக்கு உகந்தது நன்றி.

S.A. நவாஸுதீன் said...

படத்தை பார்த்தவுடன் சட்டியோட தூக்கிட்டு ஓடிடனும் போல இருக்கு.

பித்தனின் வாக்கு said...

நவாஸ் சட்டியைத் தூக்கிட்டு ஓடும்போது நானும் வரேன், எனக்கும் பங்கு கொடுங்க. நல்லா இருக்கு. இந்த வேகவைத்த காராமணியில் தாளிக்கும் முன்னர் கொஞ்சம் தனியா எடுத்து, கரும்புச்சக்கரை அல்லது அஸ்கா போட்டு சாப்பிட்டா உப்பும் இனிப்பும் கலர்ந்து சூப்பரா இருக்கும். நன்றி மேனகா. இன்று என் பதிவைப் படிக்கவும். பதிவர் வீட்டு ஸ்மையல் அறையில் என்று பதிவு போட்டுள்ளேன். நன்றி மேனகா

S.sampath kumar said...

சூழ்நிலை காரணமாக வரும் 16ந்தேதி இந்தியா செல்வதால் 1 மாதம் ப்ளாக் பக்கம் இயலாது.பதிவுகள் மட்டும் தொடர்ந்து வரும்.அனைவரும் தங்கள் கருத்துகளை தவறாமல் தெரிவிக்கவும்.அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!! sis r u in india?

Jaleela Kamal said...

மேனகா சூப்பரனா காராமணி சுண்டல் அதுவும் மாங்காய் துருவல் சேர்த்தால் சுவை கேட்கவே வேண்டாம்.

Jaleela Kamal said...

ஆமாம்சுதாகர் சார் சொல்வது போல் தாளிக்கும் முன் பாதி எடுத்து அஸ்கா சேர்த்து தான் சாப்பிடுவோம் ரொம்ப நல்ல இருக்கும்.
அட சகோ. நவாஸும், சுதாகர் சாரும் சட்டிய தூக்கிட்டு போய்விட்டால் நாங்க எல்லாம் என்ன செய்வதாம்.

ஸாதிகா said...

காராமணியில் மாங்காய்த்துருவல் போட்டு சுண்டல்..எனக்கு ரொம்ப பித்தமான பயறு வகை. அடுத்த முறை உங்கள் முறையில் செய்கிறேன்

Kanchana Radhakrishnan said...

மாலை வேளைக்கு உகந்த சுண்டல்

my kitchen said...

எனக்கும் கொஞ்சம் கொடுங்க Menaga

01 09 10