Tuesday 27 March 2018 | By: Menaga Sathia

நீர் தோசை / Neer Dosa | Breakfast Recipe

 நீர் தோசை மங்களூரில் மிக பிரபலமான காலை சிற்றுண்டி.அரைத்த உடனே சுட்டுவிடலாம்.காலையில் சுடுவதாக இருந்தால்  அரிசியை இரவே ஊறவைக்கவும்.
இதற்கு காரசட்னி/தேங்காய் சட்னி/ சிக்கன் குழம்பு ஏற்றது.

தே.பொருட்கள்
பச்சரிசி -1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
உப்பு- தேவைக்கு

செய்முறை
*அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் சேர்த்து மிக நைசாக உப்பு சேர்த்து அரைக்கவும்.
 *இதற்கு மாவு நீர்க்க இருக்க வேண்டும்.அரைத்த மாவில் மேலும் 1 கப் நீர் ஊற்றி கரைக்கவும்.
 *இரும்பு தோசைகல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி நன்கு தேய்த்த பின் மாவினை கல்லின் ஓரத்திலிருந்து ஊற்றி நடுவில் முடிக்கவும்.ரவா தோசைக்கு சுடுவது போல் மாவினை ஊற்றவும்.
 *மூடி போட்டு வேகவைக்கவும்.ஓரங்கள் வெந்து வரும் போது மடித்து எடுக்கவும்.
*காரமான சட்னியுடன் பரிமாறவும்.

பி.கு
*மாவு நன்கு நீர்க்க இருக்கவேண்டும்.

*ஒவ்வொரு முறையும் ஊற்றும் போது மாவினை நன்கு கலக்கி ஊற்றவும்.

*பச்சரிசி மட்டுமே உபயோகிக்கவும்.

*அரைத்த உடனே மாவினை சுடவும்
01 09 10