Monday 29 July 2013 | By: Menaga Sathia

அலிகார் பிரியாணி/Aligarh Biryani


இந்த பிரியாணியில் வெங்காயம்+தக்காளி+காரம்+நெய் +புதினா+கொத்தமல்லி  எதுவும் சேர்க்க தேவையில்லை.இதன் ஸ்பெஷலே வெள்ளை கலரில் தான் இருக்கும்.

காரம் இல்லாததால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.தயிர் பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.இதை நான் சிக்கன் குருமாவுடன் பரிமாறினேன்.

Recipe Source : Anisha

தே.பொருட்கள்

முழு கோழி - 1

சிக்கன் ஸ்டாக் செய்ய‌

பூண்டுப்பல் - 5
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
சோம்பு +தனியா தலா -  1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - 8
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நீர் - 2 கப்

செய்முறை

*குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு+ஏலக்காய்+இஞ்சி பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
*நறுக்கிய வெங்காயம் + பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் சிக்கன் தோல்+சிக்கன் துண்டுகள் சிறிது சேர்த்து வதக்கவும்.
*பின் 2 கப் நீர்+உப்பு+தனியா+சோம்பு + மிளகு சேர்த்து 4 5 விசில் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.

பிரியாணி செய்ய‌

தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
தயிர் - 3/4 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு


அரைக்க‌

இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 10
பட்டை - 1சிறுதுண்டு
ஜாதிக்காய் - 1 துண்டு(சிறிதளவு)

தாளிக்க‌

மிளகு - 1/2 டீஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 2

செய்முறை

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.


*பின் கறிதுண்டுகளை சேர்த்து வதக்கி பின் தயிர் சேர்த்து வதக்கவும்.
*உப்பு+சிக்கன் ஸ்டாக் +பாஸ்மதி+நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
பி.கு

*இந்த அளவு அரிசிக்கு 3 கப் நீர் (சிக்கன் ஸ்டாக் 3 கப் குறைவாக இருந்தால் மேலும் நீர் சேர்த்து கொள்ளவும்)தேவைப்படும்.

*சிக்கன் ஸ்டாக்கில் உப்பு இருப்பதால் தேவைக்கு பிரியாணி செய்யும் போது உப்பு சேர்க்கவும்.

*இதே போல் ஸ்டாக் மட்டனிலும் செய்யலாம்,கூடுதல் நேரம் வேகவைத்து எடுக்கவும்.

*இதில்  முழுஜாதிக்காயில் கால்வாசி சேர்த்தால் போதும்,அதிகம் சேர்த்தால் சுவை மாறிவிடும்.

Thursday 25 July 2013 | By: Menaga Sathia

கத்திரிக்காய் ரசவாங்கி / Brinjal Rasavangi


ஆஹா என்ன ருசியில் பார்த்து செய்தது..

ரசவாங்கியில் வெங்காயம்+தக்காளி சேர்க்க தேவையில்லை.இது சாம்பார் மற்றும் கூட்டு  போல் செய்முறையில் மாற்றம் இருக்கும்.

தே.பொருட்கள்

கத்திரிக்காய் - 1 பெரியது
புளிபேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு -  தேவைக்கு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
கா.மிளகாய் - 3
கடலைப்பருப்பு -  1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்

செய்முறை

*புளிவிழுதினை 1 1/2 கப் நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போடு தாளித்து
புளிகரைசல்+உப்பு+மஞ்சள்தூள்+பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும்.


 *நன்கு கொதித்ததும் கத்திரிகாயை சிறுதுண்டுகளாக நறுக்கி பெருங்காயத்தூள்  சேர்த்து வேகவிடவும்.

 *வெந்ததும் வேகவைத்த து.பருப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
 *பின் தேங்காய்ப்பால் சேர்த்து சிறிதுநேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.
பி.கு

சிறிய கத்திரிக்காயில் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

This is off to Priya's Vegan Thursday.
Tuesday 23 July 2013 | By: Menaga Sathia

நன்னாரி சர்பத் /Nannari Sarbat


கோடை காலத்தில் அதிகம் பயன்படுத்தும் மூலிகை நன்னாரி.இது சிறு கசப்பும்,இனிப்பும் கொண்டது.

வெயில் காலங்களில் உடல் குளிர்ச்சி அடைய நன்னாரி வேரி நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்தி கயவைத்து மண்பானையில் போட்டு சுத்தமான நீரை வைத்து அந்த நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.


நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவதுதான் நன்னாரி சர்பத்...

பரிமாறும் அளவு  - 2 நபர்

தயாரிக்கும் நேரம் - 5 நிமிடங்கள்

தே.பொருட்கள்

நன்னாரி சிரப் -  5 டேபிள்ஸ்பூன்
நீர் - 2 1/2 கப்
ஊறவைத்த சப்ஜா விதை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1/2
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு

செய்முறை

*எலுமிச்சை பழத்தை பிழிந்து அதனுடன் நன்னாரி சிரப்+நீர்+சப்ஜா விதை+ஐஸ் கட்டிகள் கலந்து பரிமாறவும்.
Monday 22 July 2013 | By: Menaga Sathia

கோதுமை புட்டு - 2 /Wheat Puttu - 2


ஏற்கனவே நான் கோதுமை புட்டினை மாவில் செய்துருக்கேன்.அந்த பதிவின் கமெண்டில் உமா முழுக்கோதுமை  ஊறவைத்து செய்தால் நன்றாக இருக்கும் என சொன்னபோது அதன்படி செய்து பார்த்ததில் மிக அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்

முழுக்கோதுமை - 1/2 கப்
உப்பு - 1/8 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கோதுமையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் கழுவி நீரை வடிகட்டி துணியில் ஈரம்போக உலர்த்தவும்.



*உலர்ந்ததும் மிக்ஸியில் அரைக்கவும்.விப்பரில் ஒரேடியாக அரைக்காமல் விட்டு விட்டு அரைத்தால் நன்றாக அரைக்கமுடியும்.


*அதனை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*கொஞ்சம் சூடாக இருக்கும் போதே மிக்ஸியில் வேகவைத்த கோதுமையை 1 சுற்று சுற்றி எடுத்தால் பொலபொலவென இருக்கும்.


*அதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

Thursday 18 July 2013 | By: Menaga Sathia

கோஸ் கேரட் தோரன்/Cabbage Carrot Thoran |Onam Sadya Recipes

தே.பொருட்கள்

துருவிய கோஸ்+கேரட்  - தலா 1/2 கப்
தேங்காய் துறுவல்  - 3/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 4
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க‌

கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 3/4 டீஸ்பூன்

செய்முறை

*ஒரு பவுலில் துருவிய கேரட்+கோஸ்+தேங்காய்த்துறுவல்+பச்சை மிளகாய்+வெங்காயம்+உப்பு+ம.தூள்+சீரகத்தூள் இவற்றை சேர்த்து நன்றாக கையால் நன்கு பிசறவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து
கேரட் கோஸ் கலவையினை சேர்த்து சிறு தீயில் மூடி போட்டு வேகவிடவும்.

*நீர் சேர்க்க தேவையில்லை,காய்களிலிருந்து வரும் நீரே போதுமானது,இடையிடையே கிளறி விடவும்.இல்லையினில் அடிபிடிக்கும்,வெந்ததும் இறக்கவும்.
Tuesday 16 July 2013 | By: Menaga Sathia

மிளகு சீரக சாதம்/Pepper Cumin Rice

தே.பொருட்கள்

சாதம் - 2 கப்
 மிளகு + சீரகம் - தலா 1 டேபிள்ஸ்பூன்
நெய் + நல்லெண்ணெய் - தலா 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு

செய்முறை
*மிளகு+ சீரகத்தை பொடிக்கவும்.

*கடாயில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சாதம்+உப்பு+பொடித்த மிளகு சீரகம் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு
*இதேபோல் சாதத்துக்கு பதில் அவல் -இல் செய்யலாம்.

Monday 15 July 2013 | By: Menaga Sathia

கருவாடு தொக்கு/Dry Fish Thokku

கீதாவிடம் பேசிய போது அவர்களின் மாமியார் சமையலை என்னிடம் பகிர்ந்துகிட்டாங்க.அதன்படி இந்த கருவாடு தொக்கு செய்ததில் மிக அருமையாக இருந்தது.

இந்த தொக்கின் ஸ்பெஷாலிட்டி தக்காளி இல்லாமல் செய்வதும்,தேங்காயை நீர் சேர்க்காமல் அரைத்து செய்வதும் தான்.அதுபோல் இந்த தொக்கினை செய்யும்போது நீர் சேர்க்காமல் குறைந்த தீயில் செய்வதுதான் ஸ்பெஷல்.

மிக்க நன்றி கீதா!! இப்போதெல்லாம் க‌ருவாடு தொக்கினைதான் அதிகம் செய்கிறேன்.இதே போல் இறாலிலும் செய்யலாம்.

தே.பொருட்கள்

வஞ்சிர கருவாடு - 1 துண்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 பெரியது
சோம்பு -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கருவாட்டை சுத்தம் செய்து உப்பு+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+சோம்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*தேங்காயை நீர் சேர்க்காமல் நன்கு நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கி ப்ரவௌன் கலரில் வரும் போது ஊரவைத்த கருவாட்டினை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*நன்கு வெந்து சுருண்டுவரும் போது வெங்காயத்தின் கலர் நன்கு பொன்முறுவலாக வரும் போது அரைத்த தேங்காயினை சேர்த்து மேலும் 3-  4 நிமிடங்கள் வரை கிளறி இறக்கவும்.

பி.கு

*தேவையெனில் தேங்காய் அரைக்கும்போது 1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து அரைக்கலாம்.அதிகம்  நீர் சேர்த்து அரைத்து ஊற்றினால் தொக்கின் சுவை மாறுபடும்.
Thursday 11 July 2013 | By: Menaga Sathia

Homemade Croutons

இந்த பதிவினை நான் சொல்ல டைப் செய்தது என் பொண்ணு...

தே.பொருட்கள்

Left Over Baguette -1
ஆலிவ் எண்ணெய் - 1/4 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
Italian Seasoning - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*ப்ரெட்டினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


*ஒரு பவுலில் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து ப்ரெட்டினை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.


*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் போடு ப்ரேடினை பரவலாக வைக்கவும்.


*அவனை 150°C  டிகிரி முற்சூடு செய்து 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
பி.கு

ஆலிவ் எண்ணெய்க்கு பதிலுக்கு உருக்கிய வெண்ணெய் பயன்படுத்தலாம்.
Tuesday 9 July 2013 | By: Menaga Sathia

Homemade Curd

 குளிர்காலத்தில் தயிர் சீக்கிரம் தோயாது.ஒரு பச்சை மிளகாய்/காய்ந்த மிளகாய் சேர்த்தால் சீக்கிரம் உறையும் என ஒரு டிப்ஸில் படித்தேன்,அதன்படி தான் செய்வது,தயிரும் நன்கு வாசனையாக இருக்கும்.வெப்பமான இடத்தில் அல்லது ஹூட்டர் கீழே வைத்தாலும் சீக்கிரம் புளித்துவிடும்.

வெயில் காலத்தில் பால் நன்கு ஆறியபிறகும்,குளிர் காலத்தில் பால் வெதுவெதுப்பாக இருக்கும் போதும் தயிர் தோய்க்கவேண்டும்.


தே.பொருட்கள்

பால் - 1/2 லிட்டர்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்


செய்முறை

*பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.

 *ஏடு படியும் வரை நன்கு காய்ச்சி ஆறவைக்கவும்.
 *பால் சிறிது வெதுவெதுப்பாக இருக்கும் போது தயிர் சேர்த்து நன்கு கலக்கி  புளிக்கவிடவும்.




Monday 8 July 2013 | By: Menaga Sathia

ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக்/Strawberry Milkshake


தே.பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 10
பால் - 2 கப்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா ஐஸ்க்ரீம் - தேவைக்கு
பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - சிறிதளவு

செய்முறை

*மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள்+பால்+சர்க்கரை+வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடிக்கவும்.

*பரிமாறும் பொடியாக நறுக்கிய பழங்களை சேர்த்து பரிமாறவும்.
Thursday 4 July 2013 | By: Menaga Sathia

பிரியாணி கத்திரிக்காய் / Biryani Kathirikkai



தே.பொருட்கள்

கத்திரிக்காய் - 1 பெரியது
வெங்காயம்  -1 பெரியது
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள்  -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்  - 1 டீஸ்பூன்
தனியாத்தூள்  -1 டீஸ்பூன்
புளிவிழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க‌
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
வேர்க்கடலை  -2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌
கடுகு + உளுத்தம்ப‌ருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை -2
மிளகு  - 1/2 டீஸ்பூன்
பெ.சீரகம்  - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*கத்திரிக்காய்+வெங்காயம் இவற்றை நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் வெள்ளை எள்ளை மட்டும் வறுத்து அதனுடன் வேர்க்கடலை சேர்த்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

*பாதியளவு கத்திரிக்காய் வதங்கியதும் வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

*கத்திரிக்காய் நன்கு வெந்ததும்  தூள் வகைகள்+உப்பு சேர்த்து மேலும் வதக்கி அரைத்த விழுதினை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*பின் புளிவிழுதினை சிறிது நீரில் கரைத்து ஊற்றி ,நன்கு கிளறி பச்சை வாசனை போனதும் இறக்கவும்.

பி.கு

*சிறிய கத்திரிக்காயில் சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

*சிறுதீயில் நீர் ஊற்றாமல் கத்திரிக்காயினை வதக்கவும்.இதில் எண்ணெய் குறைவாகவே பயன்படுத்தியிருக்கேன்.
This is off to  Priya's Vegan Thursday
Monday 1 July 2013 | By: Menaga Sathia

பனீர் பாயாசம் /Paneer Payasam

தே.பொருட்கள்

பனீர் - 1/2 கப்
பால் - 1 கப்
கண்டென்ஸ்ண்ட் மில்க் - 1/4 கப்
சர்க்கரை -3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு

செய்முறை

*பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

*பாலை 3/4 கப் வரை நன்கு காய்ச்சி துருவிய பனீரை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

*அடிக்கடி கலக்கிவிடவும்.5 நிமிடம் கழித்து கண்டென்ஸ்ண்ட் பால்+சர்க்கரை+ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

*வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து குளிரவைத்து பரிமாறவும்.
01 09 10