Tuesday 17 May 2011 | By: Menaga Sathia

சீரக புலாவ் / Jeera Pulao

சீர்+அகம்=சீரகம்.வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

அஞ்சறைப் பெட்டியில் முக்கிய இடம் பெற்ற பொருள் இது.

*வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி சாப்பிட‌லாம்.

*கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் குடிக்கலாம்.

*விக்கலை நிறுத்தும் த‌ன்மையுடைய‌து.

*தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொண்டு,நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.

*சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

*சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.இத‌ன் ப‌ய‌ன்க‌ள் ஏராள‌மான‌து.

எப்போழுதும் ஒரே மாதிரி புலாவ் செய்வ‌த‌ற்க்கு ப‌தில் சீர‌க‌ புலாவ் செய்ய‌லாம்.செய்வ‌தும் மிக‌ எளிது.பாகிஸ்தான் ரெஸ்ட்டார‌ண்ட் போனால் இந்த‌ சீரக‌புலாவ் தான் இருக்கும்.சுவையான‌தும் கூட‌.

தே.பொருட்க‌ள்
பாஸ்ம‌தி - 2 க‌ப்
நெய்- 1டேபிள்ஸ்பூன்
பசும்பால் -2 கப்
தண்ணீர் - 1கப்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
கிராம்பு -3
சீர‌க‌ம்- 1டீஸ்பூன்
பிரியாணி இலை -2

செய்முறை
*அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து கழவி நீரை வடிக்கவும்.

*குக்க‌ரில் நெய் விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளைப்போட்டு தாளித்து,அரிசியை போட்டு லேசாக‌ வ‌த‌க்கி பால்+நீர் சேர்த்து 3 விசில் வ‌ரை வேக‌வைத்து ப‌ரிமாற‌வும்.

பி.குப‌சும்பாலுக்கு ப‌தில் தேங்காய்ப்பாலும் சேர்க்க‌லாம்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

நடத்துங்க எஜமாட்டி நடத்துங்க....

Jayanthy Kumaran said...

awesome pulav...perfect version ..:P
Tasty Appetite

Event: Letz Relishh Ice Creams

Reva said...

Very informative post... I personally love cumin... Very delicious pulao :)
Reva

Kurinji said...

So inviting and tempting pulao.

சசிகுமார் said...

மருத்துவ குணத்துடன் கூடிய சத்தான சமையல் நன்றி அக்கா பகிர்வுக்கு.

Thenammai Lakshmanan said...

ஜீரண சக்தியை தூண்டக்கூடிய நல்ல உணவு மேனகா..:))

பனித்துளி சங்கர் said...

இப்பொழுது உள்ள வெயிலுக்கு உங்களின் உணவுப் படைப்பு குளிர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .பகிர்ந்தமைக்கு நன்றி .இது வரை நான் கேள்விப்பட்டிராத உணவின் பெயர்கள் தங்களின் படைப்புகளில்தான் அறிந்துவருகிறேன் நன்றி

GEETHA ACHAL said...

சீரகத்தின் சிறப்பினை பற்றி பகிர்ந்து கொண்டத்தற்கு மிகவும் நன்றி...புலாவும் சூப்பப்ர்...

Angel said...

thanks for the recipe and the info about medicinal properties of cumin seeds

Chitra said...

simple and good. :-)

Sangeetha M said...

very healthy n flavor ful pulav...i should make this for my kids..thanx for the nutritional information...

குணசேகரன்... said...

Ur explanation is nice..keep it up..

Nithya said...

I made this a couple of days back and loved it too :)

Priya Suresh said...

One of my fav rice after ghee rice..simply inviting..

Cool Lassi(e) said...

Jeera Pulao looks good. I make it at home very often. We love it with over-the-top side dishes!

Unknown said...

romba nalla irukku.chicken kooda romba nalla irukkum.

Unknown said...

jeera Pulao looks too tempting and yummy!

Mahi said...

ஜீரா ரைஸ் செய்திருக்கேன்,ஆனா பால் சேர்த்து செய்ததில்லை. சீரகம் பற்றிய தகவல்களை பகிர்ந்ததுக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

இது புதுசு. செய்து பார்க்கிறேன். சீரகத்தின் சிறப்புடனான குறிப்புக்கு நன்றி.

துளசி கோபால் said...

பயணத்தில் இருக்கும்போது ஜீரா ரைஸ்தான் ஆர்டர் செய்வேன். அது இல்லைன்னா புதினா பரோட்டா.

சீரகத்து மேலே அபார நம்பிக்கை எனக்கு!

Vardhini said...

Simple and healthy.

Vardhini
VardhinisKitchen

Unknown said...

healthy pulav..

Shanavi said...

enaku migavum piditha pulavugalil idhuvum ondru..Romba arumai

Jaleela Kamal said...

சீரகப் புலாவ் அருமை
நானும் எப்பவாவது செய்வேன்,
சீரகம் பற்றிய தகவலும் அருமை

Priya Sreeram said...

jeera pulao looks good- i add coconut milk to the rice

01 09 10