Monday, 2 May 2011 | By: Menaga Sathia

வெஜ் பிஸ்ஸா/ Veg Pizza

                                                                        

தே.பொருட்கள்:
மைதா மாவு - 3 கப்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

ஸ்டப்பிங் செய்ய:
டின் காளான் - 200 கிராம்
துருவிய சீஸ் - 1 கப்
ஆலிவ் காய் - 5
நீளவாக்கில் நறுக்கிய குடமிளகாய் - 1
தக்காளி சாஸ் - தேவைக்கு
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு

தக்காளி சாஸ் செய்ய

செஃப் சஞ்சய் கபூரின் குறிப்பை  பார்த்து செய்தது.
தக்காளி - 2
பொடியாக நறுக்கியத்தக்காளி - 1
பொடியாக நறுக்கிய சிகப்பு குடமிளகாய் - 1/4 கப்
பொடியாக நருக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 2
டிரை பேசில் - 1/2 டீஸ்பூன்
டிரை ஆரிகனோ - 1/2 டீஸ்பூன்
உப்பு+சர்க்கரை -தலா 1/4 டீஸ்பூன்


செய்முறை
*தக்காளியை கொதிநீரில் போட்டு தோலுரித்து அரைக்கவும்.

*கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு வெங்காயம்+பூண்டு+குடமிளகாய்+தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கவும்.

*நன்றாக மசிந்த பின் அரைத்த தக்காளிவிழுதை சேர்த்து நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது உப்பு+சர்க்கரை +காய்ந்த பேசில் ஆரிகனோ சேர்த்து இறக்கவும்.

*இந்த சாஸை 1 வாரம் வரை ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

                                          
 
பிஸ்ஸா செய்முறை :
*வெதுப்பான நீரில் சர்க்கரை+ஈஸ்ட் சேர்த்து கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*மாவில் உப்பு+ஆலிவ் எண்ணெய் கலந்து ஈஸ்ட் கலந்த நீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து ஈரமான துணியால் மூடி வெப்பமான் இடத்தில் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து மாவு 2 மடங்காக உப்பியிருக்கும் மாவை பிசைந்து  நடுத்தர சைஸில் உருண்டை போடவும்.
*மாவை மெலிதாக தட்டி ஒரங்களை லேசாக மடித்துவிடவும்.

*அதன்மேல் தக்காளிசாஸ்+காளான்+ஆலிவ் காய்+குடமிளகாய்+சீஸ் என ஒன்றன் பின் ஒன்றாக வைக்கவும்.

*230°C டிகிரிக்கு முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
 
பி.கு:
அவரவர் அவனுக்கேற்ப அவன் டைம் செட் செய்யவும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

sangee vijay said...

Yummy pizza with crispy crust looks perfectly baked n thanx for the tomato sauce recipe....neatly explained....want to try it soon....

Kanchana Radhakrishnan said...

nice recipe.

Padhu said...

Looks yummy!

Sangeetha Nambi said...

Lovely Pizza. Need to try it.

asiya omar said...

yummy hme made pizza..izzza

Priya said...

Heart shaped pizza looks fabulous...simply inviting..

சசிகுமார் said...

பகிர்தலுக்கு நன்றி அக்கா

Shama Nagarajan said...

delicious pizza..

!! Cooking is simple !! said...

இதய வடிவில் இதயத்தை கொள்ளை அடிக்குது.

Jaleela Kamal said...

rompa nalla irukku

munpellaam seyveen, adikadi bread, bun nil seyveen

Sarah Naveen said...

looks oh so yummy!!

ஸாதிகா said...

பிஸ்ஸாவும் சூப்பர்.ஷேப்பும் சூப்பர்.

Akila said...

very delicious...

MANO நாஞ்சில் மனோ said...

நான் பேச்சுலர்'ன்னு தெரிஞ்சிகிட்டு இப்பிடி ருசியான பண்டங்களின் போட்டோவை போட்டு என்னை கடுப்பெத்துரீன்களே...அவ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

இங்கே ஹோட்டல் சாப்பாடு சாப்டு சாப்டு டங் செத்தே போச்சு போங்க....

MANO நாஞ்சில் மனோ said...

ஊருக்கு போனா உங்க பதிவுல சொன்னது எல்லாம் என் வீட்டம்மகிட்டே சொல்லி பண்ணி தர சொல்லணும்....

Vimitha Anand said...

Home made pizza looks so yum and mouth watering dear...

Swarnavalli Suresh said...

love the heart shaped pizza

தெய்வசுகந்தி said...

Nice shape& Nice looking pizza

vanathy said...

super pizza!

Premalatha Aravindhan said...

Very tempting pizza,love the shape...luks very nice.

சிநேகிதி said...

ஹார்ட் சேப் பிட்சா சூப்பர்

Prabhamani said...

Woww...amazing homemade pizza..i love it :)

மகி said...

நல்லா இருக்கு மேனகா.

AMMU MOHAN said...

Nice blog..found yours from vazhayila blog..following your blog..

ஹுஸைனம்மா said...

நானும் இப்படித்தான் பீட்ஸா செய்வேன் மேனகா. ஆனால், ஈஸ்ட் அளவு கொஞ்சம் கூடப் போடுவேன்.

ஹார்ட் ஷேப் புது ஐடியா. நல்லாருக்கு. இதில் ஓரத்தில் சீஸை வைத்து மடித்து செய்தால், (stuffed crust) இன்னும் பிடிக்கும் பிள்ளைகளுக்கு.

01 09 10