Monday 16 May 2011 | By: Menaga Sathia

அஸ்பார‌க‌ஸ் பொரிய‌ல்/ Asparagus Poriyal

 அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும்.இதன் இளம்தளிர்கள் மட்டும் உணவாக எடுத்துக் கொள்வார்கள்.பச்சை மற்றும் வெள்ளைக்கலரில் இருக்கும்.

இதில் கொழுப்பு சத்து இல்லை.குறைந்த அளவு கலோரி மற்றும் சோடியம் இருப்பதால் ஆரோக்கிய உணவுன்னு கூட சொல்லலாம்.மேலும் இதில் போலிக் அமிலம்,பொட்டாசியம்,நார் சத்து உள்ளது.போலிக் அமிலம் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவது நலம்.

வடக்கு ஐரோப்பாவில் வெள்ளை அஸ்பாரகஸ் சிறந்த மற்றும் முக்கிய காய்கறியாக பயன்படுத்துவதால் இதனை வெள்ளைத்தங்கம் என்றும் குறிப்பிடுவர்...

வெள்ளை அஸ்பாரகஸை விட பச்சையில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.

இதனை வேகவைத்து மயனைஸூடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.இதில் முதன்முறையாக பொரியல் செய்தேன் நன்றாக இருந்தது.சுவையான குறிப்புக்கு நன்றி கீதா!!

தே.பொருட்க‌ள்

அஸ்பார‌க‌ஸ் ‍‍- 1க‌ட்டு
பொடியாக‌ ந‌றுக்கிய‌ வெங்காய‌ம் - 1
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 1டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய்- 1/2டீஸ்பூன்

தாளிக்க‌

க‌டுகு- 1/4 டீஸ்பூன்
உளுத்த‌ம்ப‌ருப்பு- 1/2 டீஸ்பூன்
சீரக‌ம்- 1/4 டீஸ்பூன்
க‌ட‌லைப்ப‌ருப்பு  - 2 டீஸ்பூன்
க‌றிவேப்பிலை  - சிறிது

செய்முறை
*அஸ்பார‌க‌ஸை ந‌ன்கு ம‌ண்போக‌ க‌ழுவி இள‌ம்த‌ளிர்க‌ளை ம‌ட்டும் பொடியாக‌ வெட்டிக்கொள்ள‌வும்.

*த‌ண்டுப்ப‌குதியை தூக்கி எரியாம‌ல் ஸ்டாக்,சூப் செய்ய‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.

*க‌டாயில் எண்ணெய்விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளைப்போட்டு தாளித்து வெங்காய‌ம்+சாம்பார்பொடி+உப்பு சேர்த்து வ‌த‌க்க‌வும்.

*பின் ந‌றுக்கிய‌ அஸ்பார‌க‌ஸை சேர்த்து மூடிபோட்டு வேக‌விட‌வும்.த‌ண்ணீர் ஊற்ற‌வேண்டாம்.

*ந‌ன்கு வெந்த‌பிற‌கு தேங்காய்த்துருவ‌ல் சேர்த்து இற‌க்க‌வும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

பொன் மாலை பொழுது said...

எனக்கும் ஒரு ப்ளேட் வேணும். நன் சாபிடப்போறேன். தயிர் சாதத்துக்கு நல்லா இருக்கும் போல!

Reva said...

This is nice. Never tried making poriyal with asparagus but will definitely try it out :) Thanks for sharing ...
Reva

சசிகுமார் said...

சத்தான சமையல் மிக்க நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

என்ன பெயர் இது..?? எங்கள் ஹோட்டல் மெனுவில் இல்லாத பெயரா இருக்கே....!!!!

Sangeetha M said...

i never tried asparagus..this poriyal looks inviting and thanx for the useful info n the recipe too :)

Unknown said...

இது புதுவகையான பெயராக இருக்கே.. இது எங்கு கிடைக்கும்?

Angel said...

Wow!!!.this is my favorite food Menaka

நாங்க ஜெர்மனியில் இருக்கும்போது இது விளையும் இடத்தில போய் பறித்து வருவோம் .அவ்வளவு உடம்புக்கு நல்லது .
sahne என்று சூப்பர் மார்க்கெட்டில் விற்பார்கள் அதோடு சாப்பிட்டால் yum yum .
இதுவரை சூப் தான் செஞ்சிருக்கேன் .உங்கள் ரெசிபி புதுமையாக இருக்கு .
செய்து பார்கிறேன் .இதன் அறுவடையின் போது (spargal fest)asparagus festival நடைபெறும்.அவ்ளோ famous

vanathy said...

I always cook the green kind. Never tried white. Very healthy recipe.

Chitra said...

இங்கே asparagus , பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும். ஒரு நிமிடத்தில் வெந்தும் விடுகின்றன.

Priya Suresh said...

Super poriyal, even i prepared with the same white asparagus some chutney yesterday..

Sarah Naveen said...

that looks oh so yummy!!

GEETHA ACHAL said...

ஏனோ எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம்...சில சமயங்களில் செய்வது...

Jayanthy Kumaran said...

lovely n delicious..nice try menaga..

Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams

Shanavi said...

I've never tried asparagus ,thinking I should try after seeing this post

Unknown said...

Superb idea to make poriyal with asparagus!

Kanchana Radhakrishnan said...

nice receipe.

Mahi said...

க்ரில்ட் அஸ்பராகஸ் ஒரு தோழி வீட்டில் சாப்பிட்டேன்,அவ்வளவாப் புடிக்கலை!;) ஒருவேளை இப்படி செய்தா நல்லா இருக்குமோ? :)

Jaleela Kamal said...

அப்ரகஸ் பொரியல் நல்ல இருக்கு
இங்குவிலை அதிகம்

01 09 10