தே.பொருட்கள்
முருங்கைக்காய் - 1
தக்காளிக்காய் -2
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
மாங்காய் -1
புளிகரைசல்- 1/4 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 10
வாழைக்காய் - 1
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெங்காயத்தை தவிர மீதியுள்ள பொருட்களை சேர்த்து நைசாக அரைக்கவும்.கடைசியாக வெங்காயத்தை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.
*காய்களை சற்றே பெரியதுண்டுகளாக நறுக்கவும்.
*வாழைக்காயை தோலுடனே துண்டுகளாக நறுக்கவும்.
*முதலில் முருங்கை+பீன்ஸ்+கேரட் இவற்றை குறைவான நீர் விட்டு வேகவைக்கவும்.
*இவை பாதி வெந்ததும் வாழைக்காய்+1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
*அடிக்கடி கரண்டியால் கிளறிவிடக்கூடாது,காய் குழைந்துவிடும்.
* காய்கள் முக்கால் பாகம் அனைத்தும் வெந்ததும் மாங்காய்+தக்காளிக்காய்+மீதமுள்ள மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
*அனைத்து காய்களும் ஒரளவு வெந்துருக்கும் இப்பொழுது புளிகரைசல்+உப்பு +அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.*பச்சை வாசனை அடங்கியதும் கறிவேப்பிலை +தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும்.
பி.கு
*புளிக்கு பதில் தயிர் சேர்ப்பதாக இருந்தால் அவியல் நன்றாக ஆறியபின்னரே தயிரை சேர்க்கவும்.சூடாக சேர்த்தால் அவியல் நீர்த்துவிடும்.
*இதில் வெள்ளைபூசணி,சேனைக்கிழங்கு,பூசணிக்காய் சேர்க்கலாம்.
*முதலில் தாமதமாக வேகும் காய்களைச் வேகவைத்த பின்னரே மற்ற காய்களை சேர்த்து வேகவைக்கும்.இப்படி செய்வது காய்கள் குழையாமல் இருக்கும்.
23 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wow first class avial Menaga :)
ஆவியல் ருசியோ.. ருசி
அவியல் அருமை..
Very nice combo with, any mixed rice... !!!especially with sambar satham :)
aviyal super!:P
this recipe sounds easy menaga....its tempting me a lot :)
romba nalla irukku pa.
Delicious Avial Menaga,loved ur version...Very tempting.
nothing to beat aviyal and hot rice ! looks good
எனக்கு ரொம்ப பிடித்த அயிட்டம் இது தேங்க்ஸ் அக்கா.
அவியல் எனக்குப் பிடித்த ஒன்று
My fav aviayal, pls pass it here.
kurinjikathambam, Event: HRH-Healthy Summer, Roundup: HRH-Puffedrcie
Mouthwatering here...delicious aviyal..
thanks for the mouth watering recipe
.this is my favorite .
My favorite but I do not use shallots
for grinding
முருங்கை காய் பார்க்கவே சூப்பரா இருக்கு. இங்கு ப்ரோஷன் காய் தான் கிடைக்கும். நல்ல ரெசிப்பி, மேனகா.
சூப்பர் அவியல்..:)
super pa..aviyal looks creamy n awesome..
Yum yum... love this anytime... Looks delish...
ரொம்ப நல்லா இருக்கு மேனகா...
உங்கள் முறையில் அவசியம் இந்த அவியல் செய்து பார்க்கணும் மேனகா.
என் விருப்ப உணவும்:)! நல்ல பகிர்வு.
Love the dish very much. Glad to follow you. Do stop by mine and follow me too.
Post a Comment