Wednesday 30 June 2010 | By: Menaga Sathia

கோங்கூரா(புளிச்சகீரை)துவையல்

தே.பொருட்கள்:

புளிச்ச கீரை - 1 கட்டு
முழு பூண்டு - 2
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 கோலிகுண்டளவு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை :

*கீரையை சுத்தம் செய்யவும்.பூண்டை உரித்து நசுக்கிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கீரையை வதக்கி தனியாக வைக்கவும்.

*பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு+காய்ந்த மிளகாயை தனிதனியாக வதக்கி கொள்ளவும்.பின் வடகத்தையும் பொரித்துக் கொள்ளவும்.

*மிக்ஸியில் கீரை+காய்ந்த மிளகாய்+உப்பு+புளி சேர்த்து அரைக்கவும்.முக்கால் பாகம் கீரை அரைப்பட்டதும் வடகத்தை போட்டு அரைக்கவும்.

*கடைசியாக வதக்கிய பூண்டைப்போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

*கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து ஆறவைத்து அரைத்த கீரையில் ஊற்றவும்.

*1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.சாதத்துடன் சாப்பிட செம ருசியாக இருக்கும்.

*புளியை கிரையின் புளிப்பிற்கேற்ப சேர்க்கவும்.

Tuesday 29 June 2010 | By: Menaga Sathia

முட்டையில்லா அவகோடா ப்ரெட்

தே.பொருட்கள்:
நன்கு பழுத்த அவகோடா - 1
பால் - 1 கப்

பார்ட் - 1
ஆல் பர்பஸ் மாவு - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
மஞ்சள் சோள மாவு - 1 கப்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பாதாம் ப்ளேக்ஸ்,பிஸ்தா பருப்பு,காய்ந்த திராட்சை - தலா 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

பார்ட் - 2
பட்டர் - 3/4 கப்
பிரவுன் சர்க்கரை - 1 கப்

செய்முறை :

*பட்டரில் சர்க்கரை கரையும் வரை நன்கு பீட் செய்யவும்.

*அவகோடாவை நன்கு மசிக்கவும்.

*பார்ட் -1ல் கூறிய பொருட்களை ஒன்றாக கலக்கவும்.

*பார்ட் -2 ல் அவகோடா+பால்+பார்ட் -1 அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.தேவைப்பட்டால் மட்டும் மேலும் சிறிது பால் சேர்க்கவும்.

*கலவையை பட்டர் தடவிய ப்ரெட் பானில் ஊற்றி 180 முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.

Sending this recipe to "Veggie/Fruit A Month - Avocado" by Priya.
Monday 28 June 2010 | By: Menaga Sathia

மாம்பழ அவகோடா சாலட்

தே.பொருட்கள்:

மாம்பழம் - 1
அவகோடா - 1
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்


செய்முறை :

*மாம்பழம்+ அவகோடாவை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.அவகோடாவை நறுக்கியதும் எலுமிச்சை சாறு கலக்கவும்.

*தேன்+சாட் மசாலா கலந்து பரிமாறவும்.

Sending this recipe to "Veggie/Fruit A Month - Avocado" By Priya.
Sunday 27 June 2010 | By: Menaga Sathia

அவகோடா அடை

தே.பொருட்கள்:

அவகோடா - 1
கடலைப்பருப்பு,பாசிப்பருப்பு - தலா 1/4 கப்
அரிசி - 1/4 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பருப்பு வகைகளை ஒன்றாகவும்+அரிசியை தனியாக ஊறவைக்கவும்.

*ஊறியதும் அரிசியுடன் சோம்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து 3/4 பாகம் அரைபட்டதும் உப்பு+பருப்பு வகைகள்+தோல் விதை நீக்கிய அவகோடாவையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு அரைத்து வெங்காயத்தை போட்டு லேசாக வதக்கி அரைத்த மாவில் தேங்காய்த் துறுவலுடன் சேர்த்துக் கலக்கவும்.

*தவாவில் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை விட்டு மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் ஊற்றி இரு ப்புறமும் வேகவிட்டு எடுக்கவும்.

*தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராகயிருக்கும்.

Sending this recipe to "Veggie/Fruit A Month - Avocado" By Priya.
Saturday 26 June 2010 | By: Menaga Sathia

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி / Chettinad Mutton Biryani

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 4 கப்
அரிந்த வெங்காயம் - 2
அரிந்த தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 1/2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

மட்டனில் வேகவைக்க
மட்டன் - 1/2 கிலோ
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
இஞ்சி - 1 சிறுதுண்டு
புதினா - 1 கைப்பிடி

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :
* குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு மட்டனில் வேக கொடுத்துள்ள பொருட்களைப்போட்டு சிரிது உப்பு+ 1 1/2 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேக வைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அரிசியை 5 நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.வேகவைத்த மட்டனிலிருந்து மட்டனை தனியாகவும்,தண்ணியை அளந்து வைக்கவும்.

*குக்கரில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+கறிவேப்பிலை+அரைத்த மசாலா+தக்காளி+மட்டன்+தயிர் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*4 கப் அரிசிக்கு 6 கப் தண்ணீர் வைக்கவேண்டும்.மட்டனில் வேகவைத்த நீரின் அளவுடன் மீதி அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.உப்பு+புதினா சேர்க்கவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது அரிசி சேர்த்து ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.

*ஆறியதும் மல்லித்தழை தூவி ராய்த்தாவுடன் பரிமாறவும்.
Friday 25 June 2010 | By: Menaga Sathia

மாம்பழ ஐஸ்க்ரீம்

கூகிளில் பல சைட்களில் தேடி முதல்முறையாக ஐஸ்க்ரீம் செய்தேன்.ரொம்ப நன்றாக வந்தது.
தே.பொருட்கள்:
மாம்பழ கூழ் - 2 கப்
பால் - 2 கப்
கெட்டி தேங்காய்ப்பால் - 1 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
செய்முறை :
* அனைத்தையும் ஒன்றாக கலந்து ப்ளெண்டரில் நன்கு அடித்து ஒரு சில்வர் பாக்ஸில் ஊற்றி ப்ரீசரில் 6 மணிநேரம் வைக்கவும்.

*பின் 6 மணிநேரம் கழித்து மறுபடியும் ப்ளெண்டரில் நன்கு அடித்து 6 மணிநேரம் ப்ரீசரில் வைக்கவும்.

*இந்த மாதிரி 2 அல்லது 3 முறை 6 மணிநேரத்துக்கு ஒருமுறை செய்து ப்ரீசரில் செட் செய்து பரிமாறவும்.
பி.கு:
இதில் நான் ரெடிமேட் மாம்பழகூழ் சேர்த்துள்ளேன்.ப்ரெஷ் மாம்பழ கூழ் சேர்த்தால் இன்னும் நன்றாகயிருக்கும்.

Sending this recipe to Sizzling Summer Contest by Spicy Tasty.
Thursday 24 June 2010 | By: Menaga Sathia

கேரட் சாலட்

தே.பொருட்கள்:
துருவிய கேரட் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 சிறியது
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :
* அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.
Wednesday 23 June 2010 | By: Menaga Sathia

ஆரஞ்சுப்பழத்தோல் பச்சடி

தயிர் சாதத்திற்க்கு நல்ல பொருத்தம்.
தே.பொருட்கள்:
பொடியாக நறுக்கிய ஆரஞ்சுப்பழத்தோல் - 1/2 கப்
புளிகரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1 சிறு கட்டி
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
 
செய்முறை :
*பழத்தோலை கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து மிளகாய்த்தூள் போடவும்.

*உடனே வதக்கிய தோல் +புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.
Tuesday 22 June 2010 | By: Menaga Sathia

கேரட் உசிலி

தே.பொருட்கள்:

துருவிய கேரட் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்^
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
* கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய்+உப்பு+சோம்பு+பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காய்த்தை போட்டு வதக்கவும்.

*பின் கேரட்+உப்பு சேர்த்து நன்கு வதக்கி உதிர்த்த கடலைப்பருப்பை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
Monday 21 June 2010 | By: Menaga Sathia

மாம்பழ கேக்

தே.பொருட்கள்:
ரவை - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
உருக்கிய பட்டர் - 1/2 கப்
மாம்பழ கூழ் - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
 
செய்முறை :
* ஒரு பவுலில் அனைத்தையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.பின் கேக் பானில் பட்டர் தடவி கலவையை ஊற்றவும்.

*190°C முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
Sunday 20 June 2010 | By: Menaga Sathia

கேரட் கீர்

தே.பொருட்கள்:

கேரட் - 1 பெரியது
பால் - 4 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பாதாம்,முந்திரி - தலா 6
 
செய்முறை :
*கேரட்டை துண்டுகளாகி சிறிது நீர் விட்டு முந்திரி,பாதாமுடன் 3 விசில் வரை வேகவிடவும்.

*வெந்ததும் பாதாம் தோல் நீக்கி அனைத்தையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

*4 கப் பாலை 2 கப் பாலாகும் வரை சுண்டக்காய்ச்சி அரைத்த கேரட் விழுது+சர்க்கரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.

*ஏலக்காய்த்தூள் சேர்த்து சில்லென்று பரிமாறவும்.
 
பி.கு:
சர்க்கரையின் அளவை அவரவர் சுவைக்கேற்ப போடவும்.
Friday 18 June 2010 | By: Menaga Sathia

மாம்பழ ஸ்ரீகண்ட்

தே.பொருட்கள்:

புளிப்பில்லாத தயிர் - 250 கிராம்
மாம்பழ கூழ் - 1/2 கப்
சர்க்கரை - இனிப்பிற்கேற்ப
பிஸ்தா பருப்பு - அலங்கரிக்க
 
செய்முறை :
*தயிரை முதல் நாள் இரவே மெல்லியதுணியில் கட்டி தொங்கவிடவும்.

*மறுநாள் கெட்டிதயிர் கிடைக்கும்.அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் மாம்பழ கூழை சேர்த்து நன்கு கலக்கி பிஸ்தா பருப்பு சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

* சப்பாத்தி பூரியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
பி.கு:
இதில் நான் ரெடிமேட் மாம்பழகூழ் சேர்த்துள்ளேன்.ப்ரெஷ் மாம்பழ கூழ் சேர்த்தால் இன்னும் நன்றாகயிருக்கும்.

Thursday 17 June 2010 | By: Menaga Sathia

பனீர் உருளைக்கிழங்கு பொடிமாஸ்

தே.பொருட்கள்:

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
உதிர்த்த பனீர் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
நசுக்கிய இஞ்சி,பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை :

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+நசுக்கிய இஞ்சி பூண்டு+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+கரம் மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வெங்காயம் நன்கு வதங்கிய பின் மசித்த உருளை+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+உப்பு+பனீர் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

Sending this recipe CWS -Pepper by padma started by Priya & Healing Foods - Onions by Priya & Think - Spice Garam Masala by Sara started by Sunitha

Wednesday 16 June 2010 | By: Menaga Sathia

பைனாப்பிள் ப்ரெட் டோஸ்ட்

தே.பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 4
முட்டை - 1
கெட்டி தேங்காய்ப்பால் - 2 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் ஜூஸ் - 3 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பட்டைதூள் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - இனிப்பிற்கேற்ப
பட்டர் - தேவைக்கு
 
செய்முறை :
*ஒரு பவுலில் ப்ரெட்+பட்டர் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்கு அடிக்கவும்.

*தவாவில் பட்டர் விட்டு,ப்ரெட் ஸ்லைஸ்களை முட்டை கலவையில் நனைத்து இரு புறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

Sending this recipe Global Kadai - Indianized French Toast by Priya started by Cilantro

Tuesday 15 June 2010 | By: Menaga Sathia

வெள்ளரிக்காய் மெலன் சாலட்

தே.பொருட்கள்:

நறுக்கிய மெலன் பழம் - 1/2 கப்
நறுக்கிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
தேன் - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
துருவிய எலுமிச்சைத்தோல் - 1/4 டீஸ்பூன்
பாதாம் ப்ளேக்ஸ் - அலங்கரிக்க


செய்முறை :

* வெள்ளரி+மெலன்+பாதாம் பிளேக்ஸ் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*பரிமாறும் போது பழம்+வெள்ளரிக்காயை கலந்து அதன் மீது டிரெஸ்ஸிங் பொருளை மேலே ஊற்றி பாதாம் பிளேக்ஸை தூவி பரிமாறவும்.

Sending this recipe to Sizzling Summer Contest By Spicy Tasty

Monday 14 June 2010 | By: Menaga Sathia

பூண்டு - சின்ன வெங்காயத்தொக்கு

தே.பொருட்கள்:

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 15
பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 6
பொடியாக அரிந்த தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+தக்காளி+மிளகாய்த்தூள்+உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு எண்ணெயிலேயே நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

*இட்லி,சப்பாத்திக்கு நன்றாகயிருக்கும்.
Sunday 13 June 2010 | By: Menaga Sathia

மட்டன் உருண்டைக் குழம்பு

தே.பொருட்கள்:
உருண்டைக்கு:

மட்டன் கீமா - 1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
முட்டை - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
உப்பு - தேவைக்கு

குழம்புக்கு:

அரிந்த வெங்காயம் - 1பெரியது
அரிந்த தக்காளி - 1 பெரியது
இஞ்சிப்பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
பொடியாக அரிந்த புதினா கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சைசாறு - 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

செய்முறை :

*கீமாவை கழுவி தண்ணியை நன்கு வடித்துக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள் போட்டு லேசாக வதக்கவும்.பின் கீமாவை போட்டு நன்கு நீர் வற்றும் வரை வதக்கி ஆறவிடவும்.

*அதனுடன் உப்பு+பொட்டுக்கடலை மாவு+சோம்புத்தூள்+முட்டை சேர்த்து பிசைந்து உருண்டைகளாகி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சிப்பூண்டு விழுது+பச்சை மிளகாய்+தககளி+தூள் வகைகள்+புதினா கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பின் தேங்காய்ப்பால்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் பொரித்த உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.

Saturday 12 June 2010 | By: Menaga Sathia

ஸ்டப்டு காளான் - 2 / Stuffed Mushroom - 2

தே.பொருட்கள்:

காளான் - 5
துருவிய காலிப்ளவர்,பூசணிக்காய் - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
துருவிய சீஸ் - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*காளானின் தண்டுப்பகுதியை கவனமாக வெட்டியெடுக்கவும்.

*தவாவில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+துருவிய காய்கள்+உப்பு+சோம்புத்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றக போட்டு வதக்கவும்.

*காளானில் இந்த கலவையை வைத்து அதன்மேல் சீஸ்துருவலை வைத்து 190 டிகிரி முற்சூடு அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
Friday 11 June 2010 | By: Menaga Sathia

பனானா/கிவி /ஆரஞ்சு ஸ்மூத்தீ

தே.பொருட்கள்:

வாழைப்பழம் - 1
கிவிப்பழம் - 1
ஆரஞ்சுப்பழம் - 3
பட்டை தூள் - 1/4 டீஸ்பூன்
தேன் - சுவைக்கு
பால் - 1 கப்

செய்முறை :
*ஆரஞ்சுப்பழத்திலிருந்து ஜூஸ் எடுக்கவும்.கிவி பழத்தின் தோல் நீக்கவும்.

*அனைத்தையும் ஒன்றாக ப்ளெண்டரில் பால் விட்டு அடித்து பரிமாறவும்.
பி.கு:
தேவையெனில் சர்க்கரை சேர்த்து பருகவும்.

Sending this recipe to Show me ur smoothie by Divya
Wednesday 9 June 2010 | By: Menaga Sathia

பைனாப்பிள் சேமியா கேசரி

எனக்கு பைனாப்பிள் போட்டு கேசரி செய்வது ரொம்ப பிடிக்கும்.அதன் வாசனைக்காகவும்,சுவைக்காகவும் ரொம்ப பிடிக்கும்...
 
தே.பொருட்கள்:

சேமியா - 1 கப்
வெந்நீர் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை -தேவைக்கு
பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 1/4 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கேசரி கலர் - 1 சிட்டிகை
 
செய்முறை :
*கடாயில் சிறிது நெய்யில் முந்திரி,திராட்சை மற்றும் பைனாப்பிள் துண்டுகளை வறுத்து தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் சிறிது நெய் விட்டு சேமியாவை வறுக்கவும்,பின் வெந்நீர் விட்டு வேகவிடவும்.சிறிது நீரில் கேசரிகலரை கரைத்து ஊற்றவும்.

*சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு சுண்டும் வரை கிளறி எசன்ஸ்+ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
 
பி.கு:
சர்க்கரையின் அளவை அவரவர் தேவைக்கு போடவும்.இந்தளவு சர்க்கரை சரியாக இருக்கும்.சேமியா வேகவில்லையெனில் மேலும் சிறிது வெந்நீர் சேர்த்து வேகவிடவும்.
Tuesday 8 June 2010 | By: Menaga Sathia

மிளகு சீரக சாம்பார்

தே.பொருட்கள்:

துவரம்பருப்பு - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1 சிறியது
பூண்டுப்பல் - 4
கீறிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

பொடிக்க:

மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்


தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*குக்கரில் துவரம்பருப்பு+மஞ்சள்தூள்+வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+பூண்டு நைத்தையும் நன்கு குழைய வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தள்ளவைகளைப்போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் வேகவைத்த பருப்பை ஊற்றி கொதிக்கும் போது பொடித்த மிளகு சீரகம் போட்டு 5 நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்.

Sending this recipe CWS - Pepper event by Padma started by Priya & Healing foods - onions hostedt by Priya started by Siri

Monday 7 June 2010 | By: Menaga Sathia

தேங்காய்ப்பால் ரசம் - 2

தே.பொருட்கள்:
தேங்காய் -1/2 மூடி
புளி - 1எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*தேங்காயைத் துருவி 1 மற்றும் 2ஆம் பால் எடுக்கவும்.

*புளியை 1/4 கப் அள்வில் கரைத்துக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து புளிகரைசல்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் 2ஆம் பாலை ஊற்றி லேசாக கொதிக்கும் போது 1ஆம் பால் ஊற்றி நுரை வரும் போது இறக்கிவிடவும்.

*ரசம் ரொம்ப கொதிக்க விடக்கூடாது.
Sunday 6 June 2010 | By: Menaga Sathia

பைனாப்பிள் ஸ்கோன்ஸ்

தே.பொருட்கள்:

கோதுமை மாவு - 1 1/2 கப்
ஒட்ஸ் - 1 கப்
பொடித்த பிரவுன் சர்க்கரை - 1 1/2 கப்
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் தூண்டுகள் - 1/2 கப்
பட்டர் - 1/4 கப்
வெஜிடபிள் எண்ணெய் - 1/4 கப்
பட்டைதூள் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
 
செய்முறை :
* கோதுமை மாவு+ஒட்ஸ்+பட்டைதூள்+பேக்கிங் பவுடர் ஒன்றாக கலக்கவும்.

*ஒரு பவுலில் பட்டர்+எண்ணெய்+சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலந்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.

*இதனுடன் மாவு வகைகள்+பைனாப்பிள்துண்டுகள் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு கெட்டியாக கலக்கவும்.

*அவன் டிரேயில் கொஞ்சம் மாவு தூவி மாவை வட்டமாக 1 இஞ்ச் அளவில் தடிமனாக தட்டு முக்கோணங்களாக வெட்டவும்.

*190°C முற்சூடு செய்த அவனில் 25 - 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
Saturday 5 June 2010 | By: Menaga Sathia

ராஜ்மா-சோயா கொழுக்கட்டை

ராஜ்மா(Red kidney beans) ,இதில் dietary fibre அதிகம் இருக்கு.மேலும் Manganese ,Protein,Iron,Vitamin K,B1 (Thiamin) நிறைய தாதுக்கள் நிறைந்த தானியம் இது.கொலஸ்ட்ரால்,சர்க்கரையை குறைக்கிறது.ப்ரவுன் ரைஸ்,கோதுமை பாஸ்தா மற்ற தானியங்களை விட இதில் அதிகளவு ப்ரோட்டீன் இருக்கு.

இதனை தினமும் உண்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.மலச்சிக்கலுக்கு இது சரியான தீர்வு.யார் அதிகம் most water-soluble dietary fiber உணவுகள் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு 12% less coronary heart disease (CHD) and 11% less cardiovascular disease (CVD) நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

இதில் நார்சத்து மட்டுமில்லை folate and magnesium கூட நிறைய இருக்கு .1 கப் ராஜ்மாவில் 57.3%folate,19.9% magnesium ,28.9% iron,18.7% Thiamin (Vitamin B1),30.7% Protein இருக்கு.வளரும் குழந்தைகளுக்கும்,மெனோபாஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும்,கர்பிணிகளுக்கும் இரும்புசத்து நிறைய தேவை.அவர்கள் இதனை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.ஞாபக சக்திக்கும் இது நல்லது.

காய்ந்தது மற்றும் டின்களில் ராஜ்மா கிடைக்கிறது.காய்ந்த பருப்பினை குறைந்தது 1 வருடம் வரை பயன்படுத்தி சமைப்பதே நல்லது.டின்களில் இருக்கும் உணவு பொருட்களில் சத்துக்கள் குறைவாகவே இருக்கும்.காய்ந்த பருப்பினை குறைந்தது 6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது.வேகவைத்த பருப்பினை 3 நாட்கள்வரை ப்ரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம்.
சோயாவைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே பார்க்கவும்.
இதில் நான் சமைத்த கொழுக்கட்டை குறிப்பினை பார்க்கலாம்.

தே.பொருட்கள்:
ராஜ்மா - 1/2 கப்
சோயா உருண்டைகள் - 20
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியா நறுக்கிய பச்சை மிளகாய் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*ராஜ்மாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.வடிகட்டிய நீரை சூப்பாக பயன்படுத்தி குடிக்கலாம்.

*சோயா உருண்டைகளை 10 நிமிடம் கொதி நீரில் போட்டு பின் குளிர்ந்த நீரில் 2-3 அலசி நீரை நன்கு பிழிந்துக் கொள்ளவும்.

*சோயா உருண்டைகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உதிர்த்துக் கொள்ளவும்.ராஜ்மாவையும் மிக்ஸியில் மசிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி ஆறவைக்கவும்.

*வதக்கிய பொருள்+சோயா+ராஜ்மா+உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*மிகவும் மிருதுவாக இருக்கும் இந்த கொழுக்கட்டை.

பி.கு:
விரும்பினால் தேங்காய் துறுவலும் சேர்த்து கொள்ளலாம்.
Friday 4 June 2010 | By: Menaga Sathia

கோஸ் அப்பளப்பூ கூட்டு

தே.பொருட்கள்:

நறுக்கிய கோஸ் - 1 கப்
பொரித்த அப்பளப்பூ - 5
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
கடலைப்பருப்பு - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சோம்பு - 3/4 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து பாத்திரத்தில் வேகவைக்கவும்.

*3/4 பாகம் பருப்பு வந்ததும் கோஸ்+பச்சை மிளகாய் +தக்காளி+வெங்காயம் சேர்த்து மேலும் நன்கு வேக வைக்கவும்.

*அனைத்தும் நன்கு வெந்ததும் நொறுக்கிய அப்பளப்பூ+உப்பு+உருளையை உதிர்த்து போடவும்.

*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து போடவும்.
01 09 10