Saturday, 5 June 2010 | By: Menaga sathia

ராஜ்மா-சோயா கொழுக்கட்டை

ராஜ்மா(Red kidney beans) ,இதில் dietary fibre அதிகம் இருக்கு.மேலும் Manganese ,Protein,Iron,Vitamin K,B1 (Thiamin) நிறைய தாதுக்கள் நிறைந்த தானியம் இது.கொலஸ்ட்ரால்,சர்க்கரையை குறைக்கிறது.ப்ரவுன் ரைஸ்,கோதுமை பாஸ்தா மற்ற தானியங்களை விட இதில் அதிகளவு ப்ரோட்டீன் இருக்கு.

இதனை தினமும் உண்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.மலச்சிக்கலுக்கு இது சரியான தீர்வு.யார் அதிகம் most water-soluble dietary fiber உணவுகள் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு 12% less coronary heart disease (CHD) and 11% less cardiovascular disease (CVD) நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

இதில் நார்சத்து மட்டுமில்லை folate and magnesium கூட நிறைய இருக்கு .1 கப் ராஜ்மாவில் 57.3%folate,19.9% magnesium ,28.9% iron,18.7% Thiamin (Vitamin B1),30.7% Protein இருக்கு.வளரும் குழந்தைகளுக்கும்,மெனோபாஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும்,கர்பிணிகளுக்கும் இரும்புசத்து நிறைய தேவை.அவர்கள் இதனை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.ஞாபக சக்திக்கும் இது நல்லது.

காய்ந்தது மற்றும் டின்களில் ராஜ்மா கிடைக்கிறது.காய்ந்த பருப்பினை குறைந்தது 1 வருடம் வரை பயன்படுத்தி சமைப்பதே நல்லது.டின்களில் இருக்கும் உணவு பொருட்களில் சத்துக்கள் குறைவாகவே இருக்கும்.காய்ந்த பருப்பினை குறைந்தது 6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது.வேகவைத்த பருப்பினை 3 நாட்கள்வரை ப்ரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம்.
சோயாவைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே பார்க்கவும்.
இதில் நான் சமைத்த கொழுக்கட்டை குறிப்பினை பார்க்கலாம்.

தே.பொருட்கள்:
ராஜ்மா - 1/2 கப்
சோயா உருண்டைகள் - 20
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியா நறுக்கிய பச்சை மிளகாய் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*ராஜ்மாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.வடிகட்டிய நீரை சூப்பாக பயன்படுத்தி குடிக்கலாம்.

*சோயா உருண்டைகளை 10 நிமிடம் கொதி நீரில் போட்டு பின் குளிர்ந்த நீரில் 2-3 அலசி நீரை நன்கு பிழிந்துக் கொள்ளவும்.

*சோயா உருண்டைகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உதிர்த்துக் கொள்ளவும்.ராஜ்மாவையும் மிக்ஸியில் மசிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி ஆறவைக்கவும்.

*வதக்கிய பொருள்+சோயா+ராஜ்மா+உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*மிகவும் மிருதுவாக இருக்கும் இந்த கொழுக்கட்டை.

பி.கு:
விரும்பினால் தேங்காய் துறுவலும் சேர்த்து கொள்ளலாம்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

srikars kitchen said...

Nalla healthy dish.. parkavey nalla irukku.. thxs for sharing..

Umm Mymoonah said...

Very innovative soya, rajma kozhukattai Menaga and nice information regarding kidney beans,very useful.

LK said...

அபிடேர் ரீடிங் தி நேம் எனக்கு "அபியும் நானும் ஜோக்"தன ஞாபகம் வந்துச்சு

Premalatha Aravindhan said...

Healthy kozhukattai,luks very nice...Iam sure the taste must be too gud...thanks for sharing.

vanathy said...

Menaga, very healthy diet. Looking yummy too.

asiya omar said...

அருமையாக இருக்கு,சத்தெல்லாம் லிஸ்ட் போட்டு அசத்தலாக இருக்கு.

மனோ சாமிநாதன் said...

ரஜ்மாவைப்பற்றிய விபரங்கள் அருமை! இந்தக் கொழுக்கட்டையைப்பார்த்ததும் செய்து பார்க்க வேண்டும்போல இருக்கிறது, மேனகா!

Aruna Manikandan said...

Sounds interesting!!!
Nice healthy kozhukatta :-)

நட்புடன் ஜமால் said...

மீண்டும் ஒரு சிறந்த டயட் ரெஸிபி

நன்றி சகோதரி.

sandhya said...

ஆரோகியமானா உணவு நான் இது வரை செய்ஞ்சு பார்த்ததில்லை ..நல்ல பதிவு நன்றி

அஹமது இர்ஷாத் said...

Nice Dish....

ஜெய்லானி said...

ஆ...கொழுக்கட்டை....

Geetha Achal said...

ராஜ்மாவினை மற்றும் வைத்து தனியாக கொழுக்கட்டை செய்து இருக்கின்றேன்...ஆனால் சோயா சேர்த்து செய்ததில்லை...கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும்...நன்றி...சூப்பர்ப்...

அக்பர் said...

ராஜ்மா வின் சத்துக்களை பற்றி எழுதியது ரொம்ப நல்லா இருக்கு.

பார்க்கும் போதே சாப்பிட தோணுது. ம்ம்ம்..... ஊரில் சாப்பிட்டது.

ஜெரி ஈசானந்தன். said...

சமையல் குறிப்புகளோடு ...பயனுள்ள அறிவியல் தகவல் ...புதுமை.

Priya said...

Kozhukatta superaa irruku Menaga, appadiye yeduthu saapidanam pola irruku..

Mrs.Menagasathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி உம் மைமூனா!!

எல்கே உங்க கமெண்ட் எனக்கு புரியலைங்க...

நன்றி பிரேமலதா!!

Mrs.Menagasathia said...

நன்றி வானதி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி அம்மா!! செய்து பாருங்கள்,வித்தியாசமா இருக்கும்..

நன்றி அருணா!!

Mrs.Menagasathia said...

நன்றி சகோ!!

நன்றி சந்தியா!!

நன்றி அஹமது!!

நன்றி ஜெய்லானி!! ஆ..கொழுக்கட்டைன்னு சொன்னா என்ன அர்த்தம்...

Mrs.Menagasathia said...

நன்றி கீதா!! சோயா சேர்த்து செய்தால் இன்னும் நன்றாகயிருக்கும்..

நன்றி அக்பர்!!ஈசியான செய்முறைதான்,நீங்களே செய்து சாப்பிடலாமே..

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஜெரி!!

நன்றி ப்ரியா!!

Kanchana Radhakrishnan said...

healthy dish.

ஜெய்லானி said...

//நன்றி ஜெய்லானி!! ஆ..கொழுக்கட்டைன்னு சொன்னா என்ன அர்த்தம்...//

பழைய நினைவு ஆனா அவங்க இங்க இன்னைக்கு வரல.. வந்திருந்தா பதில்தானா கிடைச்சிருக்கும் .சூப்பர் கொழுக்கட்டை :-)

sarusriraj said...

நல்ல பதிவு மேனகா , தகவலுக்கு நன்றி மேனகா.

LK said...

after reading the name, i remeber onejoke from "abhium nanum "

Jaleela Kamal said...

ராஜ்மா சாலட் சுண்டல் தான் செய்து இருக்கேன், அடைகூட ஒரு முறை செய்து உள்ளேன், ஆவியில் வேக வைத்தது என்றால் இபப்டி செய்து கொள்ளலாம் இல்லையா> உடனே ராஜ்மா வாங்கியாகனுமே/

ராம் ம்காலிங்கம் said...

Very healthy and innovative recipe. Thanks for sharing

01 09 10