Thursday, 3 December 2009 | By: Menaga sathia

சுறா புட்டு

தே.பொருட்கள்:

சுறாமீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை -சிறிது
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பூண்டுப்பல் -5
இஞ்சி - சிறுத்துண்டு


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நீரில் வேகவிடவும்.

*வெந்ததும் தோலை எடுக்கவும்.( தோலில் மண் இருக்கும் )

*பின் உப்பு+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும்.

*வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை+இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து இஞ்சி+பூண்டு+வெங்காயம்+பச்சை மிளகாய் அனைத்தயும் போட்டு நன்றாக வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் மீனைப் போட்டு நன்கு கிளறவும்.

*நன்கு பொலபொலவென்று ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பி.கு:

விருப்பப்பட்டால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

தேவன் மாயம் said...

நீங்க கலக்குங்க!!
சுறாப் புட்டு சாப்பிட்டு மாமாங்கமாச்சு!!

ஜெட்லி said...

எனக்கு பிடிச்ச டிஷ் .:))

வால்பையன் said...

நாக்குல எச்சில் ஊறுது,
கொஞ்சம் பார்சல் அனுப்பி வையுங்களேன்!

Shama Nagarajan said...

yummy yummy recipe..thanks for sharing

Priya said...

My all time favourite...Mouthwatering..

கோபிநாத் said...

@ சென்னை அஞ்சப்பர் ஹோட்டலிற்கு இதுக்காகவே போனதுண்டு. சுறாவை எப்படி பார்த்து வாங்க வேண்டும்? இதுவரை வாங்கியது இல்லை. டிப்ஸ் குடுத்தால் உபயோகமாக இருக்கும். நன்றி.

பித்தனின் வாக்கு said...

என்ன சொல்ல நான் இன்னமும் பத்து நாளைக்கு லீவுங்க நன்றி.

thenammailakshmanan said...

Very nice receipe Menaka

Thanks for awards and kind heart pa

ஸாதிகா said...

சுறா புட்டு என்பார்கள்.இப்பொழுதுதான் பார்க்கிறேன்.ஆனால் மேனகா,நான் சுறா மீன் உண்பதில்லை.மற்ற சதைப்பற்றான மீனில் செய்யலாமா?

Mrs.Menagasathia said...

இந்தியாவில் விற்கும் சுறா மீந்தான் வெளிநாட்டுக்கு அனுப்பிடறாங்களே.ம்ம்ம் அடுத்தமுறை செய்யும்போது உங்களுக்கு பார்சல் அனுப்பிடறேன்.நன்றி மருத்துவரே!!

Mrs.Menagasathia said...

எனக்கும் ரொம்ப பிடித்தது.நன்றி ஜெட்லி!!

Mrs.Menagasathia said...

உங்களுக்கு இல்லாததா.நிச்சயம் பார்சல் அனுப்புறேன் அடுத்தமுறை செய்யும்போது.நன்றி வாலு!!

Mrs.Menagasathia said...

நன்றி ஷாமா!!

நன்றி ப்ரியா!!

Mrs.Menagasathia said...

இங்கு பாக்கெடில் ப்ரோசன் செக்‌ஷனில் இருக்கும்.அதை தான் வாங்குவேன்.சிலநேரம் ப்ரெஷ்ஷாக கிடைக்கும்.பால் சுறா ரொமப் நல்லாயிருக்கும்.அதை வாங்கி சமைத்து பாருங்கள்.நன்றி கோபி அண்ணா!!

Mrs.Menagasathia said...

சகோ நீங்க சைவராக இருந்தாலும் அசைவ குறிப்புக்கும் பின்னூட்டம் போடும் உங்க குணம் பிடிக்குது.நன்றி பித்தன்!!

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு மேனகா.

உங்கள் பதிவிலா அல்லது கீதா பதிவிலா என்று நினைவில் இல்லை, ஆனா இது படித்த பதிவு போல் இருக்கிறது.

Mrs.Menagasathia said...

நன்றி அக்கா!!

மற்ற சதைப்பற்றான் மீனிலும் செய்யலாம்.கானாங்கழதை என்ற மீனில் இதுபோல் செய்வாங்க.அந்த மீனில் நான் புட்டு சாப்பிட்டதில்லை.ஆனா சாப்பிட்டவங்க நல்லாயிருக்கும்னு சொல்வாங்க.நன்றி ஸாதிகா அக்கா!!

Mrs.Menagasathia said...

நன்றி சிங்கக்குட்டி!!கீதா பதிவில் படித்திருப்பிங்க.

♠புதுவை சிவா♠ said...

நாபகம் வருதே .... நாபகம் வருதே சுறாப் புட்டுக்கு

தங்கையுடன் சண்டை போட்டது .... நாபகம் வருதே !

நன்றி

கருவாச்சி said...

சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

(வெள்ளைச்)சுறாமீன் ரொம்ப பிடிக்கும். ஊருக்கு வரும்போது இதை மறக்காம வீட்ல செய்துகேக்கனும்.

tamiluthayam said...

சமையல் வலைப்பூக்களை எல்லாம் பார்க்கும் போது, சாப்பிட இத்தனை பதார்த்தங்கள் இருக்கா ன்னு ஒரே திகைப்பா இருக்கு

Padma said...

My son's fav... look delicious.

Thamarai selvi said...

மாமி என்ன இது ரொம்ப நாளா வரலனு ஒரு வார்த்தை கூட கேட்காமல் இருக்கீங்களே? சரி உங்களுக்கு msg அனுப்புறேன் பாருங்க..மருமக நலமா? சுறா புட்டு + பழ கலவை தொக்கு எல்லாமே நல்லா இருக்கு..சுறா ட்ரை பண்ணமுடியல, ஆனால் பழகலவை தொக்கு ட்ரை பண்ணினேன் நல்லா இருந்தது, ஆனால் அது தான் ஒரிஜினல் டேஸ்ட்டானு தெரியல, இதுக்கு முன்னால நான் சாப்ட்டதே இல்ல, சரி டைம் ஆச்சு கிளம்புறேன், எங்கயா? உங்க பிளாக்ல பார்க்கமால் விட்டத பார்க்கத்தான்...

Malar Gandhi said...

We make this exactly this way, back home. Now I can never even hope' to find such a fish here:( Surra puttu is also one of my fav' fish item:)

my kitchen said...

Never tried before,want to try ur version,looks really good

Mrs.Menagasathia said...

நன்றி சகோதரரே!!

நன்றி கருவாச்சி!!

Mrs.Menagasathia said...

நன்றி நவாஸ் ப்ரதர்!!

நன்றி தமிழ் உதயம்!!தங்கள் வருகைக்கும் நன்றி....

Mrs.Menagasathia said...

நன்றி பத்மா!!

மாமி நலமா?உங்க மெசேஜ் பார்க்கல.பார்த்ததும் பதில் போடுறேன்.தொக்கு எப்படி இருந்ததுன்னு சொல்லவேயில்லையே..செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததற்க்கு நன்றி மாமி.என் கம்ப்யூட்டர் இப்போதான் சரி செய்து கொண்டுவந்தார்.

Mrs.Menagasathia said...

நன்றி மலர்!!

நன்றி செல்வி!!

சக்தி த வேல்..! said...

i am damn hungry

Mrs.Menagasathia said...

நன்றி சக்திவேல் தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்...

01 09 10