தே.பொருட்கள்:
பொடியாக வெட்டிய பீர்க்கங்காய்த் தோல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 நெல்லிக்காயளவு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கொள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
செய்முறை :
*எள்+உளுத்தம்பருப்பு+கொள்ளு வெரும் கடாயில் வறுக்கவும்.
*எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைக்கவும்.அதே எண்ணெயில் காய்ந்த மிளகாய்+தேங்காய்த்துறுவல் வதக்கவும்.
*சிறிது எண்ணெய் விட்டு பீர்க்கங்காய்த்தோலை வதக்கவும்.
*ஆறியதும் புளி+உப்பு சேர்த்து அனைத்தையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுக்கவும்.
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
இத சாப்டா உடம்புக்கு என்ன நன்மைன்னு ஒவ்வொரு குறிப்புக்கும் சொன்னா ரொம்ப உபயோகமா இருக்கும்....
http://thulasidhalam.blogspot.com/2008/03/blog-post_6333.html
போனவருசம் மார்ச்லே அரைச்ச துவையல் இங்கே கிடக்குப்பா.
அட பழய துவையல்..???!!!
புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)
http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html
பீர்க்கங்காய்ல இப்படி ஒரு அயிட்டம் இருக்கா..பலே..
அருமை சகோதரி.
வீன் செய்யாமல் துவையல் செய்திட்டீங்க
இனி பீர்க்கங்காய் தோல் வேஸ்ட்டாகாது
நானும் அடிக்கடி இதே போல் செய்வேன். இந்த துவையலில் நார்சத்து நிறய்ய அடங்கியுள்ளது. நல்ல குறிப்பு.
nice and my favourite one
பீர்க்கங்காய் தோல் துவையல் இது வரை செய்ததில்லை, கூட்டு மட்டும் தான் வைத்து சாபபிட்டு இருக்கோம்.
Olá, amiga!
Conheci seu cantinho... tudo de bom!...
Lindo, criativo, nutritivo e delicioso!
Amei!!!
Você é muito talentosa!... parabéns!!!
Espero você em:
magiadaines.blogspot.com
Boa semana!
Beijinhos.
Itabira - Brasil
ஆகா எனக்குப் பிடித்த துவையல் இது. எள்,கொள்ளு கொஞ்சம் புதியதாக உள்ளது. இதோ அடுத்த பிளைட்டில் சாப்பிட வருகின்றேன். இந்த துவையலை எங்க ஊர்ப் பக்கம் செய்யும் முறையைத் தெய்வசுகந்தி பதிவு இட்டுள்ளார். நன்றி.
பார்லி,ஓட்ஸ்,கொள்ளு...வித்தியாசமான பொருட்களை கொண்டு அசத்தறீங்க.
Post a Comment