Tuesday 31 March 2015 | By: Menaga Sathia

சௌ சௌ கூட்டு ,ரசம்& வாழைக்காய் வறுவல் /30 Days Veg Lunch Menu # 17

print this page PRINT IT
இன்றைய சமையல்

பருப்பு ரசம்
சௌ சௌ கூட்டு
வாழைக்காய் வறுவல்

*பருப்புகளை வேக வைத்து எடுத்து விட்டால்,ரசம் மற்றும் கூட்டு உடனே செய்து விடலாம்.

*வாழைக்காய் வறுவலுக்கு பதில் உருளைகிழங்கை இதே போல் செய்யலாம்.
Monday 30 March 2015 | By: Menaga Sathia

வாங்கிபாத்&உருளை சிப்ஸ் / 30 Days Veg Lunch Menu # 16

print this page PRINT IT
இன்றைய சமையல்

வாங்கிபாத்
உருளை சிப்ஸ்

*உருளை சிப்ஸ் கடையில் வாங்கியது.

*சிம்பிள் கத்திரிக்காய் சாதம் குறிப்பினை இங்கே பார்க்கவும்.
Sunday 29 March 2015 | By: Menaga Sathia

வத்தகுழம்பு,கொத்தவரங்காய் உசிலி & கேரட் கீர்/30 Days Veg Lunch Menu # 15


print this page PRINT IT
இன்றைய சமையல்

கொத்தவரங்காய் உசிலி

*கொத்தவரங்காய்க்கு பதில் வாழைப்பூ,கோஸ்,கேரட்,குடமிளகாயில் உசிலி செய்யலாம்.

*தயிர்க்கு பதில் ரசம் செய்துக் கொள்ளலாம்.

Saturday 28 March 2015 | By: Menaga Sathia

எலுமிச்சை சாதம்,உருளைக்கிழங்கு வறுவல் / 30 Days Veg Lunch Menu # 14

print this page PRINT IT
எலுமிச்சை சாதம்
உருளை வறுவல்

*சாதத்தை வடித்து ஆறவைத்தால் எலுமிச்சை கலவை ரெடி செய்து ஆறியதும் சாதத்தில் கலந்தால் சாதம் ரெடி ..

*உருளை வேகவைத்து தாளிதம் செய்யவும்.

*மொத்த சமையலும் 1/2 மணிநேரத்தில் முடித்துவிடலாம்.
Friday 27 March 2015 | By: Menaga Sathia

கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு,வெண்டைக்காய் பொரியல் & உப்பு மாங்காய்/ 30 Days Veg Lunch Menu # 13

print this page PRINT IT
இன்றைய மெனு

கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு
வெண்டைக்காய் பொரியல் 
உப்பு மாங்காய்

முகநூலில் அறிமுகமான பானுமதி மாமியின் குறிப்பின்படி இந்த பொரிச்ச குழம்பு செய்தேன்.சூப்பராக இருந்தது.நன்றி மாமி!!

*மாமியின்  கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு குறிப்பினை வேறொருநாள் பகிர்ந்து கொள்கிறேன்.

*நான் செய்த பொரிச்ச குழம்பு ரெசிபியை இங்கே பார்க்கவும்.

*உப்பு மாங்காய் என்பது மாங்காயை நீளவாக்கில் அறிந்து உப்பில் ஊறவைத்து உடனே பயன்படுத்தலாம்.
Thursday 26 March 2015 | By: Menaga Sathia

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, சிறகு அவரைப் பொரியல் & பீன்ஸ் பொரியல் / 30 Days Veg Lunch Menu # 12

print this page PRINT IT
 இன்றைய சமையல்

எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்
சிறகு அவரை பொரியல்
பீன்ஸ் பொரியல்

*சிறகு அவரை பொரியல் குறிப்பினை வேறொரு நாள் பகிர்ந்துக் கொள்கிறேன்..

*பீன்ஸ் பொரியலுக்கு பதில் கேரட் பொரியல் செய்யலாம்.

*எண்ணெய் கத்திரிக்காய் குறிப்பின் இன்னொரு செய்முறை இங்கே..
Wednesday 25 March 2015 | By: Menaga Sathia

பிஸிபேளாபாத் & அப்பளம் / 30 Days Veg Lunch Menu # 11

print this page PRINT IT

பிஸிபேளாபாத்
அப்பளம்

*இதில் நான் சேர்த்திருக்கும் காய்கள் முருங்கை,கத்திரிக்காய் & கேரட்..

*காய்கள் மற்றும் வெங்காயம்+தக்காளி நறுக்கவும்.

*பிஸிபேளாபாத் பொடி ரெடி செய்யவும் அல்லது சுலபமாக செய்ய சாம்பார் பொடி உபயோகிக்கலாம்.

*சாதம்+பருப்பு வேக வைக்கும் போது இன்னொரு பாத்திரத்தில் காய்கள்+புளிதண்ணீர்+பொடி இவற்றை வேகவைக்கவும்.

*சாதம் வெந்த பிறகு வேகவைத்த காய்கலவை சேர்த்து பின் தாளித்தால் சாதம் ரெடி!!

*இதில் அரிசிக்கு பதில் சிறுதானியம் சேர்த்து செய்யலாம்.
Tuesday 24 March 2015 | By: Menaga Sathia

மோர் ரசம்,கத்திரிக்காய் பொரியல்,சைனீஸ் கேபேஜ் பொரியல்/30 Days Veg Lunch Menu #10

print this page PRINT IT இன்றைய சமையல்

மோர் ரசம்
கத்திரிக்காய் பொரியல்
சைனீஸ் கேபேஜ் பொரியல்

*மோர் ரசத்திற்கு புளிப்பான தயிர் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்,செய்வதற்கும் மிக சுலபம்.

*இன்னொரு வகை மோர் ரசம் செய்ய இங்கே பார்க்கவும்.

*கத்திரிக்காய் மற்றும் சைனீஸ் கேபேஜ் இவற்றை பொரியலுக்காக தயார் செய்யவும்.

*இதில் சுகினிக்கு பதில் கேபேஜ் சேர்த்து செய்துள்ளேன்.

*கடைசியாக ரசம் தாளித்து செய்தால் ரெடி..

*மொத்த சமையலும் 1 மணிநேரத்திற்குள் முடித்துவிடலாம்.
Monday 23 March 2015 | By: Menaga Sathia

தக்காளி பிரியாணி , வெள்ளரிக்காய் பச்சடி / 30 Days Veg Lunch Menu # 9

print this page PRINT IT
இன்றைய சமையல்

தக்காளி பிரியாணி
வெள்ளரிக்காய் பச்சடி

*தக்காளி பிரியாணியின் குறிப்பினை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

*வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் இவற்றை நறுக்கவும்.

*அரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.

*பின் குக்கரில் பிரியாணிக்கு செய்வது போல் செய்து வேகவைத்து எடுத்தால் பிரியாணி ரெடி!!

*அதற்குள் பச்சடிக்கு தயார் செய்யவும்.இதில் கோவைக்காய் பதில் வெள்ளரிக்காய் சேர்க்கவும்.

*மொத்த சமையலுக்கான நேரம் 1/2 மணிநேரம்.
Sunday 22 March 2015 | By: Menaga Sathia

சைவ மீன் குழம்பு வறுவல் மற்றும் வாழைப்பூ பொரியல் | 30 Days Veg Lunch Menu # 8


print this page PRINT IT
இன்றைய சமையல்

சைவ மீன் குழம்பு மற்றும் வறுவல்
வாழைப்பூ பொரியல்

*சைவ மீன் குழம்பு குறிப்பினை விளக்கபடங்களுடன் வேறொரு நாள் பகிர்ந்து கொள்கிறேன்.

*காராமணியை ஊறவைத்து வாழையிலை அல்லது அலுமினியம் பேப்பரில் தட்டி ஆவியில் வேகவைத்து துண்டுகளாகவும்.

*மீன் குழம்பு செய்வது செய்து வேகவைத்த சைவ மீனை குழம்பு கொதிக்கும் போது சேர்க்கவும்.

*மீதி பாதி சைவ மீனை மீன் வறுப்பது போல் மசாலா தடவி வறுக்கவும்.மிக சுவையாக இருக்கும்.

*வாழைப்பூ சுத்தம் செய்து பொரியல் தயார் செய்யவும்.

*வாழைப்பூ பொரியலில் முருங்கை கீரை சேர்க்காமல் செய்துள்ளேன்.

*மொத்த சமையலும் செய்து முடிக்க குறைந்தது 2 மணிநேரமாகும்.


Saturday 21 March 2015 | By: Menaga Sathia

பருப்பு ரசம்,வெண்டைக்காய் பொரியல்,மெது போண்டா | 30 Days Veg Lunch Menu # 7

print this page PRINT IT
இன்றைய சமையல் மிக சுலபமாக செய்துள்ளேன்

பருப்பு ரசம்
வெண்டைக்காய் பொரியல்
மெது போண்டா

*ரசம் செய்ய துவரம்பருப்பு வேகவைக்கும் போதே புளியை ஊறவைத்து ரசத்திற்கு தயார் செய்துவிடலாம்.

*வெண்டைக்காயை நறுக்கி விட்டால் 10 நிமிடங்களில் பொரியலும் ரெடி..

*கடைசியாக சாப்பிடும் நேரத்தில் மெது போண்டாவிற்கு தயார் செய்து எண்ணெயில் பொரித்து சூடாக பரிமாறலாம்.
Friday 20 March 2015 | By: Menaga Sathia

அகத்திக்கீரை சாம்பார் &வாழைக்காய் வறுவல் / 30 DaysVeg Lunch Menu # 6


print this page PRINT IT

இன்றைய சமையல்
அகத்திக்கீரை சாம்பார்
வாழைக்காய் வறுவல்

*அகத்திக்கீரை சாம்பாருக்கு ப்ரெஷ் அல்லது காய்ந்த கீரை பயன்படுத்தலாம்.

*ப்ரெஷ் கீரை வாங்கினால் நுனி கீரையை ஒடித்து காயவைத்து விட்டால் எப்பவேணுமானலும் சாம்பார் வைக்கலாம்.

*பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து வேகவைத்தால் சீக்கிரம் வேகும்.

*சாம்பாருக்கு வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் நறுக்கவும் மற்றும் வாழைக்காயை துண்டுகளாகி மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும்.

*சாம்பார் தாளித்த பின் சாதம்+வாழைக்காய் வறுத்தால் வேலை முடிந்தது.


*மொத்த சமையலும் செய்ய‌ 1 மணிநேரமாகும்.
Thursday 19 March 2015 | By: Menaga Sathia

புளியோதரை & மசால் வடை / 30 Days Veg Lunch Menu # 5

print this page PRINT IT
இன்றைய சமையல்

புளியோதரை
மசால் வடை

*புளிகாய்ச்சலை முதல் நாளே செய்துவைத்தால் வேலை இன்னும் சுலபம்.

*சாதத்தை மட்டும் வடித்து நன்றாக ஆறவைத்து புளிகாய்ச்சலை சேர்த்து கிளறினால் வேலை முடிந்தது.

*வடைக்கு பருப்பை ஊறவைத்து அரைத்த பின் சாப்பிடும் நேரத்தில் வடையை சுட்டு சூடாக பரிமாறலாம்.

*மொத்த சமையலுக்கான நேரம் 1 மணிநேரம்.

புளிசாதம் 2
ஐயங்கார் புளியோதரை
Wednesday 18 March 2015 | By: Menaga Sathia

மிளகு குழம்பு,பருப்பு துவையல் ,சுட்ட அப்பளம் / 30 Days Veg Lunch Menu # 4


print this page PRINT IT

4 வது நாள் சமையல்

மிளகு குழம்பு
பருப்பு துவையல்
சுட்ட அப்பளம்

*குழம்பு செய்வதற்கு மசாலாவை அரைத்து புளிகரைசலில் கலந்து வைக்கவும்.

*பருப்பு துவையலுக்கு பருப்பு+தேங்காய்+மிளகாய் வறுத்து அரைக்கவும்.பாசிபருப்புக்கு பதில் துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன்.

*கடைசியாக அப்பளத்தை நேரடியாக அடுப்பிலோ அல்லது மைக்ரோவேவிலோ சுட்டு எடுக்கவும்.

*அனைத்தும் செய்து முடிக்க 3/4 மணிநேரமே ஆகும்.
Tuesday 17 March 2015 | By: Menaga Sathia

பருப்பு உருண்டை குருமா,ரசம், ப்ரோக்கலி தண்டு பொரியல் / 30 Days Veg Lunch Menu # 3


print this page PRINT IT

 3 வது நாள் சமையல்

பருப்பு உருண்டை குருமா
தக்காளி ரசம்
ப்ரோக்கலி தண்டு பொரியல்

*உருண்டை குருமா செய்வதற்கு பருப்பினை 1 மணிநேரம் ஊறவைத்து அரைக்கவும்.

*குழம்பு செய்வதற்கு வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு இவற்றை நறுக்கி வைக்கவும்.

*ரசத்திற்கு புளி ஊறவைத்து தயார் செய்யவும்.

*ப்ரோக்கலியில் நாம் பூ மட்டும் எடுத்து விட்டு தண்டினை துக்கி போடுவோம்.அதனை தூக்கிபோடாமல் கோஸ் பொரியல் போல செய்யலாம்.

*சாதம்+குருமா+ரசம் செய்ய 1 1/2 மணிநேரம் ஆகும்.
Monday 16 March 2015 | By: Menaga Sathia

தேங்காய்ப்பால் ரசம் & காலிபிளவர் பஜ்ஜி / 30 Days Veg Lunch Menu # 2


print this page PRINT IT


இன்றைய சமையலில் பார்க்க போவது

தேங்காய்ப்பால் ரசம்
காலிபிளவர் பஜ்ஜி

மொத்த சமையலும் செய்ய குறைந்தது 3/4 மணிநேரம் ஆகும்.

*முதலில் ரசத்துக்கு தேங்காயிலிருந்து 1,2 &3 பால் எடுக்கவும்;புளியை ஊறவைத்து கரைக்கவும்.

*இதே போல் புளிக்கு பதில் எலுமிச்சை சாறு சேர்த்தும் செய்யலாம்.அந்த குறிப்பு இங்கே..

*காலிபிளவரை தனிபூக்களாக எடுத்து கொதிநீரில் பொட்டு எடுக்கவும்.

*ரசத்தை தாளித்து செய்த பின் ,பஜ்ஜி மாவு கரைத்து பஜ்ஜி போட்டு எடுக்கவும்.

*நான் எப்போழுதும் தேங்காயை துருவி ப்ரிசரில் வைத்து தேவைக்கு எடுத்து சமைப்பேன்.


*பஜ்ஜி மாவு ரெடிமேடாக இருந்தால் இன்னும் செய்வதற்கு சுலபம்.
Sunday 15 March 2015 | By: Menaga Sathia

கத்திரிக்கா முருங்கைக்காய் மாங்கா சாம்பார் ,புடலங்காய் பொரியல்&பாகற்காய் வறுவல்/ 30 Days Veg Lunch Menu # 1

print this page PRINT IT
30 நாள் முழுவதும் வெஜ் சாப்பாடு என்ன சமைப்பது என்று அனைவருக்கும் குழப்பமாக இருக்கும்.வருடா வருடம் பங்குனி மாதம் வெஜ் சமையல் மட்டும் உண்பேன்.போன வருடம் விரதம் இருந்த போது எடுத்த படங்களை இந்த 1 மாதம் முழுவதும் நான் தெந்நிந்திய வெஜ் சமையலை பகிர்ந்து கொள்ள போகிறேன்..இந்த ஐடியா கொடுத்த கீதாவிற்கு நன்றி!!

இன்றைய சமையலில் பார்க்க போவது

கத்திரிக்காய் முருங்கைக்காய் மாங்காய் சாம்பார்
புடலங்காய் பொரியல்
பாகற்காய் வறுவல்
தாளித்த மோர்

மொத்த சமையலும் செய்ய குறைந்தது 1 மணிநேரம் ஆகும்.

*முதலில் சாம்பாருக்கு தேவையான காய்கள் மற்றும் பொரியலுக்கு தேவையான காய்களை நறுக்கவும்.

*சாம்பருக்கு வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் பொரியலுக்கு 1 வெங்காயமும் நறுக்கவும்.

*து.பருப்பை 1/மணிநேரம் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

*மோருக்கு பச்சை மிளகாய்+இஞ்சி+கரிவேப்பிலை+கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.

*கடைசியாக சாதம்+சாம்பார்+பொரியல் செய்த பின் மோரினை தாளிக்கவும்.



Saturday 14 March 2015 | By: Menaga Sathia

செட்டிநாடு மீன் வறுவல் / CHETTINAD FISH FRY | CHETTINAD MEEN VARUVAL | CHETTINAD RECIPES

print this page PRINT IT
எப்போழுதும் வறுவல் செய்யும் போது சிறிது கடலைமாவு சேர்த்து வறுத்தால் கடாயில் ஒட்டாது.

ஒரிஜினல் ரெசியில் எலுமிச்சை சாறுக்கு பதில் புளிதண்ணீர் சேர்த்து செய்துள்ளேன்.

இந்த முறையில் மசாலா சேர்த்து வறுக்கும் போது மீன் வாடையும் வராது.

Recipe Source : Spiceindiaonline

மசாலா செய்ய தே.பொருட்கள்

கிராம்பு- 4
பட்டை- 1 துண்டு
ஏலக்காய்- 3
மிளகு- 10
சீரகம் -1/2 டீஸ்பூன்
சோம்பு- 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
அன்னாச்சிப்பூ -1

தே.பொருட்கள்

சுத்தம் செய்த மீன் துண்டுகள்- 1 கிலோ
வரமிளகாய்த்தூள் -2 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
இஞ்சி -சிறுதுண்டு
பூண்டுப்பல் -5
கறிவேப்பிலை- 1 கொத்து
புளிதண்ணீர் -2 டீஸ்பூன்
கடலைமாவு -1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

செய்முறை

*மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.

*அதனுடன் வரமிளகாய்த்தூள்+தனியாத்தூள்+மஞ்சள்தூள் சேர்த்து பொடிக்கவும்.

*கடைசியாக இஞ்சி+பூண்டு+கறிவேப்பிலை சேர்த்து பல்ஸ் மோடில் 2 சுற்றி எடுக்கவும்.

*பாத்திரத்தில் மீன் துண்டுகள்+உப்பு+மசாலா பொருட்கள்+புளி தண்ணீர் சேர்த்து பிசறி 1/2 மணிநேரம் வைக்கவும்.

*வறுப்பதற்கு முன் கடலைமாவு சேர்த்து பிசறி ,கடாயில் எண்ணெய் ஊற்றி மீனை சேர்த்து 2 பக்கமும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

பி.கு

*இதே போல் வாழைக்காய்,சேனைக்கிழங்கும் வறுக்கலாம்.

*அவரவர் காரத்திற்கேற்ப மிளகாய்த்தூளை சேர்க்கவும்,நான்  அதிகம் சேர்த்து செய்துள்ளேன்.
Thursday 12 March 2015 | By: Menaga Sathia

கத்திரிக்காய் வத்தல் / KATHIRIKKAI VATHAL ( SUN DRIED EGGPLANT ) | SUMMER SPL


print this page PRINT IT
தே.பொருட்கள்

சிறிய கத்திரிக்காய் -5
மஞ்சள்தூள் -3/4 டீஸ்பூன்
உப்பு- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கத்திரிக்காயை கழுவி 4 ஆக நறுக்கி தண்ணீரில் போடவும்.

*பாத்திரத்தில் 3 கப் நீர்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து பாதி அளவு வெந்ததும் நீரை வடிக்கட்டவும்.

*தண்ணீர் வடிந்ததும் கத்திரிக்காயை துணியில் ஈரம் போக உலர்த்தி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.

*காய்ந்ததும் காற்று புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

*வற்றகுழம்பு வைத்தால் அருமையாக இருக்கும்.
* இதே போல் கொத்தவரங்காய் மற்றும் அவரைக்காயில் செய்யலாம்.

பி.கு

*காய்கள் பாதியளவு வெந்தால் போதும்.அவரைக்காய் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் கொதி நீரில் போட்டதும் 1 2 நிமிடங்களிலயே எடுத்துவிடவும்.
Monday 9 March 2015 | By: Menaga Sathia

கம்பு களி / KAMBU(PEARL MILLET / BAJRA ) KALI | BAJRA MUDDE | BAJRA SANGATI | MILLET RECIPES


பொதுவாக ராகியில் தான் களி செய்வாங்க,நான் அதற்கு பதில் கம்பு மாவில் செய்துருக்கேன்.சுவையும் அலாதிதான்.அசைவ குழம்பு அல்லது சாம்பார்,வத்தகுழம்புடன் சாப்பிட செம ருசி.

நான் மோர்,முருங்கை சாம்பார் மற்றும் அஸ்பாரகஸ் பொரியலுடன் பரிமாறியிருக்கேன்.

தே.பொருட்கள்

அரிசி -1 கப்
கம்பு மாவு -2 கப்
நீர் -6 1/2 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*பாத்திரத்தில் 6 1/2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் அரிசியை கழுவி போட்டு வேகவிடவும்.

*அரிசி வெந்ததும் உப்பு சேர்க்கவும்,பின் கம்பு மாவு சேர்த்து மூடிவிடவும்.(மாவு சேர்த்த பின் கிளற வேண்டாம்).

*சிறுதீயில் 5 10 நிமிடங்கள் வரை வேகவைத்த பின் மரக்கரண்டியால் கிளறி விடவும்.


*கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

*களியில் நெய் ஊற்றி சாம்பாருடன் சாப்பிட செம ருசி !!

*அல்லது உருண்டைகளை மோரில் கரைத்து குடிக்கலாம்.
01 09 10