Monday 3 August 2009 | By: Menaga Sathia

தயிர் வடை / Curd Vada

தே.பொருட்கள்:

வடைக்கு

முழு.வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 கப்
அரிசி - 1 டீஸ்பூன்
ஜவ்வரிசி - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

அலங்கரிக்க:

தயிர் - 250 கிராம்
உப்பு - தேவைக்கு
கேரட் துறுவல் - 2டேபிள்ஸ்பூன்
கலர் பூந்தி - சிறிது
இனிப்பு சட்னி - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

*உளுத்தம்பருப்பு+அரிசி+ஜவ்வரிசி இவற்றை 1/2 மணிநேரம் ஊறவைத்து உப்பு+பச்சை மிளகாய்+இஞ்சி சேர்த்து நன்கு கெட்டியாக மைய அரைக்கவும்.

*அரைத்த மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

*பொரித்த வடையை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு தண்ணீரை பிழிந்து வைக்கவும்.

*தயிரை உப்பு போட்டு கடையவும்.அதில் வடைகளை போட்டு அதன்மேல் கேரட்துறுவல்+பூந்தி+இனிப்பு சட்னி போட்டு பறிமாறவும்.

பி.கு:

1.விருப்பட்டால் தயிரை கடுகு+உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கலாம்.

2.தயிரில் சிறிது தேங்காய்த்துறுவல்+சீரகம்+பச்சை மிளகாய் அரைத்தும் சேர்க்கலாம்

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

சப்ராஸ் அபூ பக்கர் said...

கட்டாயம் சமைத்துப் பார்ப்பேன்.... (அம்மாகிட்ட சொல்லித் தான்...)

நல்ல ஒரு குறிப்பு....

வாழ்த்துக்கள்.....

வால்பையன் said...

இது கூட நல்ல சைடிஷ் தான்!

Unknown said...

சூப்பர் மேனகா.. ஹைதராபத்தில் தகிவடா என்று சாப்பிடுவோம் அது கடலைமாவில் செய்வாங்க. இது புதுசா இருக்கு ட்ரை பண்ணுகிறேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

My favourite Dish...

ப்ரியமுடன் வசந்த் said...

இப்பிடியே வித விதமா டிஷ் சாப்டனும்ன்னு ஆச தான் என்னா பண்றது நேரம் கிடைக்கலியே?

இதெல்லாம் டெய்லி சாப்டுற உங்களுக்கு வயித்துவலி வரலியா?
எங்கள விட்டுட்டு சாப்டுறீங்களே?

சாப்டுங்க சாப்டுங்க சாப்டுக்கிட்டே இருங்க........

Unknown said...

மாமி நல்லா இருக்கு!!! எனக்கும் உங்க மருமகனுக்கும் சுத்தமா தயிர் ஆகாது ஆனால் சம்பந்திக்கு ரொம்ப விருப்பம்...செய்து கொடுத்தேன்(வடை வீட்டுல இருந்தது)..பூந்தி போடல, ஆனால் தாளிச்சேன்..மருமக எப்படி இருக்காங்க? என்ன மாமி ஆன்லைன்ல வர மாட்டீங்களோ?

Anonymous said...

என் ப்ளாக்கில் உங்களின் பாராட்டிற்கு நன்றி மேனகா.கண்டிப்பாக என் பிரட் ஹல்வா செய்து பாருங்கள்.தங்களின் வருக்கைக்கும்,கருத்திற்கும் நன்றி.அடிக்கடி வாங்க.

அன்புடன்,
அம்மு.

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் add செய்யுங்கள் . You can submit all top tamil bookmark sites and u get more visitors to ur blog.
url: www.findindia.net

malar said...

போன்லேசஸ் சிகென் க்ரவெய்/மன்சோறேயன்/போன்றவைகளை காரம் எண்ணெய் குறைத்து எப்படி செய்வது என்று எழுதுங்க .

Suresh Kumar said...

தயிர் வடை சூப்பர்

Menaga Sathia said...

நிச்சயம் அம்மாகிட்ட சொல்லி சாப்பிட்டு பாருங்க.அப்புறம் இது உங்க பேவரிட்டாகி விடும்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அப்ராஸ் அபூ பக்கர்!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வால்பையன்!!

Menaga Sathia said...

கடலைமாவில் தயிர் வடை செய்வது புதுசா இருக்கு எனக்கு.உங்க குறிப்பில் போடுங்களேன்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

எனக்கும் இது ரொம்ப பிடித்த டிஷ்,நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

//இப்பிடியே வித விதமா டிஷ் சாப்டனும்ன்னு ஆச தான் என்னா பண்றது நேரம் கிடைக்கலியே?

இதெல்லாம் டெய்லி சாப்டுற உங்களுக்கு வயித்துவலி வரலியா?
எங்கள விட்டுட்டு சாப்டுறீங்களே?

சாப்டுங்க சாப்டுங்க சாப்டுக்கிட்டே இருங்க........//

அடடா,வாங்க எங்க வீட்டுக்கு,செய்து தரேன்.உங்களுக்கு இல்லாததா.ம்ம்ம் இன்னும் 6 ஆறுமாசத்தில இதெல்லாம் சாப்பிட பாக்கியம் கிடைக்கபோகுது.அப்புறமென்ன கவலையை விடுங்க வசந்த்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிப்பா!!

Menaga Sathia said...

ஓஓ சம்பந்திக்கு செய்து குடுத்திங்களா.அவருக்கு பிடித்ததா?ரொம்ப சந்தோஷம் மாமி.மருமகனுக்கு எப்படியாவது தயிர் சாப்பிட பழகிவிடுங்கப்பா.டைம் சரியா இருக்குப்பா.முடிந்தால் இன்னிக்கு வரேன்.ஓ கே வா.நன்றி மாமி!!

Menaga Sathia said...

நன்றி அம்மு மது மற்றும் ராம்!!

Menaga Sathia said...

மலர் வரும் வாரங்களில் உங்களுக்காக டயட் ரெசிபி போட்டிருக்கேன்பா.பாருங்கள்!!நிச்சயம் நீங்கள் கேட்ட சிக்கன் மஞ்சூரியன் குறிப்பு எழுதுகிறேன்.நன்றி மலர்!!

Menaga Sathia said...

//தயிர் வடை சூப்பர் //தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்!!

UmapriyaSudhakar said...

ஹாய் மேனகா, தயிர் வடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இனி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.படத்தை பார்க்கவே மிகவும் அருமையாக இருக்கிறது.

Menaga Sathia said...

வாங்க உமாப்ரியா,நீண்ட நாளைக்குபிறகு உங்கள் பின்னுட்டம் பார்ப்பதில் மகிழ்ச்சி.வீட்லயே இனி செய்து அசத்துங்க.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி உமா!!

Jaleela Kamal said...

மேனகா அருமையான‌ த‌யிர் வ‌டை பெரிய‌ பைய‌னுக்காக‌ அடிக‌க்டி செய்வேன், நோன்புகால‌ங்க‌ளில் க‌ண்டிப்பாக‌ 30 நாளில் இர‌ண்டு முறை செய்து விடுவேன்

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Asiya Omar said...

தயிர் வடை சூப்பர்.நானும் செய்வதுண்டு .ஆனால் இனிப்பு சட்னி பொட்டது இல்லை.அது எப்படி செய்யணும்.

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!! இனிப்பு சட்னி நாம் சாட் ஐயிட்டம்ஸ்களுக்கு செய்யும் பேரிச்சம்பழ சட்னிதான் அக்கா..

Unknown said...

Very easy dahi vada recipe. Thanks for sharing.

01 09 10