Wednesday 12 August 2009 | By: Menaga Sathia

வெல்ல சீடை /Vella Seedai

தேவையான பொருட்கள்

பதப்படுத்திய பச்சரிசி மாவு - 1 கப்
வறுத்த உளுத்த மாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1/2  கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு


செய்முறை:

*அரிசி மாவு,உளுத்த் மாவு,நசுக்கிய ஏலக்காய்,தேங்காய்,உருக்கிய நெய் எல்லாவற்றையும் கலந்துக்கொள்ளவும்.

*வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சிக்கொள்ளவும் (அதில் மண் இருக்கும்).

*வெல்லத்தை வடிக்கட்டி கலந்த மாவில் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி துணியில் 5 நிமிஷம் உலர்த்தவும்.

*எண்ணெய் காயவைத்து (ரொம்ப புகை வரும்வரை காயக்கூடாது) உருண்டைகளைப்போட்டு பொரித்தெடுக்கவும்.

*இந்த முறையில் பொரித்தால் சீடை வெடிக்காது.


மாவு பதப்படுத்தும் முறை:


பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து,கழுவி,தண்ணீரை வடிக்கட்டி துணியில் (நிழலில்) உலர்த்தவும்.உலர்ந்தபின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும்.சலித்த மாவை கடாயில் வாசம் வரும்வரை வறுக்கவும்.வறுத்த மாவை மீண்டும் சலித்து ஆற வைத்து காற்று புகாதவாறு எடுத்து வைக்கவும்.தேவையான போது உபயோகிக்கலாம்.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

வெல்ல சீடை பிரமாதம், இது எத்தனை நாள் வரைகெடாமல் இருக்கும்.

Menaga Sathia said...

1 வாரம் வரை கெடாமலிருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Unknown said...

ஆஹா இப்போதான் நானும் செய்ய போறேன், சீடை, தேன்குழல் 2ம்,அரிசி காய வச்சு இருக்கேன், கிருஷ்ண ஜெயந்திக்கு தான் நீங்களும் பண்ணீங்களா?

Menaga Sathia said...

ஓஒ நீங்களும் செய்ய போறிங்களா கிருஷ்ண ஜெயந்திக்கு,ஆமாம் மாமி இதெல்லாம் கிருஷ்ணருக்கு செய்தது தான்.

ஸாதிகா said...

வாவ்..எனக்கு ரொம்ப பிடிக்கும்

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

01 09 10