நேற்றுதான் ஆனந்தவிகடன் வாங்கிப் பார்த்தேன்.என் ப்ளாக் ஆனந்தவிகடன் வரவேற்பரையில் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் எனக்கு.வெளியிட்ட விகடனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இச்செய்தியை முதலில் தெரிவித்து வாழ்த்து சொன்ன வால்பையனுக்கும் மற்ற தோழர் தோழியர்க்கும் மனமார்ந்த நன்றி!!நன்றி!!நன்றி!!
தே.பொருட்கள்:
இறால் - 500 கிராம்
வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் -1 1/2குழிக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்து பொடிக்க:
கடுகு - 1/2டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
*இறாலை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.
*வறுத்து பொடிக்க குடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.
*கடாயில் இறாலை சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு தனியாக வைக்கவும்.
*கடாயில் எண்ணெய் உற்றி இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கி,மிளகாய்த்தூளை சேர்க்கவும்.
*உடனே வருத்த பொடி+உப்பு+வினிகர்+இறால் இவற்றை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
*மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றவும்.
*ஆறியபின் உபயோகப்படுத்தவும்.
*1 வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
கவனிக்க:
இறாலை எண்ணெயில் வதக்கும் போது நீர் விடும்.அது சுண்டும் வரை கிளறி இறக்கவும்.தண்ணீர் சேர்த்து வதக்ககூடாது.
28 பேர் ருசி பார்த்தவர்கள்:
சூப்பர் இறால் ஊறுகாய்...நன்றாக இருக்கின்றது மேனகா...டாப் டக்கர்...
இறால் ஊறுகாய் கடையில் தான் வாங்கி சாப்பிட்டு இருக்கேன். செய்ததில்லை.. முயற்சி செய்கிறேன்.. நோன்பு முடியட்டும்
என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
சொல்லி போடுங்க....!!!
இறால் ஊறுகாயா..? அது சரி, தங்கமணியிடம் சொல்லிட வேண்டியது தான்
தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!
நோன்பு முடிந்ததும் செய்துபாருங்கள்,கருத்துக்கு நன்றி பாயிஷா!!
உங்களின் ப்ளாக் வந்தேன்,மிகவும் நன்றாக உள்ளது பிரபா.
ஆமாம் ஷஃபிக்ஸ்,இறால் ஊறுகாய்தான்.செய்துபார்த்து சொல்லுங்கள்.நன்றி!!
இங்கே ஒரு கடினமான சமையல் குறிப்பு இருக்கு, முடிந்தால் வந்து பாருங்களேன் Please!!
http://shafiblogshere.blogspot.com/2009/08/blog-post_16.html
இறால் ஊறுகாய் இதுவரைக்கும் சாப்பிட்டது கிடையாது. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
hi மேனகா இறால் ஊறுகாய் super ya ........ Alagarjayakodi from chennai
என் குழந்தைகளுக்கும் கணவருக்கும் ரொம்ப பிடிக்கும் செய்து பார்த்துசொல்கிறேன். நன்றி உங்கள் பதிவுக்கு.நிலாமதி
உங்கள் வலைப்பூவிற்க்கு வந்து பார்த்து பதிவு போட்டுள்ளேன் ஷஃபிக்ஸ்!!
செய்துபார்த்து சொல்லுங்க உமா,நன்றி!!
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அழகர் ஜெயக்கொடி!!
செய்துபார்த்து சொல்லுங்கள்,தங்கள் கருத்துக்கு நன்றி நிலாமதி!!
வாழ்த்துகள் விகடனுக்கு(ம்).
பார்க்கவே நாக்கு ஊறுதுங்கோ ...
Wow looks tempting ...yummy
விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள். அதை சொல்ல தான் வந்தேன். பாருங்க.. நாம் கமெண்ட் போட்ட 2 வது நாள் விகடன்ல வந்துட்டிங்க. அதனால எதுனா ஸ்பெஷலா செஞ்சி அனுப்பி வைங்க. :)
தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஜமால்!!
நன்றி பவித்ரா!!
தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சஞ்சய் காந்தி!!என்ன ஸ்பெஷல் செய்து அனுப்பனும்னு நீங்களே சொல்லுங்கள் செய்து அனுப்புறேன்.
Again this also new to me ..wanna to try it soon ....how many days can we store this pa.....
1 வாரம்வரை வைத்திருந்து உபயோகிக்கலாம் ப்ரியா.செய்து பாருங்கள் நன்றாகயிருக்கும்.நன்றிப்பா!!
Pondicherry makkal anaivarukum terincha virumbiya oorukai eral oorukai thana, yennaku udane prepare pannalama'nu thonuthu..my favourite..
ஆமாம் நீங்கள் சொல்வதுப்போல் இது நம்மஊர் ஸ்பெஷல்.அப்புறமென்ன உடனே செய்து சாப்பிடுங்க.நன்றி ப்ரியா!!
பாத்திடுவோம்!!!! இனிமே இராலுக்கு கஷ்ட காலம் தான்!!!
அய்யோ பாவம்!! உங்ககிட்ட மாட்டிக்கபோற இறாலை நினைத்தா பாவமா இருக்கு.பாவம் விட்டுடுங்க,நன்றி ராஜ்!!
Post a Comment