Thursday, 12 November 2009 | By: Menaga sathia

ஒட்ஸ் பூரி & மசாலா

தே.பொருட்கள்:

பூரிக்கு

ஒட்ஸ் - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

உருளை மசாலா

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை :

*ஒட்ஸை வெறும் கடாயில் லேசாக வறுத்து பொடிக்கவும்.அதனுடன் கோதுமைமாவு+உப்பு+வெந்நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*சிறு உருண்டையாக எடுத்து மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் தேய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய் நீளவாக்கில் அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் உப்பு+மஞ்சள்தூள்+உருளைக்கிழங்கு சேர்த்து 1/4 கப் நீர் சேர்க்கவும்.

* ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

*சுவையான பூரி மசால் ரெடி!!

பி.கு:

பூரிக்கு மாவு பிசைந்தவுடன் அப்பவே தேய்த்து சுடனும்.தேய்க்கும் போது ரொம்ப மெல்லியதாக தேய்க்ககூடாது.அப்படித் தேய்த்தால் பூரி உப்பாது.

சப்பாத்திக்கு மாவு பிசைந்து எவ்வளவு நேரம் ஊறவைக்கிறோமோ அவ்வளவு சாப்டாக இருக்கும்.மெல்லியதாக தேய்க்கனும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

நித்தியானந்தம் said...

நல்ல படைப்பு...நன்றி

Geetha Achal said...

சூப்பர்ப் ஒட்ஸ் பூரி...நானும் இதே மாதிரி தான் ஒட்ஸ் & பார்லி (கோதுமை மாவிற்கு பதிலாக) சேர்த்து பூரி & சப்பாத்தி (அம்மாவுக்கு) போன வாரம் செய்தேன்..சூப்பராக இருந்தது...

நன்றி...

Suvaiyaana Suvai said...

looks yummy!!!

ஹர்ஷினி அம்மா said...

ஓட்ஸ்சுலே பூரியா ம்ம்ம் கலக்குறீங்கபா...அப்புறம் புரோபல் போட்டோ சூப்பர் :-)

Priya said...

Oats poori supera irruku Menaga, udane veetuku varalama'nu yosikuren:)..

பிரபாகர் said...

சகோதரி,

நேற்றிரவு பூரி தான். மசால் நான்தான் செய்தேன். மசால் நீங்கள் சொன்னமாதிரி தான் செய்தேன், ஒரு தக்காளியை கூட சேர்த்திருந்தேன். நன்றாகவே இருந்தது.

ஓட்ஸ் சேர்த்து அடுத்த முறை.

கொஞ்சம் புளித்த தயிர் சேர்த்து மாவினை பிசைந்து இரண்டு மணி நேரம் வைத்தி பின் செய்தால் பூரி ரொம்ப சாஃடாக இருக்கும்.

ரொம்ப நன்றிங்க.

பிரபாகர்.

Pavithra said...

Hey thats fantastic idea dear...should try this

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு. இந்த பூரி மொறு என்றும் சாப்டாகவும் வருமா? படம் பார்க்க நன்று. கண்டிப்பாக சமைத்துப் பார்க்கின்றேன். நன்றி.
என்ன ஓட்ஸ்ல இறங்கிட்டிங்க. எல்லாரும் டயட்டுக்கு மாறிட்டாங்க.... அப்ப நீங்க?

நன்றி மேனகா சத்தியா.

Shama Nagarajan said...

nice try..looks perfect....

sarusriraj said...

பூரி சூப்பரா இருக்கு எனக்கு பிடித்த உணவு

Mrs.Menagasathia said...

நன்றி நித்தியானந்தம்!!


நீங்க செய்த பூரி உண்மையிலே ரொம்ப சத்தானது.நன்றி கீதா!!

Mrs.Menagasathia said...

நன்றி சுஸ்ரீ!!

நன்றி ஹர்ஷினி அம்மா!!ஒட்ஸில் சப்பாத்தியை விட பூரி ரொம்ப நல்லாயிருந்தது.
//அப்புறம் புரோபல் போட்டோ சூப்பர் //மிக்க நன்றி!! இந்த போட்டோ ஒவியர் ரவிவர்மா வரைந்த படம்.நெட்ல சுட்டதுதான்..

Mrs.Menagasathia said...

இதுக்கெல்லாம் எதுக்கு யோசிக்கனும்.உடனே வாங்க சுடச்சுட செய்து தரேன்.நன்றி ப்ரியா!!

Mrs.Menagasathia said...

உடனே செய்துட்டீங்களா.மிக்க நன்றி சகோதரரே!!.தக்காளி சேர்த்து அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.புளிப்பு சுவையுடன் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்.

ஒட்ஸில் அடுத்த முறை செய்து பாருங்க.

//கொஞ்சம் புளித்த தயிர் சேர்த்து மாவினை பிசைந்து இரண்டு மணி நேரம் வைத்தி பின் செய்தால் பூரி ரொம்ப சாஃடாக இருக்கும்.//கூடுதல் டிப்ஸ்க்கு நன்றி சகோ...

Mrs.Menagasathia said...

நிச்சயம் செய்து பாருங்கள்,நன்றி பவித்ரா!!

Mrs.Menagasathia said...

இந்த பூரி நல்ல க்ரிஸ்பியாகவும் ஆறியதும் சாப்டாகவும் இருக்கும் பிரதர்.நன்றி!!
//என்ன ஓட்ஸ்ல இறங்கிட்டிங்க. எல்லாரும் டயட்டுக்கு மாறிட்டாங்க.... அப்ப நீங்க?//நானும் எப்பவோ டயட்டுக்கு மாறியாச்சுங்க..

Mrs.Menagasathia said...

நன்றி ஷாமா!!

நன்றி சாரு!!எனக்கும் ரொம்ப பிடிக்கும்.வாரத்தில் ஒருமுறையாவது செய்வேன்..

thenammailakshmanan said...

ஓட்ஸ் பூரி அன்ட் வெஜ் லேயர் பிரியாணி சுப்பர்ப் சஷிகா

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

S.A. நவாஸுதீன் said...

ஓட்ஸ் பூரி & மசாலா - நீங்க கொடுத்த செய்முறைன்னா சொல்லவேணாம். நிச்சயம் சூப்பராத்தான் இருக்கும்

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

ஓட்ஸ்ல பூரியா, நல்ல ஆரோக்கியமானதா தெரியுதே, சூப்பர்.

Mrs.Menagasathia said...

நன்றி தேனம்மை!!


நன்றி தமிழ்நெஞ்சம்!!தங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!!

Mrs.Menagasathia said...

நன்றி நவாஸ் ப்ரதர்!!


நன்றி ஷஃபி ப்ரதர்!!

01 09 10