Saturday 3 July 2010 | By: Menaga Sathia

வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ் / Veg Pastry Wheels

தே.பொருட்கள்:
பஃப் பேஸ்ட்ரி ஷீட்- 1 பெரியது
சீரகம் - 1 டீஸ்பூன்
உருக்கிய பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

வேகவைத்து மசிக்க:
பொடியாக நறுக்கிய கேரட் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 8
தோல் சீவி துண்டுகளாகிய உருளை - 1 பெரியது
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள்,சோம்புத்தூள் -தலா 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை :
*வேகவைத்து மசிக்க கொடுத்துள்ள பொருட்களுடன் உப்பு+ 1 கப் நீர் விட்டு குக்கரில் 5 விசில் வரை வேகவைத்து நன்கு மசிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகத்தை போட்டு தாளித்து மசித்த கலவையை சேர்த்து நீர் சுண்டும் வரை நன்கு கிளறி ஆறவைக்கவும்.

*பஃப் ஷீட்டை ப்ரிசலிருந்து 1/2 மணிநேரத்திற்க்கு முன் எடுத்து வெளியே வைக்கவும்.

*பஃப் ஷீட்டை மாவு தூவி சதுரமாக தேய்த்து காய்கறி கலவையை சமமாக பரப்பவும். 4 ஓரங்களிலும் சிறிது இடைவெளி விட்டு பரப்பவும்.

*பேஸ்ட்ரி ஷீட்டை ஒரு ஓரத்திலிருந்து இறுக்கமாக சுற்றி,ஷீட்டின் இறுதியில் சிறிது நீர் தடவி ஒட்டவும்.

*ரோல் செய்த பேஸ்ட்ரி ஷீட்டை க்ளியர் ராப் பேப்பரில் சுற்றி 15 நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்.

*பின் கத்தியால் விரும்பிய வடிவத்தில் வெட்டி அவன் டிரேயில் அலுமினியம் பேப்பரில் சிறிது இடைவெளிவிட்டு ரோல்ஸ்களை அடுக்கி ப்ரெஷில் பட்டரால் தடவவும்.

*200°Cமுற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.10 நிமிடத்தில் ஒரு புறம் வெந்ததும் மறுபறம் திருப்பி விடவும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ் செய்து பார்த்து, போட்டோவும் எடுத்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி மேனகா!

சந்தோஷமா இருக்கு..:)

Umm Mymoonah said...

Pastry rolls looks very good, looks so appetizing, must be a delicious treat for your family.

இமா க்றிஸ் said...

மேனகா,
பேஸ்ட்ரி வீல், வடை ரெண்டுமே மகிக்கா!! ;)
மகி, சந்தோஷத்தைக் கொண்டாட ட்ரீட் இல்லையா?

எல் கே said...

நமக்கு இதை செய்யப் பொறுமை இல்லை

sakthi said...

பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது!!!

vanathy said...

super!

Krishnaveni said...

wow...delicious pastry wheels..great

ஸாதிகா said...

பேஸ்ட்ரி பார்க்கவே சூப்பர்.

அன்புடன் மலிக்கா said...

பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது. சூப்பர் மேனகா..

ஹைஷ்126 said...

super

Menaga Sathia said...

நன்றி மகி!! செய்தவுடன் நொடியில் காலியாகிவிட்டது!!

நன்றி உம்மைமூனா!!

நன்றி இமா!! ஆமாம் 2மே மகிக்குதான்..மகிதான் நமக்கு ட்ரீட் தரணும்..

நன்றி எல்கே!! செய்வது ஈசிதாங்க...

நன்றி சக்தி!!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி மலிக்கா!!

நன்றி சகோ!!

Niloufer Riyaz said...

rolls migavum arumai

athira said...

Looks good...

Kanchana Radhakrishnan said...

பேஸ்ட்ரி பார்க்கவே சூப்பர்.

malarvizhi said...

நன்றாக உள்ளது.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா

Aruna Manikandan said...

looks delicious and very tempting :-)

Priya Suresh said...

Superb wheels, appadiye yeduthu saapidanam pola irruku..

Jayanthy Kumaran said...

nice, simple and very tasty recipe...

Menaga Sathia said...

நன்றி நிலோபர்!!

நன்றி அதிரா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி மலர்விழி!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி அருணா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஜெய்!!

GEETHA ACHAL said...

மிகவும் அருமை...

Anonymous said...

எப்டி நீங்க எல்லாம் சிம்பிலா நாலு லைன்ல எழுதறீங்க. நானும் ஒன்னு போட்டேன். தீசிஸ் மாதிரி இருக்குன்னு சிரிக்கறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

My favourite.

Menaga Sathia said...

நன்றி கீதா!!

//அனாமிகா துவாரகன் has left a new comment on your post "வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ்":

My favourite.
//அனாமிகா துவாரகன் has left a new comment on your post "வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ்":


எப்டி நீங்க எல்லாம் சிம்பிலா நாலு லைன்ல எழுதறீங்க. நானும் ஒன்னு போட்டேன். தீசிஸ் மாதிரி இருக்குன்னு சிரிக்கறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்
// ஆஹா நானும் ஆரம்பத்தில் இப்படிதான் எழுதினேன்.பிறகு போகபோக பழகிவிட்டது...நன்றி அனாமிகா!!

01 09 10