Tuesday, 6 July 2010 | By: Menaga Sathia

முருங்கைக்காய் வடை(அவன் செய்முறை) / Drumsticks Vadai

தே.பொருட்கள்:

முருங்கைக்காய் விழுது - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
பூண்டுப்பல் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 சிறுதுண்டு
காய்ந்த மிளகாய் - 2
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
* கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் சோம்பு+பூண்டுப்பல்+கிராம்பு+பட்டை+காய்ந்த மிளகாய்+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*இதனுடன் முருங்கைக்காய் விழுது+வெங்காயம்+கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து பிசையவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் போட்டு எண்ணெய் தடவி பிசைந்த மாவை வடைகளாக தட்டி டிரேயில் வைக்கவும்.

*ஒவ்வொரு வடையின் மீது 1 சொட்டு எண்ணெய் தடவவும்.

*270°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைத்து வேகவிட்டு,மறுபுறம் திருப்பி 1 சொட்டு எண்ணெய் விட்டு மீண்டும் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

Krishnaveni said...

wow...healthy vadai, looks great

GEETHA ACHAL said...

வித்தியசமாக இருக்கின்றது...சூப்பர்ப்...அதுவும் அவனில் செய்தது என்றால் டாப் டக்கர்...

Mahi said...

போட்டோ சூப்பர் மேனகா! வடை அருமையா இருக்கு. நான் அப்படியே அந்த புல் ப்ளேட்டையும் எடுத்துகிட்டேன்.ஹிஹி!

Umm Mymoonah said...

Murungakai vadai looks delicious Menaga, excellent recipe.

தெய்வசுகந்தி said...

முருங்கை விழுது சேர்ப்பது நல்லா இருக்கு!!. healthy & yummy!!!!!1

ஹைஷ்126 said...

சூப்பர் வடை :)

Ananthi said...

ஆஹா.. முருங்கைக்காய் வடையா...??
அதுவும் ஓவன்-லயா??

சூப்பருங்கோ..... பார்கவே அருமையா இருக்கு..
ரெண்டே ரெண்டு வடை மட்டும் தனியா எடுத்து வைங்க.. வரேன்.. :-))))

Chitra said...

Superb recipe! Thank you very much. :-)

ஜெய்லானி said...

முருங்கையில வடையா அப்ப திரும்பவும் மரம் ஏற வேண்டியதுதான்..

ஸாதிகா said...

நான் உளுந்து வடையில் முருங்கை இலை சேர்த்து செய்வேன்.இதனையும் டிரை பண்ணிவிடுகின்றேன்.

சசிகுமார் said...

முருங்கைக்காயில வடையா என்னென்னமோ பண்றாங்கப்பா

Shama Nagarajan said...

yummy healthy vadai...

Anonymous said...

நல்லா இருக்கு மேனகா ஜி ஆயில் கம்மியா போட்டு பண்ணிங்க ரொம்ப ஹெல்தி பூட் நன்றி

Anonymous said...

பாருடா. இங்க முருக்கங்காயை கண்ல பாக்கறதே ரொம்ப அபூர்வம். இவங்க வடை செஞ்சு போட்டு வயித்தெரிச்சல கிளப்புறாங்க. =( எனக்கு ஒரு பார்சல் அனுப்பற வரைக்கும் வெளி நடப்பு செய்யறேன். ஹி ஹி. சமைக்கப்போறேன். சிநேகிதினு ஒருத்தர் தயிர்ல செஞ்ச பச்சடி ரெசிப்பி பார்தேன். அது தான் =)

எண்ணெய்ல பொரிச்ச மாதிரியே இருக்கு. கீப்பிட் அப் அக்கா.

Mrs.Menagasathia said...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ப்ரியா!!

நன்றி கீதா!!

நன்றி மகி!!தாராளமா எடுத்துங்க...

Mrs.Menagasathia said...

நன்றி உம் மைமூனா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி சகோ!!

நன்றி ஆனந்தி!! 2 வடை என்னங்க நிறையவே எடுத்து வைக்கிறேன்.தாராளமா வாங்க...

Mrs.Menagasathia said...

நன்றி சித்ரா!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி ஸாதிகாக்கா!!

Mrs.Menagasathia said...

நன்றி சசி!!

நன்றி ஷாமா!!

நன்றி சந்தியா!!

சாருஸ்ரீராஜ் said...

மேனகா வடை சூப்பர்...

thenammailakshmanan said...

வடை சூப்பர்டா தங்கையே.. லேடீஸ் ஸ்பெஷலில் வந்த்துக்கு வாழ்த்துக்கள்.. அப்புறம்.. அந்த லிங்கையும் உன் ப்லாக்கில் போடலாம்

Mrs.Menagasathia said...

முருங்கைக்காய் கிடைக்காதா உங்களுக்கு...பார்சல் அனுப்பியாச்சுப்பா.நன்றி அனாமிகா!!


நன்றி சாரு அக்கா!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி தேனக்கா!! நானே உங்களுக்கு மெயில் அனுப்பனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.விரைவில் அந்த லிங்கோட போடுகிறேன்...

vanathy said...

arumaiya irukku. Nice photo.

சே.குமார் said...

பார்கவே அருமையா இருக்கு..!

Premalatha Aravindhan said...

Wounderfull recipe...While seeing i never thought it is murungaka vadai,really amazing...

Anonymous said...

அப்புறம் முருங்கக்காய் போடுறதுக்குப் பதிலாக அவித்த உருளைக்கிழங்கு போட்டு செய்து பாருங்க. அம்மா செய்யறது ஞாபகம் வருது.ஆனால் அவங்க பொரிச்சு செய்யறது.

முருங்கைக்காய் ரொம்ப அபூர்வமாகத் தான் கிடைக்கும்க்கா. பார்சல் DHL-ல தானே அனுப்பினீங்க. =)

01 09 10