Showing posts with label ரசம்/வடை. Show all posts
Showing posts with label ரசம்/வடை. Show all posts
Tuesday, 3 October 2017 | By: Menaga Sathia

பொரிச்ச ரசம்/ Poricha Rasam | Rasam Recipes

இந்த ரசத்தின் சிறப்பு புளியில்லாமல் தக்காளி அதிகம் சேர்த்து செய்வது.
உபவாசம் இருக்கும் நாட்களில் புளியில்லாமல் இந்த ரசம் செய்வார்கள்

தே.பொருட்கள்
தக்காளி -2 பெரியது
வேகவைத்த துவரம்பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -சிறிது
கறிவேப்பிலை -1 கொத்து
துருவிய தேங்காய் -2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/8 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

நெய்யில் வதக்க
காய்ந்த மிளகாய் -2
கடலைபருப்பு -2 டீஸ்பூன்
மிளகு -1 1/2 டீஸ்பூன்
சீரகம் -2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்

செய்முறை

*நெய்யில் வதக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் 3 கப் நீர் ஊற்றி நறுக்கிய  தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*தக்காளி வெந்ததும் அரைத்த மசாலா,உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு சேர்க்கவும்.


*மேலே நுறைத்து வரும் போது தேவையான நீர் ஊற்றி கறிவேப்பிலை+கொத்தமல்லி சேர்த்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
Monday, 28 March 2016 | By: Menaga Sathia

ரசவடை / Rasa Vadai | Nanjil Spl Recipe


ரசவடை ‍நாஞ்சில் நாட்டு சமையலில் மிக பிரபலமான ஒன்று.வடை செய்வதற்கு பட்டாணி பருப்பு தான் முக்கியம்.அது கிடைக்காத பட்சத்தில் கடலைப்பருப்பில் வடையை செய்யலாம்.

பட்டாணிபருப்பு ,இதை பற்றி முக்கியம் நான் சொல்லியே ஆகனும்,இதனை கடைகளில் பார்த்தாலும் ஏதோ தேவையில்லாத பருப்பு போல இதனை வாங்கவே மாட்டேன்.கடலைபருப்பு போல இல்லையே இது எதுக்குனு வாங்கமாட்டேன்.ஆனால் சாந்தி அக்காவின் பதிவை பார்த்ததும் அடக்கடவுளே !! இத்தனை நாளா இதனையா நாம வாங்காமல் விட்டோம்னு வருத்தம்...

ஆமாங்க,நான் தேவையில்லாத பருப்புனு எதை நினைத்தேனோ அதுதான் பட்டாணிபருப்பாம்,அப்புறமென்ன வாங்கி வந்து ரசவடையும் செய்து சாப்டாச்சு.கடலைபருப்பை விட பட்டாணிபருப்பின் விலை இங்க குறைவு தான்.வடையின் சுவையிலும் வித்தியாசம் தெரிகிறது.இனி கடலைபருப்புக்கு பைபை சொல்லவேண்டியது தான்.பட்டாணி பருப்பினை ஆங்கிலத்தில் Yellow Split Peas ,ப்ரெஞ்சில் POIS CASSES JAUNEஅழைக்கபடுகிறது.

இப்போ குறிப்புக்கு வருவோம்,ரசவடை செய்வதற்கு வடையை உருண்டையாகதான் போடுவாங்க.உளுந்து வடையில் செய்த ரசவடைலாம் ரசவடையே இல்லைன்னு நாஞ்சில் நாடு சாந்திஅக்கா சொல்லிட்டாங்க.அதனால் ரசவடை செய்தால் பருப்பு வடையினையே சேர்க்கவும்.அவங்க ரசவடை குறிப்பினை அவ்வளவு சுவையோடு எழுதியிருந்ததை படித்ததும் ஆர்வமாகி செய்தாச்சு.

அதேபோல் ரச செய்முறையும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.

Recipe Source : Here 

வடை செய்ய‌

பட்டாணி பருப்பு- 1 கப்
காய்ந்த மிளகாய்- 6
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு + எண்ணெய் -தேவைக்கு

செய்முறை 
*பருப்பினை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடித்தபின் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

*சாதரணமாக வடைக்கு அரைப்பதுபோல் கொரகொரப்பாக அரைக்காமல் ரவை பதத்தில் அரைத்தெடுக்கவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மேற்கூறிய பொருட்களை கலந்து சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

ரசம் செய்ய‌

இந்த ரசம் மசாலா செய்வதற்கு,அரைதெடுத்த மொத்த மசாலாவும் நெல்லிக்காயளவு மட்டுமே இருக்க வேண்டும்.

தே.பொருட்கள்
தக்காளி ‍- 2
புளிகரைசல்- 2 கப்
நீர்- 1 கப்
உப்பு- தேவைக்கு
பெருங்காயப்பொடி- 1/4 டீஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
எண்ணெய்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
நறுக்கிய கொத்தமல்லி -தேவைக்கு

மசாலா செய்ய‌
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
தனியா- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பூண்டுப்பல்- 10


செய்முறை
*மிளகு+சீரகம்+தனியா+காய்ந்த மிளகாய்+மஞ்சள்தூள் இவற்றை சற்றே கரகரப்பாக பொடித்த பின் கறிவேப்பிலை மற்றும் பூண்டினை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்ததும் அரைத்த மசாலா மற்றும் பெரிய துண்டுகாளாகிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

*தக்காளியின் மேல்தோல் மட்டும் சற்று பிரிந்தாற்போல் வந்ததும் புளிகரைசல்+உப்பு+நீர் சேர்க்கவும்.

*ரசம் நுரைத்து வரும் போது பெருங்காப்பொடி+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

ரசவடை செய்ய‌

*ரசத்தினை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் ஆறிய வடைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

*பின் அப்படியே 2மணிநேரம் ஊறவைத்தால் வடைகள் 2மடங்காக உப்பியிருக்கும்.

*லேசாக சூடுபடுத்தி ரசவடையினை சூடாக பரிமாறவும்.
Thursday, 5 March 2015 | By: Menaga Sathia

உடுப்பி ரசம்/ UDUPI RASAM | RASAM IN UDUPI STYLE

print this page PRINT IT
உடுப்பி ரசம் சுவையே அபராமாக இருக்கும்,3 முறை செய்த பிறகே இந்த ரசத்தின் சுவை கிடைத்தது.இவர்கள் சமையலில் காஷ்மீர் மிளகாயும்,தேங்காய் எண்ணெயும்  பயன்படுத்துவார்கள்.நான் சாதரண மிளகாய் மற்றும் எண்ணெய் பயன்படுத்தியிருக்கேன்.

தே.பொருட்கள்
தக்காளி -2
துவரம்பருப்பு -1/3 கப்
புளி -சிறிய எலுமிச்சை பழளவு
வெல்லம்- 1 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை -1 கைப்பிடியளவு
கறிவேப்பிலை- 1 கொத்து
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
உடுப்பி ரசப்பொடி- 2 டேபிள்ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய்- 2
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 கொத்து

உடுப்பி ரசப்பொடி செய்ய‌

காய்ந்த மிளகாய்- 2
தனியா- 2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல்- 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
வெந்தயம்- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்

செய்முறை

*துவரம்பருப்பை நன்கு குழைய வேகவைக்கவும்.

*ரசப்பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை தனிதனியாக எண்ணெயில் வறுத்து பொடிக்கவும்.

*புளியை 2 கப் அளவில் கரைத்து மஞ்சள்தூள்+பச்சை மிளகாய்+பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி+ 1 டேபிள்ஸ்பூன் ரசப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும் .(ரசப்பொடி சேர்த்து கொதிக்கும் போது வீடே கமகமக்கும்).

*தக்காளி நன்கு குழைய வெந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு+தேவைக்கு நீர் +உப்பு+மீதமுள்ள ரசப்பொடி சேர்க்கவும்.


*1 கொதி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
Tuesday, 2 December 2014 | By: Menaga Sathia

கண்டத்திப்பிலி ரசம் /Kandathippilli Rasam | Rasam Recipes


print this page PRINT IT

இந்த மாதம் Friendship 5 Series ல் நாம் பார்க்க போவது கிராமத்து சமையல்

*கண்டத்திப்பிலி இது  மிளகு குடும்பத்தை சேர்ந்தது.

* சளி,இருமலுக்கு இந்த திப்பிலி ரசம் மிக நல்லது.

*உடல்வலி மற்றும் சோர்வு நீங்கவும் கண்டத்திப்பிலி மிக நல்லது.

தே.பொருட்கள்

புளிகரைசல் -2 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
பெருங்காயதூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

எண்ணெயில் வறுத்து பொடிக்க

 எண்ணெய் -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
கண்டத்திப்பிலி - 4 குச்சிகள்
துவரம் பருப்பு -1 டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் - 3/4 டீஸ்பூன்


செய்முறை

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.
*புளிகரைசலில் உப்பு+மஞ்சள்தூள்+பொடித்த பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் நெய்யில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

Tuesday, 3 June 2014 | By: Menaga Sathia

தயிர் வடை -2 | Curd / Thayir Vada -2 | Kids Fast Food Series # 2

தே.பொருட்கள்

வடை செய்ய

முழு வெள்ளை உளுந்து - 1 கப்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய்- தேவைக்கு

*உளுந்து+அரிசி இவற்றை 3/4 மணிநேரம் ஊறவைத்து நன்கு வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்.

*பின் உப்பு சேர்த்து வடைகளாக சுட்டெடுக்கவும்.

தயிர் வடை செய்ய

தயிர் -1 கப்
காய்ச்சிய பால் -3/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
துருவிய கேரட் -1/4 கப்
சீரகத்தூள் -1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*வடை  சூடாக இருக்கும் போதே பாலில் ஊறவைத்து எடுக்கவும்.

*தயிரை உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
*பரிமாறும் போது  பாலில் ஊறவைத்த வடையை எடுத்து கிண்ணத்தில் வைத்து அதன்மீது தயிரை ஊற்றவும்.

*பின் அதன் மீது கொத்தமல்லித்தழை+கேரட் துறுவல்+சீரகத்தூள்+மிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.

Thursday, 15 May 2014 | By: Menaga Sathia

செட்டிநாடு கோழி ரசம் /Chettinad Kozhi Rasam | Chettinad Recipes


இந்த ரசம் சளி மற்றும் காய்ச்சல் வரும் போது குடித்தால் உடனே சரியாகிவிடும்.

தே.பொருட்கள் 

சிக்கன் எலும்பு துண்டு -100 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் -6
நறுக்கிய தக்காளி -1 பெரியது
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1டீஸ்பூன்

ரசப்பொடிக்கு

மிளகு+சீரகம் - தலா 1 டீஸ்பூன்
தனியாத்தூள் -1/2 டீஸ்பூன்
சோம்பு -1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -3
பூண்டுப்பல் -3

தாளிக்க
எண்ணெய் -1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
*குக்கரில் மேற்கூறிய பொருட்களை சேர்த்து 4 கப் நீர்  வைத்து  சிறிது உப்பு சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.

*ரசப்பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக பொடிக்கவும்.
*குக்கர் ப்ரெஷர் அடங்கியதும்  எலும்புதுண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
*வேறொரு பாத்திரத்தில் தாலிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வடிகட்டிய  நீரினை சேர்க்கவும்.
*ரசப்பொடி மற்றும் தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
*சூப்பாகவோ குடிக்கலாம்அல்லது சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

பி.கு

*வேகவைத்த எலும்பு துண்டுகளை வறுத்து சாப்பிடலாம்,அல்லது குழம்பில் கடைசியாக சேர்க்கலாம்.
Wednesday, 11 December 2013 | By: Menaga Sathia

ராஜஸ்தான் தாளி /Rajastani Thali For IF Challenge # 4


International Food Challenge   - இந்த ஈவெண்டினை சரஸ்வதி மற்றும் ஷோபனா இருவரும் சேர்ந்து நடத்துறாங்க.இதில் அனைத்து வகையான உணவுகளை செய்து ரசித்து ருசிக்கலாம்.மேலும் இதனைப் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.

இந்த மாதம் மஞ்சுளா அவர்கள் ராஜஸ்தானிய மெனுவை நம்மிடையே பகிர்ந்துட்டாங்க.அதில் நான் தாளி மெனுவை தேர்ந்தெடுத்து செய்துள்ளேன்.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி மஞ்சுளா!!


தக்காளி சாலட் / Tomato Salad

தே.பொருட்கள்

தக்காளி -2
சாட் மசாலா + வரமிளகாய்த்தூள்  - தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை
* தக்காளியை வட்டமாக நறுக்கி சாட் மசாலா மற்றும் வரமிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.விரும்பினால் உப்பு சேர்க்கலாம்.



பாசிப்பருப்பு வடை /Moongdal Vada

தே. பொருட்கள்
பாசிப்பருப்பு -1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
சோம்பு - 3/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை  மிளகாய் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
கறிவேப்பிலை -சிறிது
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை

*பாசிப்பருப்பை 1/2  மணிநேரம் ஊறவைத்து நீறை வடித்து உப்பு+சோம்பு சேர்த்து அரைக்கவும்.

*அதனுடன் வெங்காயம்+பெருங்காயத்தூள்+கறிவேப்பிலை கொத்தமல்லி+பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ஒரிஜினல் ரெசிபியில் சீரகம் +இஞ்சி  சேர்த்திருப்பாங்க அதற்கு பதில்  சோம்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துருக்கேன்.

மிஸ்ஸி ரொட்டி /Missi Roti

தே.பொருட்கள்

கோதுமைமாவு - 1 கப்
கடலைமாவு - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி -1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நெய் -சுடுவதற்கு

செய்முறை

*பாத்திரத்தில் நெய் தவிர மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து  நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.

*பின் சிறு உருண்டையாக எடுத்து தேய்த்து தவாவில் நெய் தடவி 2 பக்கமும் சுட்டு எடுக்கவும்.

பப்பட் சப்ஜி /Papad Ki Sabzi

தே.பொருட்கள்

பப்பட் -1 பெரியது
வரமிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
நீர் -1/4 கப்
செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+கரிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*பின் தூள் வகைகள் சேர்த்து வதக்கி 1/4 கப் நீர்  சேர்த்து கொதிக்கவிடவும்.கொதித்ததும் பப்பட்டை உடைத்து சேர்த்து 2-3 நிமிடங்களில் இறக்கவும்.

கறுப்புக் கடலை மோர்க்குழம்பு /Kale Channa Ki Kadhi

தே.பொருட்கள்
கறுப்புக்கடலை -1/4 கப்
தயிர் -1/2 கப்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு -தேவைக்கு

தாளிக்க

கடுகு -1/4 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் + வரமிளகாய்த்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -2
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை
*கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்தெடுக்கவும்.

*மிக்ஸியில் தயிர்+உப்பு+மஞ்சள்தூள்+கடலை மாவு சேர்த்து நன்கு அடிக்கவும்.

*பாத்திரத்தில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வேகவைத்த கடலை+ தயிர் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.

*இடையிடையே கலக்கி 5-10 நிமிடங்கள் கொதிக்கவைத்து கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.


கோதுமைமாவு அல்வா / Atte Ke Sheera

தே.பொருட்கள்

கோதுமைமாவு +நெய்  = தலா 1/4 கப்
கொதிக்க வைத்த நீர் -1 கப்
வெல்லத்துறுவல் -1/8 கப்

செய்முறை

* கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கடலைமாவு வறுக்கவும்.தேவையெனில் மேலும் நெய் சேர்த்து வறுக்கவும்.

*வருபட்டதும் கொதிநீரை கொஞ்சமாக ஊற்றி இடைவிடாமல் கிளறவும்.

*பின் வெல்லத்துறுவல் சேர்த்து கரைந்ததும் மீதமுள்ள நெய்யை ஊற்றி ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.

*விரும்பினால் முந்திரியை வறுத்து சேர்க்கலாம்.
Thursday, 5 December 2013 | By: Menaga Sathia

ஆஞ்சநேயர் வடை - மிளகு வடை/Anjaneyar Vadai(Milagu Vadai)



தே.பொருட்கள்

வெள்ளை முழு உளுந்து - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*உளுந்தை 1/2 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.

*தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து உப்பு+பொடித்த மிளகு +சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து பிசையவும்.

*ஒரு பிளாஸ்டிக்  கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டையை எடுத்து மெலிதாக தட்டி நடுவில் ஒட்டை போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

This is off to Priya's Vegan Thursday  & Gayathri's WTML Event
Thursday, 14 November 2013 | By: Menaga Sathia

ஆந்திரா வெஜ் தாளி /Andhra Veg Thali




Recipe Source : Here


ஆந்திரா வெஜ் மெனுவில்  சாதம், சாம்பார்,ரசம்,கோவைக்காய் வறுவல்,வெண்டைககய் பொரியல் என செய்துள்ளேன்.

ஆந்திரா சாம்பார் / Andhra Sambhar


தே.பொருட்கள்

து.பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி - 1
புளிகரைசல் -1/2 கப்
முருங்கைக்காய் -1
கேரட் -2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வதக்கி அரைக்க

கசகசா - 1 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய் -1

செய்முறை

*குக்கரில் துவரம்பருப்பை  மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.வெந்ததும் நறுக்கிய காய்கள் சேர்த்து  2 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது+வெங்காயம்+தக்காளி +உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி  அரைத்த விழுது+சாம்பார் பொடி+புளிகரைசல் சேர்த்து  கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் வேகவைத்த காய் பருப்பு கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து  கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

ஒமம் தக்காளி  ரசம் / Carom Flavoured Tomato Rasam / Tomato Vammu Charu


இதில் ஒமம் சேர்த்து தாளிப்பது தான் செம ருசி,மறக்காமல் சேர்த்து செய்யவும்.

தே.பொருட்கள்

தக்காளி -2
புளி -சிறிய எலுமிச்சை பழளவு
வேகவைத்த துவரம்பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
ரசப்பொடி -2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
ஓமம் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஓமம் -1/4 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் -1

செய்முறை

*புளியை 1 கப் நீரில் கரைத்து  வடிகட்டவும்.அதில் அரைத்த தக்காளி+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது 1/4 டீஸ்பூன் ஒமத்தை கையால் நுணுக்கி போடவும் மற்றும் ரசப்பொடி+மஞ்சள்தூள் +கறிவேப்பிலை சேர்த்து  மேலும் கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு+1/4 கப் நீர்+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி தாளித்து சேர்க்கவும்.


கோவைக்காய் வறுவல்/ Ivy Gourd Fry  | Dondakaya Kobbarikaram Vepudu (Fried Ivy Gourd With Coconut Spice Mix)


இந்த  வறுவல் வித்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது...

தே.பொருட்கள்

கோவைக்காய் - 1/4 கிலோ
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு+எண்ணெய் =  தேவைக்கு

பொடிக்க

முந்திரி -2 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -1
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்

செய்முறை 

*கோவைக்காயை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். நான் எண்ணெயில் பொரிக்காமல் நான் ஸ்டிக் கடாயில் 15 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்து செய்துள்ளேன்.

*பொடிக்க கொடுத்துள்ளவைகளில் உப்பு சேர்த்து  நைசாக பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து  பொடித்த பொடி+பொரித்த கோவைக்காய்+தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

வெண்டைக்காய் பொரியல் | Bendakaya Vepudu | Okra Poriayl



Recipe Source : Here

தே.பொருட்கள்

வெண்டைக்காய் -1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது -1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த வேர்க்கடலை -1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு -1/2 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் -1
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*வெண்டைக்காயை கழுவி துடைத்து  சிறுதுண்டுகளாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது+வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் மிளகாய்த்தூள் + வெண்டைக்காய் +உப்பு சேர்த்து வதக்கவும்.இடையே வெண்டைக்காயின் கொழகொழப்பு போக 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.

*வெந்ததும்  தேங்காய்த்துறுவல்+வேர்க்கடலை பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
01 09 10