Wednesday, 9 March 2011 | By: Menaga sathia

மன்னார்குடி கொஸ்து/ Mannargudi Kostu

புவனேஸ்வரி அவர்களின் குறிப்பை பார்த்து கத்திரிக்காய்+உருளையுடன் சேர்த்து செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.நன்றி புவனேஸ்வரி!!. எங்கம்மா உருளை சேர்க்காமல் கத்திரியுடன் வெங்காயம்,தக்காளி சிலபொருட்கள் சேர்த்து ஒன்றாக வேகவைத்து கடைந்து இட்லிமாவு சேர்த்து கொதிக்க வைத்து,கடைசியாக தாளிப்பாங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த கத்திரிக்காய் கடைசல்.இந்த குறிப்பும் வித்தியாசமா நன்றாகயிருந்தது.

தே.பொருட்கள்:
கத்திரிக்காய் - 1 பெரியது
உருளைக்கிழங்கு - 1 சிறியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியது
பொடியாக அரிந்த தக்காளி - 4 புளிப்பிற்கேற்ப சேர்க்கவும்
கீறிய பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 3/4 டேபிள்ஸ்பூன்
இட்லி மாவு - 1 கரண்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:
*கத்திரிக்காயை பொடியாகவும்,உருளையை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி +கீறிய பச்சை மிளகாய்+காய்கள் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பின் தேவையானளவு நீர்+உப்பு+மஞ்சள்தூள்+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*காய்கள் வெந்ததும் கரண்டியால் மசித்துவிட்டு இட்லிமாவு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.

*சூடான இட்லி தோசையுடன் இந்த கொஸ்துவை சாப்பிட செம ஜோர்!!

52 பேர் ருசி பார்த்தவர்கள்:

வால்பையன் said...

இதுக்கு துவரம் பருப்பு வராதா?

கக்கு - மாணிக்கம் said...

// இட்லி தோசையுடன் இந்த கொஸ்துவை சாப்பிட செம ஜோர் //

எங்க வயிது எரிச்சல ஏன்தான் நீங்க எல்லாரும் கொட்டி கொள்கிறீர்களோ !
ஜெய்லானி மாப்ஸ் கிட்டத்தான் கேக்கணும் .

S.Menaga said...

தேவையில்லை வால்,அது இல்லாமலே நல்லாயிருக்கும்,அவசரத்திற்க்கும் உடனே செய்துவிடலாம்...

கக்கு - மாணிக்கம் said...

//இதுக்கு துவரம் பருப்பு வராதா?//
---------------வால் பைய்யன் .

யோவ்..
ஹோட்டல் ஒனறு கேக்கற கேள்வியா இது?
துவரம்பரு வேண்டாம். பயத்தம்பருப்பு தான் வெல கொறைவு. அத போடலாம் . இல்ல அம்மணி? :)))

வால்பையன் said...

நாம் கோவையில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்திருப்பது தங்களுக்கு தெரியும் என்று நினைக்கீறேன், நமது உணவகத்தில் உங்களது ரெசிப்பிக்கள் அனைத்தும் செயல்முறை படுத்தி பார்க்க படுகின்றன!

தங்களுக்கு பெஸ்டாக தோன்றும் ரெசிப்பிக்களை ரெக்கமண்ட் செய்யவும்!

GEETHA ACHAL said...

இட்லிமாவு சேர்த்து செய்வது புதுசு...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...

GEETHA ACHAL said...

கத்திரிக்காய் - 1 பெரியது..பெரிய கத்திரிக்காயா அல்ல...நம்மூர் கத்திரிக்காயா...

கத்திரிக்காய் , உருளை அளவினை கிராமில் கொடுங்களே...

S.Menaga said...

நன்றி சகோ!! ஜெய்க்கு சந்தேகம் மட்டும் தான் கேட்கதான் தெரியும்...இந்த கொஸ்துக்கு பாசிபருப்புகூட தேவையில்லை...

S.Menaga said...

முதலில் ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பித்தற்க்கு வாழ்த்துக்கள்!! உங்கள் கமெண்ட் படித்த பின்தான் தெரிந்தது..என்குறிப்பை செயல்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி...என் குறிப்பில் எல்லாமே பிடிக்கும்,குறிப்பாக எல்லா சட்னி,சாம்பார்,டிபன் ரெசிபிகள் பிடிக்கும்....

செயல்படித்திய பின் எனக்கு தெரிவிக்கவும்,மறந்துடாதீங்க வால்...

savitha ramesh said...

romba nalla irukku.try panren pa.thanks for sharing.

S.Menaga said...

நன்றி கீதா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...கத்திரிக்காய் நான் பெரியதுதான் உபயோகபடுத்தியுள்ளேன்.100 கிராம் கத்திரிக்காய்+1 உருளை பெரியது பயன்படுத்தலாம்..

கக்கு - மாணிக்கம் said...

வால், மெனுகார்டில் ரெசிபிகளின் கீழே நம்ம அம்மணிகளின் பெயரை போடவும். இது கிண்டல் இல்லை.
உண்மையாகவே. It may gives a rare look and good opinion. Is that right waal?

asiya omar said...

இது சாம்பார் பொடி சேர்த்து வித்தியாசமாக உள்ளது.அருமை.

Priya said...

//சூடான இட்லி தோசையுடன் இந்த கொஸ்துவை சாப்பிட செம ஜோர்!!//... ம்ம் ப‌டிக்கும் போதே ஆசையா இருக்கு, க‌ண்டிப்பா செய்து பார்க்க‌ணும்!

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி

Jay said...

interesting recipe..sounds tasty.
Tasty appetite

Umm Mymoonah said...

Looks very yummy, it would be very nice with idli's

Priya said...

Kostu pakkura pothye pasikuthu Menaga, inviting..

தெய்வசுகந்தி said...

நானும் இட்லி மாவு சேர்த்து செய்ததில்லை. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

Chitra said...

That is a new recipe for me. Thank you.

Shanavi said...

Good for idlis, apt for pongal..Asathunga

ஸாதிகா said...

மன்னார்குடி கொத்ஸு..பெயரே சூப்பரா இருக்கு மேனகா.

ஹுஸைனம்மா said...

ரொம்ப ஈஸியா இருக்கே. சே, இவ்வளவு நாளா தெரியாமப் போச்சே!!

//என்குறிப்பை செயல்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி...//

இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே மேனகா? காப்பிரைட், ராயல்டி, இந்த மாதிரி எதுனா தெரியுமா? (அதுக்கு என்ன ரெஸிப்பின்னு கேட்டுடாதீங்க :-)))))))) )

சே.குமார் said...

இட்லிமாவு சேர்த்து செய்வது புதுசு.

மகி said...

புது ரெசிப்பியா இருக்கு மேனகா! இட்லி மாவை சேர்த்து கொஸ்துவா? (கொஸ்துன்ற பேரே எனக்கு கொஞ்சம் புதுசுதான். :) )

வால்பையன்,கோவைல எங்கே இருக்கு உங்க ரெஸ்டாரன்ட்?

சசிகுமார் said...

எப்பவும் போல அருமை

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நாங்க இதை கத்திரிக்காய் கோசமல்லின்னு செய்வோம் மேனகா., ஆனா வேகவைத்து மசித்து செய்வோம்.

Gayathri Kumar said...

Idli Maavu serthu seivadhu migavum vithyasamai irukku..

சாருஸ்ரீராஜ் said...

மேனகா நான் கொஸ்து பாசிபருப்பு சேர்த்து இதே முறையில் செய்வேன்,சில சமயம் இட்லி சாம்பார் தண்ணியா போய்டா ,இட்லி மாவு கரைத்து ஊத்துவேன்,நல்லா இருக்கு இன்னைக்கு டின்னருக்கு இந்த கொஸ்து தான்.

Premalatha Aravindhan said...

Have to try it out immediately,the name itself tempting me...

வால்பையன் said...

//வால்பையன்,கோவைல எங்கே இருக்கு உங்க ரெஸ்டாரன்ட்? //


ஆர் எஸ் புரத்தில்

எனது நம்பர் 9994500540

வடகோவை வந்து கால் பண்ணுங்க தல!

S.Menaga said...

நன்றி சவீதா!!செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி அக்பர்!!

S.Menaga said...

நன்றி ஜெய்!!

நன்றி ஆயிஷா!!

நன்றி ப்ரியா!!

நன்றி தெய்வசுகந்தி!! அரிசிமாவுக்கு பதில் இட்லிமாவு சேர்ப்பாங்க,திக்காக இருக்கும்...

S.Menaga said...

நன்றி சித்ரா!!

நன்றி ஷானவி!!

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி ஹூசைனம்மா!! வால் ஹூசைனம்மா கமெண்ட் படித்தீங்களா??

S.Menaga said...

நன்றி சகோ!!

நன்றி மகி!!

நன்றி சசி!!

நன்றி தேனக்கா!!

S.Menaga said...

நன்றி காயத்ரி!!

நன்றி சாரு அக்கா!! டின்னருக்கு செய்து பார்த்தீங்களா??

நன்றி பிரேமலதா!!

வால் அவங்க தல இல்லை தலைவி...

Kanchana Radhakrishnan said...

இட்லிமாவு சேர்த்து செய்வது புதுசு...
பகிர்வுக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

மெலீசான ஊத்தாப்பத்திற்கு சிவப்பு சட்னி அல்லது இந்த கொஸ்த்

ஆஹா என்னா காம்பினேஷன்

S.Menaga said...

நன்றி காஞ்சனா!!

நன்றி சகோ!!

Mahi said...

தகவலுக்கு நன்றிங்க வால்பையன்! நிச்சயம் உங்க ரெஸ்டாரன்ட்டுக்கு வருவேன்.:)

narayanan said...

கத்திரிக்காய் கொத்சுக்கும் இதுக்கும் என்ன வித்யாசம்?

S.Menaga said...

நாராயணன்,கத்திரிக்காய் கொத்சில் கத்திரிக்காய் மட்டும் சேர்ப்பாங்க..இந்த மன்னார்குடி கொத்சில் உருளை மட்டும் சேர்ப்பாங்க்,விரும்பினால் இதில் கத்திரிக்காய் சேர்த்து செய்யலாம்..

reena said...

நாங்களும் பாசிப்பருப்பு/துவரம்பருப்புடன் கத்திரிக்காய் சேர்த்து செய்வோம்.
போன வாரம் உங்கள் குறிப்பை முயற்சித்தேன். மிக அருமையாக வந்தது. என்ன உருளையும், கத்திரியும் மசிக்கையில், கீறி போட்ட பச்ச மிளகாய்களும் மசிந்து விட்டதில், காரம் சற்று அதிகரித்து விட்டது. ஆனால் சுவை நன்றாக இருந்தது...

angelin said...

இன்னிக்கு கொத்சு செய்தேன் மேனகா
.ரொம்ப tasty ஆக வந்தது.

S.Menaga said...

செய்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ரீனா!!எப்படி இருக்கீங்க??அடுத்த முறை பச்சை மிளகாய் குறைத்து,காரத்துக்கு சாம்பார் பொடியை கூடுதலாக போட்டு செய்து பாருங்க...

நீங்களும் செய்து பார்த்தீங்களா,ரொம்ப சந்தோஷமா இருக்கு,கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்!!

reena said...

நன்றி மேனகா... நான் நலம். நீங்களும் ஷிவானியும் நலமா?? சரி அடுத்த முறை ப.மிளகாய் குறைத்துக் கொள்கிறேன். நான் காய்கள் மைய மசிந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். பின்பு உங்கள் படத்தை பார்த்ததும் தான் புரிந்தது அத்தனை மசிய வேண்டியதில்லை என்று... அவ்வப்போது சமையல் சந்தேகங்கள் கேட்கலாமா உங்களிடம்?

S.Menaga said...

நாங்கள் 2வரும் நலம் ரீனா...திருமணவாழ்க்கை எப்படி போகுது...அடுத்தமுறை செய்யும் போது இதைவிட இன்னும் நன்றாக செய்வீங்க...தாராளமாக சந்தேகம் கேட்கலாம்,எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்..தங்கள் பதிலுக்கு ரொம்ப சந்தோஷம் ரீனா...

reena said...

வாவ்! உங்களுக்கு என் திருமணம் பற்றியும் தெரியுமா மேனகா? மகிழ்ச்சி... மணவாழ்க்கை மிக இனிமையாக செல்கிறது. எப்போதும் இதே இனிமையுடன் இருக்க வேண்டும் என்பதைதவிர வேறு கவலைகள் இல்லை... நீங்கள் தற்போது தமிழ்நாட்டில் இருக்கிறீர்களா அல்லது வெளிமாநிலமா/வெளிநாடா??

reena said...

ஒரு சந்தேகம்:

வேர்க்கடலை சட்னிக்கு கடலையின் தோலை உரிக்க வேண்டுமில்லையா? அத்ற்கு எளிய முறை ஏதும் உள்ளதா?
நான் இப்போது வரை ஒன்றொன்றாக உரிப்பேன். நேரம் அதிகமாக எடுக்கிறது. வறுத்தாலும் அத்தனை எளிதில் தோல் வறுவதில்லை

S.Menaga said...

ரீனா,மகிழ்ச்சி,மணவாழ்க்கை என்றும் இதே போல் இருக்க வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும்..அப்புறம் நான் தமிழ்நாடு இல்லைங்க உங்க ஊறுக்கு பக்கத்து ஊரு,குட்டி மாநிலம் எதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்.தற்போது பிரான்சில் இருக்கேன்..

அடடா,வேர்க்கடலையை லேசாக வறுத்தவுடன் சூட்டோடு முறத்தில் போட்டு கையால் தேயுங்கள்,எளிதில் தோல் வந்துவிடும்.ஆறிய பிறகு தேய்தால் தோல் எளிதில் வராது.தோலோடு அரைத்தாலும் சுவையில் மாற்றம் இருக்காது.

reena said...

ஓ சரி, வேர்க்கடலை குறிப்புக்கு நன்றி. ஃபேஸ்புக்ல இருக்கீங்களா?


கேரளா... கரெக்ட்டா??

S.Menaga said...

ரீனா,நான் தமிழச்சி தாங்க..கேரளா இல்லை..குட்டி மாநிலம்,உங்க ஊருக்கு பக்கத்துல தான்...பேஸ்புக்கில் இருக்கேன் பா..

01 09 10