Friday 11 March 2011 | By: Menaga Sathia

கறிவேப்பிலை குழம்பு /Curry leaves Kuzhampu


வெளியூருக்கு வந்து இருக்குற நாலுமுடியும் கொட்டியதால் கறிவேப்பிலையின் அருமை இப்பதான் தெரியுது.இப்பலாம் அதை சாப்பாட்டில் தூக்கி போடுவதேயில்லை...
தே.பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய பூண்டுப்பல் - 5
புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து அரைக்க:மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 கொத்து
 
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகத்தை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+சாம்பார்பொடி+உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.கொதித்த பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

துளசி கோபால் said...

குழம்பைவிட பொடிக்குத்தான் என் ஓட்டு!

எல் கே said...

பிடித்த ஒன்று

Prema said...

yummy kuzhambu,nice version...My mom used to prepare this,luks delicious.

தெய்வசுகந்தி said...

கறிவேப்பிலை குழம்பு சூப்பர்!!!

Padhu Sankar said...

I am hungry .Want it have it with hot rice and roasted potatoes

சண்முககுமார் said...

வணக்கம் தங்கள் படைப்புகள இந்த தளத்தில் இணைக்கவும்
தமிழ் திரட்டி

Chitra said...

Healthy recipe.

Unknown said...

perfect color!looks very appetizing!!!

Asiya Omar said...

அருமை மேனகா,கருவேப்பிலை நான்கு கொத்து என்றால் என்ன அளவு?சுமார் அரை கப் இருக்குமா?

Priya Suresh said...

Sutta appalamkuda intha kuzhamba saapita, woww mouthwatering here..

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கு மேனகா...அருமையான குழம்பு...அப்படியே இங்கே பார்சல் செய்து அனுப்புங்க...

ஸாதிகா said...

கமகக்கும் கறிவேப்பிலைக்குழம்பு சூப்பர்ப்

Thenammai Lakshmanan said...

நான் எழுதி இருக்கும் கருவேப்பிலைக் குழம்பில் கருவேப்பிலை இன்னும் சேர்க்கலாம் டா மேனகா..:)

Mahi said...

/அதை சாப்பாட்டில் தூக்கி போடுவதேயில்லை.../ உண்மைதான் மேனகா! ஊர்ல எல்லாம் கறிவேப்பிலைய ஒதுக்கிவச்சது அந்தக்காலம்.இப்பலாம் கறிவேப்பிலைக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறேன்!:)
குழம்பு நல்லா இருக்க

/வெளியூருக்கு வந்து இருக்குற நாலுமுடியும் கொட்டியதால்/நாலே முடிதான் இருந்துதா? அப்ப இப்ப எப்படி இருக்கீங்க?! ;) ;)

Aruna Manikandan said...

sounds interesting and new to me...
looks healthy and delicious dear :)

Menaga Sathia said...

நன்றி துளசி அக்கா!!

நன்றி எல்கே!!

நன்றி பிரேமலதா!!

நன்றி தெய்வசுகந்தி!!

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி சண்முககுமார்!!

நன்றி சித்ரா!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!4 கொத்து என்பது 1/4 கப்பிற்க்கு கொஞ்சம் கூடுதலா இருக்கும்.

நன்றி ப்ரியா!!

நன்றி கீதா!! பார்சல்தானே அனுப்பிடுறேன்..

நன்றி ஸாதிகாக்கா!!

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!! நிறைய போட்டு ஒரு முறை செய்ததில் என் பொண்ணு குழம்பு பச்சை கலரில் இருக்குன்னு சாப்பிடவேயில்லை,அதான் இண்டஹ் முறை குறைத்து போட்டேன்..

நன்றி மகி!!///வெளியூருக்கு வந்து இருக்குற நாலுமுடியும் கொட்டியதால்/நாலே முடிதான் இருந்துதா? அப்ப இப்ப எப்படி இருக்கீங்க?! ;) ;)
// ஆஹா ஒரு பேச்சுக்கு அப்படி எழுதினால்,இப்படியா அடக்கொடுமையே..ஹி.ஹி..

நன்றி அருணா!!

vanathy said...

சூப்பர் குழம்பு!

'பரிவை' சே.குமார் said...

கறிவேப்பிலை குழம்பு சூப்பர்.

Anonymous said...

கறிவேப்பிலையின் அருமை பெருமை எல்லாம் எனக்கும் இப்போதுதான் புரியுது..

உங்க செய்முறை அருமை.

01 09 10