Thursday 31 May 2012 | By: Menaga Sathia

கம்மங்கூழ் /Pearl Millet(Bajra) Koozh

 தே.பொருட்கள்


கம்பு - 1 கப்
தண்ணீர் -3 கப்


செய்முறை
*கம்பை சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி 10 நிமிடம் வைக்கவும்.


*பின் மிக்ஸியில் பல்ஸ் மோடில் 5 நிமிடம் போட்டு எடுத்தால் கம்பு ஒன்றும் பாதியுமாக இருக்கும் மேலிருக்கும் உமியும் வந்துவிடும்.


*உமி நீங்க கழுவி குக்கரில் 3 கப் நீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
*வெந்ததும் அதனை சாதம் போல காரசாரமான குழம்பு ஊற்றி சாப்பிடலாம்,நன்றாக இருக்கும்.

அல்லது கூழ் செய்து சாப்பிடவேண்டுமெனில்

*உருண்டைகளாக பிடித்து தண்ணீரில் போடவும்.தேவைக்கு ஏற்ப கூழ் கரைத்து குடிக்கலாம்.ஒவ்வொரு உருண்டையாக தினம் பயன்படுத்தும் போது நீரினை மாற்றவேண்டும்.

கூழ் செய்ய

மோர்- 1 கப்
கம்புசோறு  - 2 உருண்டைகள்
சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிது
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1

*பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லித்தழை பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.இதனுடன் உப்பு+மோர்+2 உருண்டை கம்புசோறு+சின்ன வெங்காயம்+மங்காய் சேர்த்து கரைத்துக் குடிக்கவும்.
Monday 28 May 2012 | By: Menaga Sathia

முருங்கைக்காய் தொக்கு /Drumstick Thokku

 நல்ல சதைப்பற்றான,இளசான முருங்கைக்காயில் செய்தால் அபாரமான சுவையில் இருக்கும் இந்த தொக்கு.சாதம்,இட்லி,தோசை அனைத்திற்க்கும் ஏற்றது.சுவையான குறிப்பு தந்த திருமதி.மனோ அவர்களுக்கு மிக்க நன்றி!!

தே.பொருட்கள்

முருங்கைக்காய் - 3
புளி - 1 எலுமிச்சை பழளவு
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 1 கப்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*முருங்கைக்காய்களை துண்டுகளாகி ஒரு பாத்திரத்தில் போட்டு,குக்கரில் வைத்து 2 விசில் வரை வேகவைக்கவும்.

*ஆறியதும் சதைப்பகுதியை வழித்தெடுத்து சின்ன வெங்காயத்துடன் கலந்து வைக்கவும்.

*புளியை சிறிது தண்ணீரில் கெட்டியாக கரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காய முருங்கைகலவையை போட்டு பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசல்+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.

*பின் வெந்தயத்தூள்+பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

Thursday 24 May 2012 | By: Menaga Sathia

இன்ஸ்டன்ட் கார்ன்மீல் இட்லி & ஈஸி பச்சை பட்டாணி குருமா / Instant Cornmeal Idly&Easy Green Peas Kurma


இட்லி செய்ய தே.பொருட்கள்

கார்ன்மீல்(சோளரவை) - 2 கப்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
பொடியாக நறுக்கிய கேரட்+பீன்ஸ் - தலா 1/4கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு+ உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 டீஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நறுக்கிய காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் கார்ன்மீல் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

*ஆறியதும் தயிர்+உப்பு+பேக்கிங் சோடா +தேவையான நீர் சேர்த்து கரைத்து 30 நிமிடங்கள் வைத்திருந்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

பச்சை பட்டாணி குருமா

தே.பொருட்கள்

ப்ரோசன்/ ப்ரெஷ் பட்டாணி - 1 கப்
தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வதக்கி அரைக்க

நறுக்கிய வெங்கயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 4/5
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 4

செய்முறை

*வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் தேங்காய்+பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைக்கவும்.


*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு சேர்த்து தாளித்து பட்டாணி+அரைத்த விழுது+உப்பு+தேவையான நீர் சேர்த்து 2 விசில் வரை வைத்து இறக்கவும்.
Monday 21 May 2012 | By: Menaga Sathia

பம்பளிமாசு பழ சாதம்/Grapefruit(Pamplemousse) Rice



புளிப்புள்ள பழத்தில் செய்தால் தான் நன்றாக இருக்கும்.எலுமிச்சை பழ சாதம் போலவே இருக்கும்.நன்றி ப்ரியா!!

தே.பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 2 கப்
பம்பளிமாசு பழம் -1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 கைப்பிடி
கடலைப்பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*பழத்திலிருந்து சாறு பிழியவும்.கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து உப்பு சேர்த்து சாறினை ஊற்றி கொதிக்க விடவும்.

*ஆறியதும் சாதத்தில்   சேர்த்து கிளறி பரிமாறவும்.

Thursday 17 May 2012 | By: Menaga Sathia

முட்டையில்லாத கேரட் கேக்(ப்ரெஷர் குக்கர் செய்முறையில்) /Eggless Carrot Cake (Pressure Cooker Method)

 அவன் இல்லையென்றாலும் கேக் செய்யலாம்.முதல் முறையாக ப்ரெஷர் குக்கரில் செய்த கேக்...நான் ஸ்டிக் ப்ரெஷர் குக்கராக இருந்தால் நல்லது,அலுமினியத்தில் பயன்படுத்துவதாக இருந்தால் பேக்கிங் சோடாவை தூவி பயன்படுத்தினால் குக்கரின் உட்பாகம் கருக்காது.

கேக் செய்யும் குக்கரில் தண்ணீர் ஊற்றக்கூடாது.விசில் மற்றும் கேஸ்கட் போடகூடாது.கேக் பாத்திரத்தை நேரடியாகவும் வைக்ககூடாது.குக்கர் ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் கேக் பாத்திரத்தை வைக்கவும்.

குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கேக் செய்யும் போது சொதப்பிவிட்டது.பின் இந்த ரெசிபியை பார்த்து செய்ததில் சரியாக வந்ததிலிருந்து பெரும்பாலும் ஸ்டீம்ட் கேக்தான் செய்கிறேன்...
தே.பொருட்கள்

மைதா - 1 கப்
சர்க்கரை -3/4 கப்
கேரட் பெரியது - 1 துருவிக்கொள்ளவும்
பால் -1/2 கப்
வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் - தலா 1/2 டீஸ்பூன்

செய்முறை

* பாலில் வினிகரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*மைதா+ பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா சேர்த்து 2முறை சலிக்கவும்.

*10நிமிடத்திற்கு பிறகு பால் திரிந்து இருக்கும்,அதனை நன்கு கலக்கவும்.

*பின் சர்க்கரை+எண்ணெய் சேர்த்து ,சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
 *குக்கரை 5 நிமிடம் அடுப்பில் வைத்து சூடு செய்து ,பேக்கிங் சோடாவை தூவி விடவும்.

*பின் மைதா கலவை+எசன்ஸ்+துருவிய கேரட் அனைத்தையும் மிருதுவாக சர்க்கரை கலவையில் கலக்கவும்.

*கேக் பாத்திரத்தில் எண்ணெய் தடவி,மைதா மாவை தூவி விடவும்.பின் கேக் கலவையை ஊற்றவும்.

*குக்கரின் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் கேக் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.

*பின் குறைந்த தீயில் 25-30 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.நடுவில் குத்தி பார்க்கும் போது வேகவில்லை எனில் மேலும் 5-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவைத்து எடுக்கவும்.
Monday 14 May 2012 | By: Menaga Sathia

கம்பு இட்லி & கோவைக்காய் சட்னி/Pearl Millet(Bajra)Idly & Tindora(Ivy Gourd ) Chutney

கம்பு இட்லி

தே.பொருட்கள்

கம்பு - 1 1/2 கப்
இட்லி அரிசி/ புழுங்கலரிசி - 1/2 கப்
வெள்ளை முழு உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*அரிசி+கம்புஇவைகளை தனியாகவும்,உளுந்து,வெந்தயம் இவைகளை ஒன்றாகவும் ஊறவைக்கவும்.

*கம்பை மட்டும் குறைந்தது 8 மணிநேரம் அல்லது முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.

*அரிசி மற்றும் உளுந்தை 4 மணிநேரம் ஊறினால் போதும்.

*உளுந்து +கம்பு இவைகளை நைசகவும்,அரிசியை கொரகொரப்பாகவும் அரைத்து உப்பு சேர்த்து ஒன்றாக கரைத்து புளிக்கவிடவும்.

 *புளித்ததும் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.

பி.கு

*தோசையும் நன்கு முறுகலாக வரும்.

கோவைக்காய் சட்னி



தே.பொருட்கள்

நறுக்கிய கோவைக்காய் - 10/12 எண்ணிக்கை
நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் துண்டுகள் - 2
புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை
*மேற்கூறிய பொருட்களில் உப்பு+தேங்காய்+புதினா கொத்தமல்லி தவிர அனைத்தையும் சிறிது எண்ணெயில் வதக்கவும்.
*ஆறியதும் உப்பு+தேங்காய்+புதினா கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும்.

*விரும்பினால் தாளித்துக் கொள்ளவும்.
Thursday 10 May 2012 | By: Menaga Sathia

பேக்ட் தக்காளி /Baked Tomatoes With Garlic

தே.பொருட்கள்
தக்காளி - 3
துருவிய பூண்டு - 1 1/2டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த துளசி இலைகள் - 1 டீஸ்பூன்

செய்முறை
*தக்காளியை வட்டமாகவும் சிறிது தடிமனாகவும் வெட்டவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் வைத்து தக்காளியை இடைவெளி விட்டு வைக்கவும்.

*மேற்கூறிய பொருட்களில் தக்காளியை தவிர மற்ற அனைத்தையும் ஒரு பவுலில் ஒன்றாக கலக்கவும்.

*அதனை நறுக்கிய தக்களியின் மீது பரவலாக ஊற்றி 210°C முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
Tuesday 8 May 2012 | By: Menaga Sathia

மாங்காய் ஊறுகாய் /Instant Mango Pickle

தே.பொருட்கள்:
மாங்காய் - 1 பெரியது
கடுகு,வெந்தயம் -தலா 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை:
*மாங்காயை கொட்டை நீக்கி தேவையான அளவில் நறுக்கவும்.நறுக்கிய மாங்காயை ஒரு துணியால் ஈரம்போக துடைக்கவும்.

*பின் தேவையான உப்பை வெறும் கடாயில் வறுத்து மாங்காயில் கலந்து 1 நாள் வைத்திருக்கவும்.

*மிளகாய்த்தூள்+கடுகு,வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்து ஊறவைத்த மாங்காயில் சேர்க்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மாங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

*ஆறியதும் பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
Monday 7 May 2012 | By: Menaga Sathia

கம்பு வெண்பொங்கல்/ Pearl Millet(Bajra) Venpongal

தே.பொருட்கள்
கம்பு - 1/2 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - 2 1/2 கப்

தாளிக்க

நெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு

செய்முறை

*கம்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும்.

*குக்கரில் கம்புரவை+பாசிப்பருப்பு+உப்பு+தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வரை நன்கு குழைய வேகவிடவும்.

*வெந்ததும் நெய்யில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து சேர்க்கவும்.

பி.கு

*வேகவைக்கும் போது சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*இதற்கு தொட்டு கொள்ள சட்னியோ,சாம்பாரோ தேவையில்லை.அப்படியே சாப்பிட சுவையாக இருக்கும்.
Thursday 3 May 2012 | By: Menaga Sathia

திராமிசு /Eggless Tiramisu With Sponge Cake ( Italian Dessert)


கூகிளில் பல  தேடல்களுக்கு பிறகு செய்து பார்த்தது....

விப்பிங் க்ரீம் செய்வது எப்படி ??

தே.பொருட்கள்

Heavy Cream -1 கப்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை

*ஒரு பவுலில் க்ரீமை ஊற்றி நன்கு நுரை வரும்வரை 20 நிமிடங்கள் பீட்டரால் கலக்கவும்.

*பின் சர்க்கரை+எசன்ஸ் சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கலந்தால் விப்பிங் கீரிம் ரெடி!!

திராமிசு

தே.பொருட்கள்
மஸ்கார்பொன் சீஸ் / க்ரீம் சீஸ் -1 கப்
விப்பிங் க்ரீம் -2 கப் / முட்டை மஞ்சள் கரு -3
சர்க்கரை -1/4 கப் /இனிப்பிற்கேற்ப
வெனிலா எசன்ஸ் - 1டீஸ்பூன்
கோகோ பவுடர் -1/4 கப்
1  9*9 இஞ்ச் ஸ்பான்ஞ் கேக்
பால்,சர்க்கரை கலக்காத காபி /Expresso -1 கப்

செய்முறை
*மஸ்கார்போன் சீஸ்+சர்க்கரை+வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

*பின் விப்பிங் க்ரீம் சேர்த்து மிருதுவாக  கலக்கவும்.

*ஸ்பாஞ்ச் கேக்கை குறுக்கில் 2ஆக வெட்டவும்.

*ஒரு தட்டில் முதல் பாதியை வைத்து ப்ளாக் காப்பியை பரவலாக மேலே ஊற்றி அதன் மேல் க்ரீம் கலவையை தடவி ,கோகோ பவுடரை சமமாக தூவி விடவும்.

*இதன்மேல் இன்னொருபாதி கேக்கை வைத்து ப்ளாக் காபி+க்ரீம்+கோகோ பவுடர் என அடுக்கவும்.


*இதனை ப்ரிட்ஜில் 8 மணிநேரம் / முதல்நாள் இரவே செய்து  வைத்து செட்டாகவிடவும்.

*ஈசி திராமிசு டெசர்ட் ரெடி!!

பி.கு

*இதில் ஆல்கோல் எதுவும் சேர்க்காமல் செய்துள்ளேன்.

*விப்பிங் க்ரீம் பதில் முட்டை மஞ்சள் கரு சேர்ப்பதாக இருந்தால் ,ஒரு பவுலில் அதனை நன்கு கலக்கி டபுள் பாய்லரில் வைத்து கலக்கவும். லேசாக இளம் மஞ்சள் கலரில் மாறும் போது  மஸ்கார்பொன் சீஸுடன் கலக்கவும்.

* லேடி பிங்கர் பிஸ்கட்டில் செய்வதாக இருந்தால்
ஒரு டிரேயில் லேடி பிங்கர்ஸ் பிஸ்கட்டை ப்ளாக் காப்பியில் நனைத்து அடுக்கவும்.அதன் மேல்  க்ரீம் கலவையை பரவலாக தடவி கோகோ பவுடரை சமமாக தூவவும்.

இதன்மேல் மற்றொரு அடுக்கு முதலில் செய்தவாறு லேடிபிங்கர்ஸ்+க்ரீம்+கோகோ பவுடர் என அடுக்கவும்.

*நன்றாக செட்டானால் தான் சாப்பிட சுவையாக இருக்கும்.

01 09 10