கூகிளில் பல தேடல்களுக்கு பிறகு செய்து பார்த்தது....
விப்பிங் க்ரீம் செய்வது எப்படி ??
தே.பொருட்கள்
Heavy Cream -1 கப்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை
*ஒரு பவுலில் க்ரீமை ஊற்றி நன்கு நுரை வரும்வரை 20 நிமிடங்கள் பீட்டரால் கலக்கவும்.
*பின் சர்க்கரை+எசன்ஸ் சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கலந்தால் விப்பிங் கீரிம் ரெடி!!
திராமிசு
தே.பொருட்கள்
மஸ்கார்பொன் சீஸ் / க்ரீம் சீஸ் -1 கப்
விப்பிங் க்ரீம் -2 கப் / முட்டை மஞ்சள் கரு -3
சர்க்கரை -1/4 கப் /இனிப்பிற்கேற்ப
வெனிலா எசன்ஸ் - 1டீஸ்பூன்
கோகோ பவுடர் -1/4 கப்
1 9*9 இஞ்ச் ஸ்பான்ஞ் கேக்
பால்,சர்க்கரை கலக்காத காபி /Expresso -1 கப்
செய்முறை
*மஸ்கார்போன் சீஸ்+சர்க்கரை+வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
*பின் விப்பிங் க்ரீம் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.
*ஸ்பாஞ்ச் கேக்கை குறுக்கில் 2ஆக வெட்டவும்.
*ஒரு தட்டில் முதல் பாதியை வைத்து ப்ளாக் காப்பியை பரவலாக மேலே ஊற்றி அதன் மேல் க்ரீம் கலவையை தடவி ,கோகோ பவுடரை சமமாக தூவி விடவும்.
*இதன்மேல் இன்னொருபாதி கேக்கை வைத்து ப்ளாக் காபி+க்ரீம்+கோகோ பவுடர் என அடுக்கவும்.
*இதனை ப்ரிட்ஜில் 8 மணிநேரம் / முதல்நாள் இரவே செய்து வைத்து செட்டாகவிடவும்.
*ஈசி திராமிசு டெசர்ட் ரெடி!!
பி.கு
*இதில் ஆல்கோல் எதுவும் சேர்க்காமல் செய்துள்ளேன்.
*விப்பிங் க்ரீம் பதில் முட்டை மஞ்சள் கரு சேர்ப்பதாக இருந்தால் ,ஒரு பவுலில் அதனை நன்கு கலக்கி டபுள் பாய்லரில் வைத்து கலக்கவும். லேசாக இளம் மஞ்சள் கலரில் மாறும் போது மஸ்கார்பொன் சீஸுடன் கலக்கவும்.
* லேடி பிங்கர் பிஸ்கட்டில் செய்வதாக இருந்தால்
ஒரு டிரேயில் லேடி பிங்கர்ஸ் பிஸ்கட்டை ப்ளாக் காப்பியில் நனைத்து அடுக்கவும்.அதன் மேல் க்ரீம் கலவையை பரவலாக தடவி கோகோ பவுடரை சமமாக தூவவும்.
இதன்மேல் மற்றொரு அடுக்கு முதலில் செய்தவாறு லேடிபிங்கர்ஸ்+க்ரீம்+கோகோ பவுடர் என அடுக்கவும்.
*நன்றாக செட்டானால் தான் சாப்பிட சுவையாக இருக்கும்.
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
This is our staple dessert at Olive gardens! Also we buy Tiramisu cake for our friend's Birthday parties.
Nice try Menaga..tiramisu looks good! :P
எங்க ஊர் தேங்கா பன் ஹா ஹா பேரைப்பாரு திராமிசுவாம் ஹய்யோ அய்யோ :)
Romba pudhusa iruku...
One of my favorite desserts, but recently when I had this, the alcohol smell was too much for me, I shud try this out at home..
looks yummy.....
Love this dessert,wish to have a slice anytime.
என் மகளுக்கு திராமிசு கேக் என்றால் மிகவும் பிடிக்கும் மேனகா.கேக் சூப்பர்........
yum and delicious deserrt
ரொம்பப் புதுமையான செய்முறை. புதிய ஒரு சமையல் பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி மேனகா.
பேரே புதுவிதமாக இருக்கு:)
un felice week end per Te...ciao
this is new to me...mouthwatering tiramisu..!
Tasty Appetite
Yummy dessert..Perfectly made.. :)
My fav cake.love the pictures.
Post a Comment