Monday, 7 September 2009 | By: Menaga sathia

பேரிச்சம்பழம் மஃபின்

தே.பொருட்கள்:

பால் -1 கப்
முட்டை - 1
மைதா மாவு -2 கப்
உப்பு - 1சிட்டிகை
பேக்கிங் பவுடர் - 1/2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
உருக்கிய பட்டர் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம் - 1/2 கப்
பட்டை பவுடர் - 1/4 டீஸ்பூன்
பாதாம் பவுடர் - 1 டீஸ்பூன்

செய்முறை :

* ஒரு பவுலில் முட்டை+பால் கலந்து நன்கு கலக்கவும்.பின் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை நன்கு கலக்கவும்.

*மற்றொரு பவுலில் மைதா+உப்பு+பட்டை பவுடர்+பாதாம் பவுடர்+பேக்கிங் பவுடர் கலக்கவும்.

*மைதா கலவையை சிறிது சிறிதாக முட்டை,பால் கலவையில் கட்டியில்லாமல் கலக்கவும்.

*அதனுடன் நறுக்கிய பேரிச்சம்பழம்+பட்டர் சேர்க்கவும்.

*அவனை 400 டிகிரியில் முற்சூடு செய்து கலவையை மஃபின் கப்பில் முக்கால் பாகம் வரை ஊற்றி 20 நிமிடம் பேக் செய்யவும்.

*அவனிலிருந்து வெளியே எடுத்து 10 நிமிடம் கழித்து எடுத்தால் ஒட்டாமல் வரும்.

*குழந்தைகளுக்கு பிடித்த பேரிச்சம்பழம் மஃபின் ரெடி.


கவனிக்க:

அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் செட் செய்யவும்.ஒரு டூத்பிக் கொண்டு கலவையில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வந்திருந்தால் வெந்திருக்கு என்று அர்த்தம்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mrs.Faizakader said...

ரொம்ப சூப்பராக இருக்கு. இதனை மைக்ரோ அவனில் செய்யமுடியுமா?

S.A. நவாஸுதீன் said...

நல்ல குறிப்பு

srikars kitchen said...

நன்றாக உள்ளது.முட்டை இல்லாமல் பண்ண வருமா??thxs for sharing..

Jaleela said...

வாவ் சூப்பர் மக்பின், அதுவும் பேரிட்சையில்.

மேனாகா பார்க்கவே அருமையாக இருக்கு

Priya said...

Romba healthy muffins Menaga, agar agara naan paris storela vanginen, they used to sold as laong threads, naan veetula atha mixiela arachi powderaa use pannuven...Paris 13éméla irukura Paris storela vanginen, neegha chinses storela try pannunga illana Gare dunordla Shamina marketla kedaikum sureaa,hope this helps..

ஷ‌ஃபிக்ஸ் said...

//Mrs.Faizakader said...
ரொம்ப சூப்பராக இருக்கு. இதனை மைக்ரோ அவனில் செய்யமுடியுமா?//

இது போல வேறு மஃபின்ஸ்கள் கடைகளில் தான் பார்த்தது, மைக்ரோ அவனில் செய்ய முடியுமானால் முயற்சி செய்கிறோம். நாங்கள் இருக்கும் பகுதிகளில் பேரித்தம்பழம் நிறைய கிடைக்கும்.

Priya said...

Menaga pls collect ur award from my blog ya..

ஷ‌ஃபிக்ஸ் said...

:) Follow up க்ளிக் செய்ய மறந்துட்டேன்.

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Geetha Achal said...

மிகவும் சூப்பராக இருக்கு பேரிச்சம்பழம் மஃபின்...மூன்று கப் பார்சல் ப்ஸீல்....

அக்ஷ்தா குட்டி சீக்கரம் தூங்கி எழுந்து கொண்டு, இந்த படத்தினை பார்த்து அம்மா கப் கேக்...கப் கேக் இனு குதிக்கின்றாள்...

இன்று இங்கு லீவ் என்பதால் செய்யலாம் என்று நினைத்தேன்...அப்புறம் தான் நினைவுக்கு வந்தது...பேரிச்சம்பழம் தீர்ந்துவிட்டது என்று...

மேனகா...எனக்கு சில டவுட்ஸ்...

பட்டை பவுடர் என்பது cinnamon powder தானே...

கண்டிப்பாக பாதம் பவுடரை சேர்க்கவேண்டுமா...பாதாம் பவுடர் என்று தனியாக கிடைகின்றாதா...அல்லது நாம் அரைத்து கொள்ள வேண்டுமா...தோலுடனா அல்லது தோல் நீக்கியா...

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில்
மதிப்பு மிக்க பதிவரான தங்களது பதிவு தானாகவே இணைந்துள்ளது...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....உங்கள் படைப்பை பார்க்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

En Samaiyal said...

Dates Muffin looks healthy & diff ...very nice pa....

Mrs.Menagasathia said...

உங்க மைக்ரோ அவன் கன்வெக்‌ஷனல் மோட் இருந்தால் தாராளமாக செய்யலாம்.தங்கள் கருத்துக்கு நன்றி பாயிஷா!!

Mrs.Menagasathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே!!

Mrs.Menagasathia said...

முட்டையில்லாமல் செய்தால் ஷாப்டாக வராது ஸ்ரீப்ரியா.தங்கள் கருத்துக்கு நன்றிப்பா!!

Mrs.Menagasathia said...

தவறாமல் எனக்கு பின்னுட்டம் அளித்து கருத்து சொல்லும் உங்களுக்கு என் நன்றி ஜலிலாக்கா!!

Mrs.Menagasathia said...

நிச்சயம் ஷமினா மார்கெட்ல பார்க்குறேன்.தங்கள் பதிலுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா!!

Mrs.Menagasathia said...

மைக்ரோ அவனில் கேக் செய்யும் கன்வெக்‌ஷனல் மோட் இருந்தால் தாராளமாக கப் கேக்,கேக்லாம் செய்யலாம் ஷஃபி,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!

Mrs.Menagasathia said...

தங்கள் விருதை ஏற்றுக் கொண்டேன் ப்ரியா,விரைவில் போஸ்ட் செய்கிறேன்.ரொம்ப சந்தோஷமா இருக்கு விருது மேல விருது கிடைக்குது.மிக்க நன்றி ப்ரியா!!

Mrs.Menagasathia said...

நன்றி உலவு.காம்!!

Mrs.Menagasathia said...

உங்களூக்கு இல்லாததா கீதா,இங்க வாங்க செய்து தரேன். தாராளமா பாப்பாவுக்கு செய்து குடுங்க.

1.//பட்டை பவுடர் என்பது cinnamon powder தானே...// ஆமாம்பா.

2.விருப்பபட்டால் பாதாம் பவுடர் சேர்க்கலாம்.கடைகளில் ரெடிமேடாக தோலுடனும்,தோலில்லாமலும் பாதாம் பவுடர் கிடைக்குது.இங்கு நான் போட்டிருப்பது பாதாமை தோலோடு அரைத்து போட்டுள்ளேன்.

தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!

Mrs.Menagasathia said...

நன்றி தமிழர்ஸ்!!

Mrs.Menagasathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியாராஜ்!!

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு, ஆசையாவும் இருக்கு...:-))

Thamarai selvi said...

மாமி நானும் கேக் பண்ணலம்னு நினைச்சு நேற்றுதான் எல்லாம் வாங்கி வைத்தேன், செய்துபார்க்கிறேன்,உங்க குறிப்பு அசத்தல் போங்க!!

Mrs.Menagasathia said...

சிங்ககுட்டி கேக் எடுத்துக்குங்க.நன்றி தங்கள் கருத்துக்கு.

Mrs.Menagasathia said...

செய்து பார்த்து சொல்லுங்கப்பா,நன்றி தங்கள் கருத்துக்கு மாமி!!

01 09 10