Friday 25 September 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் காந்த்வி(Oats Khandvi - Gujarat Spl)

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1/2 கப்
ரவை - 1/2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/4டீஸ்பூன்
தயிர் - 125 கிராம்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் - 2
வெள்ளை எள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை :

*ஒட்ஸை மிக்ஸியில் பொடிக்கவும்.

*ஒட்ஸ்+ரவை+உப்பு+பெருங்காயம்+மஞ்சள்தூள்+தயிர் சேர்த்துக் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ரவை நன்கு ஊறியிருக்கும்,2 கப் நீர்விட்டு கரைத்து அடுப்பில் வைத்து கட்டியில்லாமல் விடாது கிளறவும்.
*கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி கட்டிவிழுந்திருந்தால் எடுத்துவிடவும்.

*மேலும் 1/2 கப் நீர்விட்டு கரைத்து அடுப்பில் மறுபடியும் கட்டியில்லாமல் கிளறி இறக்கவும்.

*டேபிளில் அலுமினியம் பேப்பர் போட்டு அதில் கலவையை கொட்டி ஒரு தட்டையான கரண்டியால் சமச்சீர்ப்படுத்தி ஆறவிடவும்.
*ஆறியதும் அதை கத்தியால் துண்டுப்போட்டு மெதுவாக பாய் சுருட்டுவதுபோல் சுருட்டி தட்டில் வைக்கவும்.
*அதன்மேல் தேங்காய்த்துருவல்+கொத்தமல்லித்தழை+தாளிப்புக் கலவை போட்டு பரிமாறவும்.
கவனிக்க:

1.ஒரிஜினல் காண்டவி கடலைமாவில் செய்வது.ஒட்ஸ்+ரவைக்கு பதில் கடலைமாவு போட்டு செய்வது.நான் ஒரு மாறுதலுக்கு ஒட்ஸில் செய்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது.

2.ஒட்ஸ்+ரவை கலவையை 1/2 மணிநேரம் கண்டிப்பாக ஊறவைக்கனும்.ரவை ஊறினால் தான் நன்றாகயிருக்கும்.

3.அலுமினியம் பேப்பரில் தடவியதும் ஆறவிட்டால்தான் துண்டுப்போட வரும்.

36 பேர் ருசி பார்த்தவர்கள்:

Srikitchen said...

looks too good!
do visit my blog when u find time!

Priya Suresh said...

Kalakuringa Menaga, oatsla yevalo dishes pannuringa..Khandvi looks delicious..

UmapriyaSudhakar said...

ரொம்ப நல்லா இருக்கு. ரோல் பண்ண எளிதாக வருமா? நானும் டயட்ல தான் இருக்கேன். உங்க குறிப்பு எல்லாம் ரொம்ப உபயோகமா இருக்கு.நன்றி மேனகா.

Nithya said...

Wow.. pudhumayaana dish. Idhuvaraikum paathadhilla. super ponga.. kalakal as usual. :)

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்ரீலேகா.
உங்கள் ப்ளாக்கும் நன்றாகயிருக்கு.

Menaga Sathia said...

ஒட்ஸில் இன்னும் நிறைய இருக்குப்பா.தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா.

Menaga Sathia said...

ஆறியதும் துண்டுப் போட்ட பிறகு ரோல் செய்ய ஈஸியா வரும்ப்பா.செய்துப் பாருங்கள் மொத்தம் 20 நிமிஷம் தான் ஆகும் செய்வதர்க்கு.நீங்களும் டயட்ல இருக்கிங்களா?சந்தோஷம்.தங்கள் கருத்துக்கு நன்றி உமாப்ரியா.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா!!

Pavithra Elangovan said...

Wow khandvi with oats ..really innovative and also healthy na.. looks great.. interesting by adding oats to it.. I love khandvi so will try this for sure.. Arumai....

ப்ரியமுடன் வசந்த் said...

என்னாச்சு ஓட்ஸ் வாரமா?

ஒரே ஓட்ஸ் கலக்கலா இருக்கு...

Unknown said...

FIrst time here. Romba nalla recipe. This is one of my favorite snacks.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றாக இருக்கின்றது ஒட்ஸ் காந்தவி..கேள்விபடாத பெயராக இருக்கின்றது...சூப்பர்ப்...

இதே மாதிரி Polentaவில் செய்து இருக்கின்றேன்...அது ஒரு இத்தாலியன் உணவு வகை முறையில் செய்தது....இதே போல தான் அதுவும் இருக்கும்...ஆனால் ரவைக்கு பதிலா அதில் செய்தது...அதனை இங்கு ஒளிபரப்பும் Everyday Italian என்ற ஒரு நிகழ்ச்சியில் பார்த்து இருக்கின்றேன்...

Jaleela Kamal said...

மேனகா ஓட்ஸில் வித விதமாக அசத்துறிங்க போல‌

பார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு, இது ஆறியதும் ரோல் செய்ய‌ வருதா?

அன்புடன் மலிக்கா said...

சும்மா கலக்குறீங்க மேனகா
சமையல் கில்லாடின்னு பட்டம் தந்துடலாம் ஓகேவா

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு மேனகா, பெயர் கூட புதிதாய் இருக்கிறது.

R.Gopi said...

மேனகா...

உங்களுக்கு ஓட்ஸ் ரொம்ப பிடிக்குமா?? இவ்ளோ வகையான சமையல் பண்ணி இருக்கீங்களே ஓட்ஸ் வச்சு...

ஃபோட்டோவ பார்த்தா, ஒரு நாலு பீஸ் கிடைச்சா, சாப்பிட்டு ஏப்பம் விடலாம் போலதான் இருக்கு...

Thenammai Lakshmanan said...

Hai Menagasathiya
oats la ivvalavu variety aa
kanji panni kuduchee nonthu poik kidantheen
thanks for your inventions
everythings im kalakkalaa iruukkuma

then HAPPY B"DAY TO LITTLE ANGEL
"SHIVANI"

Malar Gandhi said...

Hat's off to your hard work, indeed it looks great. SOunds very healthy at the same time.

Anonymous said...

kalakkareenga menaka....

cheers,
ammu..

Anonymous said...

மேனகா..இந்த குறிப்பை பார்த்து இன்று செய்தேன்..ஆனால் உடைந்து விட்டது.என்ன தவறு செய்தேன்னு தெரியல.....ருசி அருமையாக இருந்தது.
நன்றி


அன்புடன்,

அம்மு.

Menaga Sathia said...

நிச்சயம் செய்து பாருங்கள் பவித்ரா நன்றாகயிருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

ஆமாம் வசந்த் ஒட்ஸ் வாரம்தான்.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திவ்யா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!

Menaga Sathia said...

ஆறியதும் பொருமையாக ரோல் செய்தால் வரும்.தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜலிலாக்கா.நான் சமையலை இபோழுதுதான் கத்துக்கிட்டு இருக்கேன்.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி சிங்கக்குட்டி!!

Menaga Sathia said...

ஆமாம் கோபி ஒட்ஸ் இப்போ ரொம்ப பிடித்துவிட்டது.ஆரம்பத்தில் அதைப் பார்த்தாலே வெறுப்பாயிருக்கும்.வேணும்னா சொல்லுங்க செய்து அனுப்புறேன்.தங்கள் கருத்துக்கு நன்றி கோபி!!

Menaga Sathia said...

இன்னும் நிறைய செய்யலாம் ஒட்ஸ் வைத்து.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேனம்மைலக்‌ஷ்மணன்!!

வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மலர்காந்தி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அம்மு!!

நீங்க கடலைமாவில் அல்லது ஒட்ஸில் செய்தீங்களா?
கடலைமாவில் செய்து இருந்தீங்கன்னா அதை நல்லா பேஸ்ட் வரும்வரை கட்டிவிழாமல் கைவிடாமல் கிளறி செய்து ஆறவிட்டு ரோல் செய்தால் வரும் அம்மு.செய்துப் பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சி!!

Kanchana Radhakrishnan said...

புதிதாய் இருக்கிறது. செய்து பார்க்கிறேன்.

goma said...

சிட்டுப் பாப்பா ஷிவாணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தங்கள் சமயலறையில் அனைத்துமே டிசைனெர் வெரைட்டி போல் தனித்துவமாக ருசிக்கிறது.
இது நாள் வரை கவனிக்காமல் இருந்திருக்கிறேனே!!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி காஞ்சனா!!

Menaga Sathia said...

வாழ்த்து,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கோமா!!

Mahi said...

நன்றி மேனகா! அடுத்தமுறை ஓட்ஸ்-ரவா காம்பினேஷன்லே செய்து பார்க்கிறேன்! :)

01 09 10