தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.
தாமரைத்தண்டு,இதில் அதிகளவு இயற்கை மருத்துவ குணங்கள் இருக்கு.
சமைக்கும் முறை:
இதன் மேல் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவி பயன்படுத்தவும்.தண்டு இளசாகவோ அல்லது முற்றியதாகவோ இருந்தால் சமைத்தாலும் நறுக் நறுக் என்ரு தான் இருக்கும்.இதன் தண்டை பச்சையாகவே சாப்பிட்டால் ரொம்ப இனிப்பா நன்றாகயிருக்கும்.உப்பு எப்படிதான் போட்டாலும் தண்டில் ஏறாது,உப்பில்லாமல் சப்புன்னு இருக்கும்.
தாமரைத்தண்டின் புகைப்படம்:
சத்துக்கள்:
இதில் கொழுப்பு,சர்க்கரை எதுவுமில்லை.100 கிராம் தண்டில் கார்போஹைட்ரேட் 16 கிராம்,ப்ரோட்டீன் 2 கிராம் இருக்கு.விட்டமின் C 54% ,விட்டமின் B6 13% இருக்கு.
வறுவல் செய்ய தே.பொருட்கள்:
தாமரைத்தண்டு - 1 பெரியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கார்ன்மாவு - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
செய்முறை:
*தாமரைத்தண்டை தோல்சீவி மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவவும்.
*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்துப் பொருட்களும் சேர்த்து பிசிறி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் தவாவில் எண்ணெய்விட்டு வறுக்கவும்.
பி.கு:
இது வாழைக்காய் வருவல் மாதிரி இருக்கும்.நானே இதுநாள்வரை இத்தண்டினை பார்த்ததும்,சாப்பிட்டதும் இல்லை.முதன்முறையாக வாங்கி சமைத்து சாப்பிட்டேன் மிகவும் நன்றாக இருந்ததால் உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.உங்களுக்கும் கிடைத்தால் சமைத்துப் பாருங்களேன்,அப்புறம் எப்பவும் இதைதான் செய்வீங்க.
27 பேர் ருசி பார்த்தவர்கள்:
தாமரை தண்டு வருவல் புது ரெசிபி கலக்குங்கள் மேனகா கிடைக்கும் போது செய்து பார்கிறேன்
ஓ தாமரைத்தண்டா... எங்க ஊருல கிடைக்குதுங்க.. ரொம்ப நாள் அதை என்னன்னே தெரிஞ்சுக்கல..அப்பறம் பகக்த்துல வாங்கினவங்க அதைசாதரணமா பொரியல் செய்து சாப்பிடலாம்ன்னு சொன்னாங்க.. வாங்கத்தான் யோசனை.. அடுத்தவாரச்சந்தையில் வாங்கிட்டுவந்துடரேன்.. நன்றி.. நன்றி..:)
Ungaluku yenga kedachithu ivalo fresh thamarai thandu, yennaku chinese storela frozen sectionla than kedaikum, i do kootu with this healthy roots.here is the link of my dish with lotus root..http://priyaeasyntastyrecipes.blogspot.com/2008/09/lotus-root-dal-gravythamaraithandu.html.. .time irruntha check pannungalen..fresh lotus root yenga vangina Menaga, konjam solla mudiyumaa..
நானும் இன்னைக்கு தான் பார்க்கிறேன்.
இதில் இருக்கும் சத்துக்களை பார்த்தால் வாங்கி சாப்பிடனும் என்று ஆர்வம் வருகிறது.
http://allinalljaleela.blogspot.com/2009/09/blog-post_8871.html
தாமரை தண்டு பார்த்ததும் சின்ன அச்சு முருக்கு போல் இருக்கு, எனக்கு இது எங்கு கிடைக்குதுன்னு தெரியல, இது பெண்களுக்கு நல்லது என்பார்கள்.
நீங்கள் போட்டுள்ள ஆங்கில பெயரில் தேடிபார்க்கிறேன்.
என் பதிவில் உங்களையும் அழைத்திருக்கிறேன் வாங்க மேனகா.
இதுவரை சாப்பிட்டதில்லை
இங்கே கிடைக்குமான்னும் பார்க்கனும்
naan ethuvarai ethai use panninathu illai. thxs for the recipe..
நல்ல குறிப்பு...நானும் இது நாள் வரை தாமரை தண்டினை வாங்கியது இல்லை..
இங்கு உங்கு உள்ள சைனீஸ் கடைகளில் இதே போல பார்த்து இருக்கின்றேன்...ஆனால் அது என்ன என்று ஒழுங்காக பார்த்து இல்லையே...
இந்த வாரம் கடைக்கு போகும் பொழுது பார்த்துவிட்டு வருகிறேன்..
நன்றி...நல்லது எல்லாம் எங்க நம்ம கண்ணுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தெரியுது.....கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன்...
இது வரை பார்த்ததே இல்லை, இங்கே கிடைக்குமான்னு தெரியவில்லை, ஊருக்கு போனால் இது போல புதுசு புதுசா பார்க்கலாம், சாப்பிடலாம். புதிய படைப்புக்கு நன்றி.
கிடைக்கும் போது செய்து பாருங்கள்,நன்றி சாரு!!
ரொம்ப நல்லது இதை சாப்பிட்டால்.செய்து பாருங்கள் வாழைத்தண்டு மாதிரியே தான் இருக்கும்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முத்துலெட்சுமி!!
உங்கள் கூட்டுக் குறிப்பையும் பார்த்தேன் ப்ரியா.நன்றாக இருக்கு.அடுத்தமுறை செய்துப் பார்க்கிறேன்.நான் Gare du Nord ல் V.T Cash& carry கடைல வாங்கினேன் ப்ரியா.நான் போகும்போது தான் எடுத்து வைத்தாங்க.நான் முதல்முறையா வாங்கியதால் 2 தண்டு மட்டும் வாங்கினேன்.இனி நிறைய வாங்கி செய்யவேண்டியதுதான்.நீங்களும் அங்க வாங்குங்க.ப்ரெஷ்ஷாக கிடைத்தது.நன்றி ப்ரியா!!
நிச்சயம் கிடைக்கும் போது சமைத்துப் பாருங்கள்,மிகவும் நல்லது.நன்றி பாயிஷா!!
என்னை பதிவுக்கு அழைத்ததற்க்கு நன்றி அக்கா.கூகிளில் தேடிப்பாருங்க.நிறைய விபரங்கள் கிடைக்கும்.நன்றி ஜலிலாக்கா!!
கிடைத்தால் சமைத்துப் பாருங்கள் ஜமால்,நன்றி!!
கிடைக்கும் போது செய்துபாருங்கள்,கருத்துக்கு நன்றி ஸ்ரீகர்!!
//நல்லது எல்லாம் எங்க நம்ம கண்ணுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தெரியுது.// நல்லா சொன்னிங்க.நான் கடையில் பார்த்திருக்கேன் அது பனங்கிழங்குன்னு நினைத்து வாங்கமாட்டேன்.ஏதேச்சையாக அங்குஇருப்பவர்களிடம் கேட்கும்போது சொன்னாங்க.அப்போ தான் வாங்கினேன்.சமைத்துபாருங்க கீதா.நன்றி!!
இந்தியாவில் கிடைக்குதா ஷஃபி?கிடைத்தால் செய்துபாருங்க.நானும் முதல்முறையாக நேற்றுதான் செய்தேன்.நன்றாகயிருந்தது.நன்றி உங்களுக்கு!!
புதுவிதமான குறிப்பா இருக்கே! தாமரைத்தண்டு எங்க கிடைக்கும்? US-ல கிடைக்குமா?
தாமரக்கிழங்கு என பரவலாக ஈழத்தில் இதை அழைப்பதுண்டு பொரியல் மற்றம் கூட்டு இதில் செய்யலாம்! இந்தியாவிலும் சந்தைகளில் கண்டதுண்டு, சைனீஸ் கடைகளில் வாங்கலாம்.
என்ன மாமி ஏதோ ஏதோ புதுசா கலக்குறீங்க?! இன்னைக்குதான் முதல் தடவ இத பார்க்கிறேன்,இப்போ தான் இதுல புது ரெஸிப்பி கூட பண்ணலாம்னு தெரியுது!!இது இங்க யூஎஸில் கிடைக்காதுனு நினைக்கிறேன், எங்க ஊருல,சென்னைல கூட நான் பார்த்தது இல்ல..எப்போதாவது கிடைத்தால் ட்ரை பண்ணி பார்க்கிறேன்..பார்க்க கிரிஸ்பியா தெரியுது, சாப்பிட்டா எப்படி இருக்கும் மாமி? செய்து தான் பார்க்கனுமோ?
இந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
http://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html
அன்புடன்,
கீதா ஆச்சல்
சைனீஸ் கடைகளில் ப்ரோசன் பிரிவில் இருக்கும் உமா.செய்து சாப்பிடுங்க.நன்றி!!
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நோநோ!!
கிடைக்கும் மாமி,சைனீஸ் கடையில் கிடைக்கும்,சமைத்து பாருங்க.தங்கள் கருத்துக்கு நன்றி மாமி!!
நன்றி கீதா!!
Menaga romba thanks, VTku next time ponna udane vangiduvene...ithu varaikum naan freshaa inga paathathu illa, thanks for everything Menaga..
Post a Comment