Friday 5 November 2010 | By: Menaga Sathia

21 காய் சாம்பார்/21 Vegetable Sambhar

இன்று கேதார கௌரி விரதம்.21 காய் போட்டு சாம்பார் செய்து படையல் செய்வாங்க.இந்த சாம்பாரின் சுவையே தனிதான்.
நான் சேர்த்திருக்கும் காய்கள் முருங்கைக்காய்,கத்திரிக்காய்,மாங்காய்,கேரட்,பீன்ஸ்,கோஸ்,பாகற்காய்,
கோவைக்காய்,புடலங்காய்,பீர்க்கங்காய்,சுரைக்காய்,வெள்ளை பூசணிக்காய்,மஞ்சள் பூசணிக்காய்,காலிபிளவர்,பச்சைபட்டாணி,
முருங்கைக்கீரை,உருளைக்கிழங்கு,
சேப்பக்கிழங்கு,வாழைக்காய்,சேனைக்கிழங்கு,வெண்டைக்காய்.அந்தந்த காய்களின் அளவைக் கொஞ்சமாக சேர்க்கவும்.இந்த சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தால்தான் நன்றாகயிருக்கும்.

தே.பொருட்கள்:வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
புளிகரைசல் - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
21 காய்கள் - தேவைக்கு
நறுக்கிய தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 10
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
 
செய்முறை:*தக்காளி+பச்சை மிளகாய்+காய்கள் முருங்கைக்கீரை+மாங்காய் தவிர எண்ணெய் விட்டு வதக்கிக் வேகவைத்த பருப்புடன் சேர்த்து குக்கரில் 1 விசில் வரை வேகவிடவும்.

*புளிகரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை போனதும் வேகவைத்த காய்கள்+உப்பு சேர்த்து மாங்காய்+முருங்கைக்கீரை+சாம்பார் பொடி சேர்க்கவும்.

*மாங்காய் வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சாம்பார் வெங்காயத்தை போட்டு வதக்கி சாம்பாரில் சேர்க்கவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

சாம்பார் நல்லா இருக்கு மேனகா!

காய்களின் லிஸ்ட்டைப் பார்த்ததுமே சாப்ட்டமாதிரி ஆகிடுச்சு எனக்கு.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! நான் சமைக்கிறத விட உங்க வீட்டுக்கே வந்து சாப்பிட்டுக்கறேன்.:)

எல் கே said...

ஹ்ம்ம் இந்த மாதிரி சாம்பார் கூடு திருவாதிரை சமயத்தில் பண்ணுவார்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

ஸாதிகா said...

21 காய் போட்டு சாம்பாரா.......!அத்தனை காயக்ளையும் தேடிப்பிடித்து வாங்கி செய்யணுமே?பேசாமல் இந்த சாம்பார் வச்ச அன்று எனக்கு ஒரு மெசேஜ் போட்டுடுங்கோ மேனகா.

Akila said...

ammmmmaaaaahhhh, 21 kaikarigal sambar.... super.... kaikalai cut panrathuke time aagi irukume...

சசிகுமார் said...

காய்கறி விக்கிற விலையில 21 காய் போட்டு சமையலா

Shama Nagarajan said...

yummy delicious sambar

Menaga Sathia said...

நன்றி மகி!! தாராளமா வீட்டுக்கு வாங்க,செய்து தரேன்...

நன்றி எல்கே!! ஆமாங்க எனக்கு தெரிந்து இந்த சாம்பார் இந்த விரதம்,திருவாதிரை,ஏகாதசி அன்னிக்கு செய்வாங்க..

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஸாதிகாக்கா!! இந்த காய்கள் தீபாவளி+திருவாதிரை+ஏகாதசி விரதங்களில் கொஞ்சமா கூறு செய்து 10 ரூபாய்க்கு விற்பாங்க.எக்ஸ்ட்ராகாய்கள் வாங்கி நிறைய செய்வாங்க.அந்தந்த காய்களை நாம் தேடி வாங்கதேவையில்லை.கடையிலயே விற்பாங்க...ஓ இப்பவே வாங்க எங்க வீட்டுக்கு அக்கா+அண்ணிக்கு கொடுப்பதற்காக நிறைய செய்துள்ளேன்...

Menaga Sathia said...

நன்றி அகிலா!! இல்லப்பா நான் ஏற்கனவே ப்ரீசரில் காய்களை கட் செய்து வைத்திருப்பேன்+ப்ரெஷ் காய்கள் மட்டும் கட் செய்து செய்துள்ளேன்...

நன்றி சசி!! மாங்காய்,கீரை,கத்திரி,கேரட் இவைகள்தான் ப்ரெஷ்ஷா போட்டுள்ளேன்,மீதியெல்லாம் நான் ஏற்கனவே தேவைக்கு வாங்கி ப்ரீசரில் சேர்த்து வைத்திருந்தது...

நன்றி ஷாமா!!

Ravi kumar Karunanithi said...

naanum seiyalamnu paarthen. but mudialaye...

Asiya Omar said...

சாம்பார் அருமை.

இமா க்றிஸ் said...

அருமை. ;)

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...அம்மா இதனை ஏகதேசி சமயம் செய்வாங்க...சூப்பராக இருக்கே....சாப்பிட வரவா...

'பரிவை' சே.குமார் said...

சாம்பார் அருமை.

Jaleela Kamal said...

உங்கள் கோரத கௌரி விரதம் 21 காய் சாம்பார் நான் இப்ப தான் கேள்வி படுகிறேன்.தகவல்க்கு நன்றி
சாம்பார் மிக அருமை

நான் எப்போதும் ஏழு , எட்டு காய்கள் சேர்த்து சமைப்பேன்.
இங்கு கிரசரி ஷாப்பிலும், பாக்கெட்டில் ஒரு 10 காய் கிட்ட அரை கிலொ தேறும் சாம்பாருகென்ரே த்னியாக வைத்து இருப்பாஙக, பெரிய மால் களிலும், இது போல் தான் ஒரு பாக்கெட்டில் நிரை காய் கள் வைத்து 7 திர்ஹம்ஸ் க்கு விற்கிறார்கள்

சாருஸ்ரீராஜ் said...

மேனகா சாம்பார் ரொம்ப நல்லா இருக்கு , நாங்க கேதார கொளரி நோன்புக்கு ஒன்னும் சமைப்பதில்லை , விரதம் முடிந்தவுடன் இட்லி தான் செய்து சாப்பிடுவோம். துவாதிசி அன்று இந்த சாம்பார் செய்வோம்.

Menaga Sathia said...

நன்றி தோசை!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி இமா!!

நன்றி கீதா!! தாராளமா இப்பவே வாங்க.....

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி ஜலிலாக்கா!!பரவாயில்லை உங்களுக்கு அப்படியாஅவ்து கிடைக்குது..எனக்கு எல்லாமே இங்கு தேடிப்பார்த்து தான் வாங்கனும்...

நன்றி சாரு அக்கா!! ஏகாதசி விரதம் இருப்பிங்களா..நல்லது!!

Jaleela Kamal said...

மேனக முன்பு இப்படி கிடையாது குறிப்பிட்ட காய் தா்் கிடைக்்ும்.
இப்ப பிலிப்பைனிகள் அதிம்க்ான்ால்

எல்லாம் ஏ பாக்கெட் போட்டு ்ெடியா இரு்்கும்., அவர்க்் அதை வாங்கை நொடியி்் வேலை ஆகிடும்.

ஆனால் நான் தேவைக்குதன் போய் நம்ம் தள்ளு வண்டி்ில் எ்்படி எடுப்போ ்ோ அபபடி எல்லா்்ஹ்துல்லை்ேயும் ஒன்றிரண்டு எடுபேன்.

Jaleela Kamal said...

வென்ங்கயம் கூட கட் செ்்து பாக்கெ்் இருக்கு

தெய்வசுகந்தி said...

வாவ் 21 காய் போட்டு சாம்பாரா? நல்லா இருக்குது!

01 09 10