Thursday, 11 November 2010 | By: Menaga Sathia

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு - 2/ Ennai Khatirikkai Khuzhampu - 2

விஜிசத்யாவின் குறிப்பை பார்த்து செய்தது.மிகவும் அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்:குட்டி கத்திரிக்காய் - 8
சின்ன வெங்காயம் - 15
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கசகசா - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
தனியாத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1 1/2 கப்
வெல்லம் - சிறிது
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:*கத்திரிக்காயை காம்போடு 4ஆக பிளந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் +சீரகம்+வெங்காயம் சேர்த்து வதக்கி ஆறவைத்து அதனுடன் தேங்காய்த்துறுவல்+கசகசா+தனியாத்தூள் சேத்து நைசாக அரைக்கவும்.

*அரைத்த விழுதை எடுத்து நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயில் நிரப்பவும்.மீதமுள்ள விழுதை புளிகரைசலில் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு+கறிவேப்பிலை+பூண்டு சேர்த்து தாளித்து கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.கத்திரிக்காய் வெந்து கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

*சுவையான குழம்பு ரெடி!!இட்லி,தோசை,சாதம் அனைத்திற்க்கும் சூப்பர்..

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கு.

Priya Suresh said...

Yumm, udane veetuku varalama, very tempting kuzhambu..

எல் கே said...

thanks for sharing menaga

Unknown said...

Hey,

Ennai kathrika supero super...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

நேத்து எங்க அறையில எண்ணெய் கத்திரிக்காதான்... நாந்தான் செஞ்சேன். இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. அடுத்தமுறை முயற்சிக்கிறேன்.

Kurinji said...

Fasting anniku eppadi ellam pota eppadi?

Gayathri said...

உங்க வடை கரி செஞ்சு பார்த்தேன் நல்லா வந்தது..ரொம்ப ரொம்ப நன்றி

Gayathri Kumar said...

Paarthale saapida vaa endru azhaikkindradhu. Yummy....

தினேஷ்குமார் said...

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
படிக்கும் போதே சுவைக்க தோணுது.
குழம்பு வகைகளில் நான் விரும்பி உண்வது............

நன்றி சகோ.........

Unknown said...

கலர் நல்லா வந்திருக்கு.. மேனகா

koini said...

mmmmm naakkula neer ooruthu menaka....paarthavudan naalai seythu saappidanumnu mudivu pannitten.thanks.

Priya said...

Looks yummy! நன்றி!!!

Chitra said...

mouth-watering.... yummy!

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ப்ரியா!! தராளமா எப்ப வேணும்னாலும் வரலாம் ப்ரியா..

நன்றி எல்கே!!

நன்றி ஷமினா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! ஈசியான செய்முறைதான்,செய்து பாருங்கள்...

நன்றி குறிஞ்சி!!

நன்றி காயத்ரி!! செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு..

நன்றி காயத்ரி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! எனக்கும் இந்த குழம்பு ரொம்ப விருப்பம்..

நன்றி சிநேகிதி!!

நன்றி கொயினி!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி காஞ்சனா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி சித்ரா!!

Padma said...

Paarkave supera irukku.

Mahi said...

கத்தரிக்காய் குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கு. கத்தரிக்காயை காம்போடு போட்டதில்ல இதுவரை.

Vijiskitchencreations said...

thanks thanks.

My computer have big virus attack. So I can't access time beging.
I saw your blog wow I am so happy to see u my recipe.
Really I love this ennai katharigai kuzampu. Trust me or not.Whenever I make this my hubby will like so much,
this goes with Idli, Dosa rice too.
Recently I tried in Microwave. Less oil and less time too.
Next time the same method try in microwave.

Once again thanks Menaka.

சசிகுமார் said...

அருமை.

Geetha6 said...

wav..yummy!

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்தது...சூப்பர்ப்...

Asiya Omar said...

அருமையான முறை.பார்க்க அசத்தலாக இருக்கு.ஷ் ஷ்...

Mahi said...

Menaka,Check this link for a sweet award! :)

http://mahikitchen.blogspot.com/2010/11/blog-post_12.html

Unknown said...

Kuzhambu kaarasaaramaaga ullathu!

vanathy said...

super, Menaga.

01 09 10