Tuesday 16 November 2010 | By: Menaga Sathia

ரவா கிச்சடி/ Rava(Sooji) Kichadi

தே.பொருட்கள்:

ரவை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 10
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
நசுக்கிய இஞ்சி பூண்டு - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வருத்த முந்திரி - தேவைக்கு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு

செய்முறை :
*ரவையை சிறிது நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.பீன்ஸ்+கேரட் நடுத்தர சைஸில் நறுக்கவும்.

*பாத்திரத்தில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+நசுக்கிய இஞ்சி பூண்டு+தக்காளி+மஞ்சள்தூள்+உப்பு+காய்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*காய் வேகுவதற்காக 1/2 கப் நீர் விட்டு வேகவிடவும்.இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.

*காய்கள் வெந்ததும் வறுத்த ரவையை போட்டு கிளறி கொதிக்கும் நீர் சேர்த்து கிளறவும்.இப்படி செய்வதால் ரவை கட்டி விழாமல் இருக்கும்.

*ரவை நன்கு வெந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து சட்னியுடன் பரிமாறவும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

முதல்ல வந்து இருக்கேன் நல்லா தட்டு புல்லா போடுங்க கிச்சடியை.

Kurinji said...

Looks so tempting Menaga.

Thenammai Lakshmanan said...

மினுமினுன்னு பார்க்கவே சூப்பரா இருக்குடா மேனகா.. கொஞ்சம் அனுப்பி வை..:))

ஸாதிகா said...

மேனகா எனக்கு வித விதமா ரவா கிச்சடி மிகவும் பிடிக்கும்.அவசியம் செய்து பார்க்கிறேன்

புவனேஸ்வரி ராமநாதன் said...

கலர்ஃபுலா சூப்பரா இருக்கு.

பொன் மாலை பொழுது said...

நெய் காய்ந்ததும் கடுகு பொரித்து, கடலை பருப்பு அத்துடன் சிறிது பொட்டுக்கடலையும் சேர்த்து சிவந்தவுடன் மீதமுள்ள தக்காளி ,வெங்காயம்,மிளகாய், கறிவேப்பிலையும், மற்றும் உள்ள அனைத்தையும் போடவேண்டும்.கிச்சடி தயார் ஆனவுடன் இறுதியில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை தூவி பரிமாறவேண்டும். பிரமாதமாய் இருக்கும்.

Prema said...

Arumai,unga vittuku pakkathila irunthurukalam,hmmm......

சாருஸ்ரீராஜ் said...

எனக்கு பிடித்த கிச்சடி

'பரிவை' சே.குமார் said...

கிச்சடி பாக்க நல்லாயிருக்கு... பார்சல் கிடைச்சா சாப்பிடலாம்.

Cool Lassi(e) said...

Nice breakfast choice!

Suni said...

பார்க்கவே supera இருக்கு

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Menaga Sathia said...

நன்றி சசி!!வாங்க வாங்க நிறையவே போடுகிறேன்...

நன்றி குறிஞ்சி!!

நன்றி தேனக்கா!! உங்களுக்கு இல்லாததா,தாராளமா அனுப்பி வைக்கிறேன்...

நன்றி ஸாதிகாக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சகோ!! நீங்க சொன்னமாதிரியும் செய்து பார்க்கிறேன்...

நன்றி பிரேமலாதா!! ஹா ஹா வாங்க தாராளமா வாங்க..

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! பார்சல் தானே அனுப்பி வைக்கிறேன்..

நன்றி கூல்!!

நன்றி சுனிதா!!

Akila said...

kichadi looks superb... my favorite dish...

Priya Suresh said...

Kichadiyum thenga chutneyum irruntha yennaku pothum, saapitute irrupen..

Mahi said...

கிச்சடி நல்லா இருக்கு மேனகா!

Anonymous said...

Thanks for this discriminative article, it's absolutely acclaimed blogs

Sarah Naveen said...

yummy yumm!!!

Pappu said...

kichadi pramadham. i love it:)

Unknown said...

Easy wholesome breakfast!

GEETHA ACHAL said...

சூப்பர்ப் கிச்சடி...அம்மா சூப்பராக செய்வாங்க...

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி ப்ரியா!!

நன்றி மகி!!

நன்றி அனானி!!

Menaga Sathia said...

நன்றி சாரா!!

நன்றி ஷாலினி!!

நன்றி திவ்யா!!

நன்றி கீதா!!

பித்தனின் வாக்கு said...

ஒரு சின்ன டிப்ஸ் சொல்லட்டா இந்த காய்களை மைக்ரே அவனில் தண்ணிர் விட்டு வைத்து வேக வைத்துப் பின்னர் கொதிக்கும் உப்புமா தண்ணியில் வெந்த காய்களைப் போடலாம். காய் வெந்த தண்ணிரை வடித்து சூப் பவுடர் சேர்த்து அதை கிச்சடிக்கு முன்னர் வெஜிடபுள் சூப்பாக கொடுக்காலாம். மிக்க நன்றி மேனகா.

பித்தனின் வாக்கு said...

வழக்கம் போல தப்புத்தப்பா பதிவு போடுகின்றீர்கள்,
இனிமேல் இப்படி போடவும்:--

*ரவை நன்கு வெந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து சட்னியுடன் பித்தன் சுதா அண்ணாவிற்க்கு பரிமாறவும்.

Menaga Sathia said...

ஆஹா உங்க டிப்ஸூம் சூப்பர்ர்,இனி அப்படியே செய்துடுவோம்.மிக்க நன்றி அண்ணா..

//வழக்கம் போல தப்புத்தப்பா பதிவு போடுகின்றீர்கள்,
இனிமேல் இப்படி போடவும்:--

*ரவை நன்கு வெந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து சட்னியுடன் பித்தன் சுதா அண்ணாவிற்க்கு பரிமாறவும்// ஹி ஹி முதலில் படிக்கும் பயந்துட்டேன் என்ன தப்பா எழுதினோம்னு...இனி நீங்க சொன்ன மாதிரியே எழுதிடுறேன்....

kolly2wood.blogspot.com said...

ரொம்போ நல்ல இருந்தது

01 09 10